Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

புத்தளத்தின் மூத்த மார்க்க அறிஞர் அஷ்-ஷேய்க் எம். எச். ஹனஸ் மொஹிதீன் (நளீமி) காலமானார் පුත්තලමේ ජ්‍යෙෂ්ඨ ඉස්ලාමීය විද්වත් අෂ්-ෂෙයික් එම්. එච්. හනස් මොහිදීන් (නලීමි) මවුලවිතුමන් අභාවප්‍රාප්ත වෙයි Renowned Senior Islamic Scholar Ash-Sheikh M. H. Hanas Mohideen (Naleemi) Passes Away in Puttalam


புத்தளம் மாவட்டத்தின் மூத்த இஸ்லாமிய மார்க்க அறிஞரும் கல்வியாளருமான அஷ்-ஷேய்க் எம். எச். ஹனஸ் மொஹிதீன் (நளீமி) காலமானார்.


பிரசித்திபெற்ற ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் இரண்டாம் தொகுதி மாணவரான அன்னாரின் சுட்டிலக்கம் 53 ஆகும். ஜாமிஆ நளீமிய்யாவில் 1982 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டமளிப்பு விழாவில் அஷ்-ஷேய்க் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட முன்னோடி உலமாக்களில் இவரும் ஒருவராவார்.


அதனைத் தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சவூதி அரேபியாவுக்கு உயர் கல்விக்காகச் சென்ற அவர், அங்கு தனது கலைமாணிப் பட்டத்தினைப் (BA) பூர்த்தி செய்தார்.


நளீமிய்யா மாணவர் ஒன்றியத்தின் (றாபிதா) ஆரம்பகால முதலாவது ஆலோசனைக் குழுவின் ஐந்து உறுப்பினர்களில் ஒருவராகவும் அவர் திகழ்ந்தார். அஷ்-ஷேய்க் ஏ.சி. அகார் முஹம்மத், அஷ்-ஷேய்க் எம்.ஏ.எம் மன்சூர், அஷ்-ஷேய்க் எம்.எம். ரபீக் மற்றும் அஷ்-ஷேய்க் எம்.எச். முயீனுத்தீன் ஆகிய மூத்த அறிஞர்கள் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.


அத்துடன், சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அஷ்-ஷேய்க் ஹனஸ் மொஹிதீன் அவர்கள், புத்தளம் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபை மற்றும் புத்தளம் நகர ஜம்மிய்யதுல் உலமா ஆகியவற்றின் செயலாளராக இருபது வருடங்களுக்கும் மேலாக நீண்ட காலம் நற்பணியாற்றியுள்ளார்.


அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நளீமிய்யா சமூகத்திற்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை அருள வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றோம்.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / புத்தளம், இரங்கல் செய்தி மற்றும் சமூக விவகாரங்கள்


පුත්තලම දිස්ත්‍රික්කයේ ප්‍රවීණ සහ ජ්‍යෙෂ්ඨ ඉස්ලාමීය විද්වතෙකු වූ අෂ්-ෂෙයික් එම්. එච්. හනස් මොහිදීන් (නලීමි) මවුලවිතුමන් අභාවප්‍රාප්ත වී තිබේ.


ශ්‍රී ලංකාවේ ප්‍රකට ජාමිආ නලීමියියා උසස් අධ්‍යාපන ආයතනයේ දෙවන කණ්ඩායමේ (විභාග අංක 53) ශිෂ්‍යයෙකු වූ ඒ මහතා, 1982 මැයි මස 09 වැනි දින පැවති එහි ප්‍රථම ඓතිහාසික උපාධි ප්‍රදානෝත්සවයේදී 'අෂ්-ෂෙයික්' ගෞරව නාමයෙන් පිදුම් ලැබූ පුරෝගාමී ආගමික විද්වතෙකි.


ඉන් අනතුරුව 1983 වර්ෂයේදී සෞදි අරාබිය බලා උසස් අධ්‍යාපනය සඳහා පිටත්ව ගිය ඒ මහතා, එහිදී ශාස්ත්‍රවේදී (BA) උපාධිය සාර්ථකව සම්පූර්ණ කළේය.


නලීමියියා ආදි විද්‍යාර්ථීන්ගේ සංගමයේ (රාබිතා) ප්‍රථම උපදේශක කමිටුවේ සාමාජිකයින් පස්දෙනා අතරින් එක් අයෙකු ලෙස ද හනස් මොහිදීන් මවුලවිතුමන් කටයුතු කළේය. අෂ්-ෂෙයික් ඒ.සී. අගාර් මුහම්මද්, අෂ්-ෂෙයික් එම්.ඒ.එම් මන්සූර්, අෂ්-ෂෙයික් එම්.එම්. රෆීක් සහ අෂ්-ෂෙයික් එම්.එච්. මුයීනුත්තීන් යන ප්‍රවීණ විද්වතුන් එම කමිටුවේ සෙසු සාමාජිකයින් වූහ.


එමෙන්ම සිය සමාජ මෙහෙවර වෙනුවෙන් කැපවූ අෂ්-ෂෙයික් හනස් මොහිදීන් මහතා, පුත්තලම දිස්ත්‍රික් ජම්මියතුල් උලමා සභාවේ මෙන්ම පුත්තලම නගර ජම්මියතුල් උලමා සභාවේ ද ලේකම්වරයා ලෙස වසර විස්සකට අධික දීර්ඝ කාලයක් මහඟු මෙහෙවරක් ඉටුකර ඇත.


එතුමන්ගේ අභාවයෙන් ශෝකයට පත් පවුලේ සාමාජිකයින්, ඥාතීන් ඇතුළු සැමට අපගේ බලවත් ශෝකය පළකර සිටින අතර, එතුමන්ට උසස්ම ස්වර්ග රාජ්‍යය හිමිවේවායි ප්‍රාර්ථනා කරමු.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / පුත්තලම, ශෝක ප්‍රකාශ සහ සමාජයීය තොරතුරු


Prominent senior Islamic scholar and educational pioneer from Puttalam, Ash-Sheikh M. H. Hanas Mohideen (Naleemi), has passed away.


Belonging to the second batch of the esteemed Jamiah Naleemiah higher educational institute (Index No. 53), he was among the pioneer scholars conferred with the prestigious 'Ash-Sheikh' title at its very first convocation held on May 9, 1982.


Subsequently, he proceeded to the Kingdom of Saudi Arabia in 1983 for higher studies and successfully earned his Bachelor of Arts (BA) degree.


He also served as one of the five founding members of the first advisory board of the Jamiah Naleemiah Rabitha (alumni union), along with renowned scholars Ash-Sheikh A. C. Agar Mohamed, Ash-Sheikh M. A. M. Mansoor, Ash-Sheikh M. M. Rafeek, and Ash-Sheikh M. H. Mueenuddeen.


Dedication to community leadership defined his career, as Ash-Sheikh Hanas Mohideen rendered dedicated service for more than twenty years as the General Secretary of both the All Ceylon Jamiyyathul Ulama (ACJU) Puttalam District Branch and the Puttalam Town ACJU.


We convey our deepest condolences to the bereaved family members, relatives, and academic fraternity, praying that Almighty Allah shower His mercy upon his soul and grant him Jannatul Firdaus.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Puttalam, Condolence & Community Affairs

Comments