ரஷ்ய சுகாதார அமைச்சர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை
ரஷ்ய சுகாதார அமைச்சர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை
ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mr. Mikhail Murashko) உள்ளிட்ட தூதுக்குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுகாதாரத் துறை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இலங்கை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அத்துடன் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துடனும் இத்தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
மே 4 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றை பார்வையிடவுள்ள தூதுக்குழுவினர், இரு நாடுகளின் சுகாதார அமைச்சுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவ நிபுணர்களுக்கான பயிற்சிகள், கல்விசார் ஒத்துழைப்புகள், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சுற்றுலா சுகாதார சேவைகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படும். இத்தூதுக்குழுவினர் தமது விஜயத்தை நிறைவு செய்து மே 5 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர்.
KR TV Network
KR TV Lankan Voice
රුසියානු සෞඛ්ය අමාත්යවරයා තෙදින නිල සංචාරයක් සඳහා දිවයිනට
රුසියානු සමූහාණ්ඩුවේ සෞඛ්ය අමාත්ය මිහායිල් මුරාෂ්කෝ (Mr. Mikhail Murashko) මහතා ඇතුළු නියෝජිත පිරිසක් මැයි මස 03 වනදා තෙදින නිල සංචාරයක් සඳහා දිවයිනට පැමිණීමට නියමිතය. මෙම සංචාරයේදී රුසියාව සහ ශ්රී ලංකාව අතර සෞඛ්ය සහයෝගීතාව ශක්තිමත් කිරීම වෙනුවෙන් මෙරට සෞඛ්ය හා ජනමාධ්ය අමාත්ය වෛද්ය නලින්ද ජයතිස්ස මහතා සහ විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්ය විජිත හේරත් මහතා සමඟ විශේෂ සාකච්ඡා පැවැත්වීමට සැලසුම් කර ඇත.
රුසියානු සෞඛ්ය අමාත්යවරයා මැයි 04 වනදා කොළඹ ජාතික රෝහලේ සහ කොළඹ විශ්වවිද්යාලයේ වෛද්ය පීඨයේ නිරීක්ෂණ චාරිකාවක නිරත වීමට නියමිත අතර, දෙරටේ සෞඛ්ය අමාත්යාංශ අතර අවබෝධතා ගිවිසුම්වලට එළඹීමට ද අපේක්ෂිතය. ඖෂධ, වෛද්ය උපකරණ, විශේෂඥ පුහුණුව, අධ්යයන සහයෝගීතාව සහ ආයුර්වේද ක්ෂේත්රය ඇතුළු අංශ රැසක ප්රගතිය උදෙසා අදහස් හුවමාරු කර ගැනීමට නියමිත මෙම පිරිස මැයි මස 05 වනදා දිවයිනෙන් පිටත්ව යනු ඇත.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
Russian Health Minister on Three-Day Official Visit to Sri Lanka
Russian Minister of Health, Mr. Mikhail Murashko, along with a high-level delegation, is scheduled to arrive in Sri Lanka on May 3 for a three-day official visit. During the stay, the delegation will hold special discussions with Dr. Nalinda Jayatissa, Minister of Health and Mass Media, to strengthen health sector cooperation between the two nations. A meeting with Mr. Vijitha Herath, Minister of Foreign Affairs, Foreign Employment, and Tourism, is also planned.
The delegation is set to visit the National Hospital of Colombo and the Faculty of Medicine at the University of Colombo on May 4, where the signing of Memoranda of Understanding (MoUs) between the health ministries is anticipated. Discussions will focus on pharmaceuticals, medical equipment, specialist training, academic exchange, Ayurvedic medicine, and medical tourism. Minister Mikhail Murashko and his team will conclude their visit and depart the island on May 5.
KR TV Network
KR TV Lankan Voice
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 29, 2026
Rating:

கருத்துகள் இல்லை: