Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

UNP நெருக்கடி : இறுதி தீர்மானத்திற்கு ஒப்புக்கொள்ளும் சஜித் - கரு, முரண்படும் ரணில் !

ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமை நெருக்கடிக்கு இறுதி தீர்வு காண கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் ஆனால் ரணில் விக்கிரமசிங்க மட்டும் அதை இழுபறி நிலைக்கு கொண்டுசென்று காலத்தை கடத்துவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

UNP தலைவராக கரு ஜயசூரியவும் , எதிர்க்கட்சித் தலைவராக மற்றும் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவையும், கட்சியின் மூத்த ஆலோசகராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க இறுதி தீர்மானமாக பெரும்பான்மையினர் முன்மொழிந்துள்ளனர்.

இந்த தீர்வுக்கு UNPயின் பெரும்பான்மையினர் ஒப்புக்கொண்டுள்ளதுடன் தலைமைத்துவத்தை கைவிட ரணில் விக்ரமசிங்க தயங்குவதுடன், அவரை தலைமைத்துவத்தை கைவிடவேண்டாம் என்று கடுமையான அழுத்தம் கொடுப்பது அகிலவிராஜ் காரியவசம் மற்றும் வஜிர அபேவர்த்தன எனும் இரண்டு எம்பிக்கள் என தெரிவிக்கப்படுகிறது.
 

முன்னதாக, 63 ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராகக் கோரி ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர். UNPயை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சிறுபான்மை கட்சிகளுக்கும் தற்போது சஜித் பிரேமதாசவுக்கு  முழு ஆதரவளிப்பதாகவும் அவருக்கு கிட்டத்தட்ட 90 எம்.பி.க்கள் ஆதரவளிக்க உள்ளனர் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இத்தகைய சூழ்நிலையில் முன்வைக்கப்பட்ட தீர்வுக்கு ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொள்ளாமல் மேலும் இழுபறி நிலையில் இருப்பது அடுத்த பொதுத்தேர்தலில் சாதக தன்மையை ராஜபக்ஷர்களுக்கு  வழங்குவதற்கான நோக்கில் என கடுமையான குற்றச்சாட்டை  சஜித் பிரிவு முன்வைத்துள்ளது.

 
கடந்த சனிக்கிழமை கரு ஜயசூரியவுடனான சந்திப்பில், ரணில் விக்ரமசிங்க தனது இறுதி நிலைப்பாட்டை வெளிப்படுத்த இரண்டு நாட்கள் அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த இரண்டு நாட்களுக்கு மேலாக இன்னும் இரண்டு நாட்கள் கழிந்துள்ள நிலையில் இதுவரை அவர் எவ்வித நிலைப்பாட்டையும் வெளியிடவில்லை.

தலைமைத்துவத்தில் இருந்து நீங்கி கட்சி மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டாலும் கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் தனது வசம் இருக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க நிபந்தனை விதித்துள்ளதாகவும் அவ்வாறு தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கினால் அவரை தலைமைத்துவத்திலிருந்து நீக்குவதற்கான முடிவு அர்த்தமற்றது, எனவும்  அது நிறைவேற்றப்படக்கூடிய ஒரு நிபந்தனை அல்ல என்பதால் ஏனைய தரப்பு இந்த நடவடிக்கைக்கு கடுமையாக ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன,sor/lnw
UNP நெருக்கடி : இறுதி தீர்மானத்திற்கு ஒப்புக்கொள்ளும் சஜித் - கரு, முரண்படும் ரணில் ! Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 22, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.