• Home
  • About Us
  • Contact Us
KR TV LANKAN VOICE

Top Ad unit 728 × 90

Lankanvoice
  • செய்திகள் [News]
  • _இலங்கை
  • _உலகம்
  • அரசியல் [Political News]
  • விளையாட்டு [Sports New]
  • கட்டுரைகள் [Articles]
  • _கவிதைகள் [Poems]
  • கல்வி [Education]
  • _தொழில்நுட்பம்
  • நேர்காணல் [Interview]

இலங்கைச் செய்திகள்

Local News
Home sri lanka புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுக்குழு இராஜதந்திரிகள் பிரதமருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுக்குழு இராஜதந்திரிகள் பிரதமருடன் சந்திப்பு

www.lankanvoice.lk மார்ச் 28, 2026 sri lanka

வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுக்குழுக்களின் தலைவர்களாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மார்ச் 26ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.


மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தர்ஷன எம். பெரேரா, ஆஸ்திரியா மற்றும் PRUN தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி டயனி மெண்டிஸ், எத்தியோப்பியா மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி என்.ஐ.டி. பரணவிதான, ஈரானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எம்.ஐ. பஸீஹா அஸ்மி, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சமன் குமார சந்திரசிறி மற்றும் பாலஸ்தீனத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எம். பாரூக் எம். பௌஸர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.



புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் தேசிய நலன்களை முன்னெடுப்பதில் அவர்களின் பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 


அத்துடன், நாட்டின் சமூக-பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதில் அவர்களின் கூட்டுப் பொறுப்பு குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.


தத்தமது நாடுகள் மற்றும் சர்வதேசத் தளங்களில் நிலையான, தொழில்முறை சார்ந்த மற்றும் மூலோபாய ரீதியான ஈடுபாடுகளின் ஊடாக, சர்வதேச ரீதியில் இலங்கையைப் பற்றிய நேர்மறையான மற்றும் நம்பகமான பிம்பத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார்.


இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் ஒத்துப் போகக்கூடிய, குறிப்பாகப் பேண்தகு நிலை, புத்தாக்கம் மற்றும் நீண்டகாலப் பெறுமதியினை அதிகரிக்கச் செய்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட துறைகளில் உயரிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிந்து, அவற்றை இலங்கைக்குக் கொண்டுவர அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு தூதுக்குழுத் தலைவர்களைப் பிரதமர் ஊக்கப்படுத்தினார்.


இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களை ஊக்குவித்தல் மற்றும் பன்முகப்படுத்துதல், புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறிதல் மற்றும் வர்த்தகத் தொடர்புகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் இச்சந்திப்பின்போது விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.


இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர், பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் நியமனம் பெற்ற தூதுக்குழுத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


பிரதமர் ஊடகப் பிரிவு


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுக்குழு இராஜதந்திரிகள் பிரதமருடன் சந்திப்பு Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 28, 2026 Rating: 5

Tags :

sri lanka
  • Tweet
  • Share
  • Share
  • Share
  • Share
www.lankanvoice.lk

About Lankanvoice Media

Number of Entries : 500+

Leading News Agency in Eastern Provience.

sri lanka

கருத்துகள் இல்லை:

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate

76th Happy Independence Day

76th Happy Independence Day

Ads

Ads

Ads

Ads
Contact us

பிரபலமான இடுகைகள்

  • மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் அர்ப்பணிப்பு மிக்க சமூகப் பணியாளர்களுக்கு கௌரவம்!!
    மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் அர்ப்பணிப்பு மிக்க சமூகப் பணியாளர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு அ...
  • ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தி
    கிறிஸ்தவப் பெருமக்கள் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும், இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த நிகழ்வை நினைவுகூருகின்ற இந்த உன்னதமான ஈ...
  • இலங்கைக்கு சீனாவிடமிருந்து எண்ணெய் கப்பல்!
      சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ஏற்றிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்த...
  • முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் விசேட சுற்றறிக்கை.
    இலங்கைவாழ் உலமாக்கள்  ஜும்மா பிரசங்கத்தின் போது நடுநிலை பேணுதல், மற்றும் நாட்டின் நலன் கருதி செயற்படல் தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள...

Recent Posts

சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் ஹஜ் யாத்திரிகர்களுக்கான மருந்து அனுமதி வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது

 சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் ஹஜ் யாத்திரிகர்களுக்கான மருந்து அனுமதி வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது ஹஜ் யாத்திரையின் போது தனிப்பட்ட பயன்...

Interested

  • இக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.
    சிரேஷ்ட சட்டத்தரணி  MIM.அஸ்வர்  எமது நாட்டின்  இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...
  • இரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை
    இரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...
  • ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை
    (பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...
  • பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.
    நடைபெற  இருக்கின்ற பாராளுமன்றத்  தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...
All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.