Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

போதைப்பொருளுடன் சிக்கிய 22 பிக்குகள் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்


 போதைப்பொருளுடன் சிக்கிய 22 பிக்குகள் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்


தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹேஷ் ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள் இன்று (மே 2) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு வருகை தந்த இவர்களிடமிருந்து 112 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.


இவ்விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அமிதானந்த என்ற பிக்குவே இந்த கடத்தல் நடவடிக்கையை ஒழுங்குபடுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் கம்பஹா பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதோடு, நாளை (மே 3) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


இவரது வழிகாட்டலில் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அமிதானந்த பிக்குவின் உதவியாளர் ஒருவரும் அத்துருகிரிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்த பின்னரே இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.


கே ஆர் டிவி நெட்வொர்க்

கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


මත්ද්‍රව්‍ය සමඟ අත්අඩංගුවට ගත් හිමිවරුන් 22 නමක් අද යළි අධිකරණයට


තායිලන්තයේ සිට කුෂ් සහ හෑෂ් මත්ද්‍රව්‍ය මෙරටට රැගෙන ඒමේ සිද්ධිය සම්බන්ධයෙන් අත්අඩංගුවට ගත් හිමිවරුන් 22 නම අද (මැයි 2) යළි මීගමුව මහේස්ත්‍රාත් අධිකරණයට ඉදිරිපත් කිරීමට නියමිතය. පසුගිය අප්‍රේල් 25 වන දින කටුනායක ගුවන් තොටුපළෙන් මෙරටට පැමිණි මොවුන් සතුව තිබී මත්ද්‍රව්‍ය කිලෝග්‍රෑම් 112ක් සොයාගනු ලැබීය.


සිදුකළ පරීක්ෂණවලදී අනාවරණය වී ඇත්තේ අමිතානන්ද නැමැති හිමිනමක විසින් මෙම ජාවාරම මෙහෙයවා ඇති බවයි. ගම්පහ ප්‍රදේශයේ විහාරස්ථානයක සැඟව සිටියදී අත්අඩංගුවට ගත් එම හිමිනම හෙට (මැයි 3) අධිකරණයට ඉදිරිපත් කිරීමට නියමිතය.


මීට පෙර අවස්ථාවලදී ද උන්වහන්සේගේ මඟපෙන්වීම යටතේ මත්ද්‍රව්‍ය මෙරටට රැගෙන විත් ඇති බව අනාවරණය වී තිබේ. මෙම සිද්ධියට අදාළව එම හිමිනමගේ සහායකයෙකු ද අතුරුගිරිය ප්‍රදේශයේදී පොලිස් අත්අඩංගුවට ගෙන ඇත. සැකකරුවන් දින 7ක් රඳවා තබාගෙන ප්‍රශ්න කිරීමෙන් අනතුරුව පොලිස් මත්ද්‍රව්‍ය නාශක කාර්යාංශය අද මෙලෙස අධිකරණයට ඉදිරිපත් කිරීමට පියවර ගෙන තිබේ.


කේ ආර් ටීවී නෙට්වර්ක්

කේ ආර් ටීවී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


22 Monks arrested with narcotics to be produced in court today


Twenty-two monks arrested for smuggling Kush and Hashish from Thailand into the country are to be produced before the Negombo Magistrate's Court again today (May 2). These individuals were apprehended at the Katunayake International Airport on April 25 with 112 kilograms of narcotics in their possession.


Investigations have revealed that a monk named Amitananda organized the illegal operation. He was arrested while hiding in a temple in Gampaha and is scheduled to appear in court tomorrow (May 3).


It has also been discovered that narcotics had been smuggled into the country under his guidance on previous occasions. One of his associates was also arrested in Athurugiriya. The Police Narcotics Bureau is producing the suspects in court today after interrogating them under a seven-day detention order.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

போதைப்பொருளுடன் சிக்கிய 22 பிக்குகள் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர் Reviewed by KR TV LANKAN VOICE on மே 02, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.