உழ்ஹிய்யா கடமைகள் தடையின்றி நிறைவேற்றப்படும் எனப் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவிப்பு
உழ்ஹிய்யா கடமைகள் தடையின்றி நிறைவேற்றப்படும் எனப் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவிப்பு
வெசாக் வாரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹஜ் பெருநாள் காலத்தில் உழ்ஹிய்யா (குர்பான்) கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படுமா என்பது குறித்துப் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் விளக்கமளித்துள்ளார். உயர்பீட பௌத்த தேரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மே மாதம் 30 ஆம் திகதிக்கு வெசாக் போயா தினம் பிற்போடப்பட்டுள்ளதாகவும், மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூன் 02 ஆம் திகதி வரை வெசாக் வாரமாகப் பொது நிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தைச் சிலர் அரசியலாக்கி வதந்திகளைப் பரப்புவதாகவும், கடந்த முறையும் பொசான் வாரத்தின் போதே ஹஜ் பெருநாள் அமைந்திருந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் அதனைச் சிறப்பாகக் கையாண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உழ்ஹிய்யா என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு இபாதத் (வணக்கம்) என்பதால், அதில் அரசாங்கம் எவ்விதப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தாது எனவும், ஏனைய சமூகங்களின் உணர்வுகளை மதித்து இம்முறையும் இக்கடமை கவனமாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
மதுபான சாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் போயா தினங்களில் மாத்திரமே மூடப்படுவது வழமை என்றும், இது தொடர்பான உத்தியோகபூர்வ சுற்றுநிரூபம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இனவாதத்தைத் தூண்டும் வகையில் வதந்திகளைப் பரப்புவோர் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும், அரசாங்கம் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் என்றும் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கே ஆர் டிவி நெட்வொர்க்
கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
උල්හියියා (කුර්බාන්) කටයුතු බාධාවකින් තොරව සිදු කෙරේ - නියෝජ්ය අමාත්ය මුනීර් මුලෆ්ෆර් පවසයි
වෙසක් සතිය ප්රකාශයට පත් කර ඇති පසුබිමක, හජ් උත්සව සමයේ උල්හියියා කටයුතු සිදු කිරීමේදී ගැටලුවක් මතු වේද යන්න පිළිබඳව නියෝජ්ය අමාත්ය මුනීර් මුලෆ්ෆර් මහතා පැහැදිලි කිරීමක් කර ඇත. බෞද්ධ නායකයින්ගේ ඉල්ලීම පරිදි මැයි මස 30 වැනිදාට වෙසක් පෝය දිනය කල් දමා ඇති අතර, මැයි 27 සිට ජුනි 02 දක්වා වෙසක් සතිය ලෙස රාජ්ය පරිපාලන අමාත්යාංශය මගින් ප්රකාශයට පත් කර ඇති බව ඔහු සඳහන් කළේය.
සමහරුන් මෙම කරුණ දේශපාලනීකරණය කරමින් කටකතා පතුරුවන බවත්, පසුගිය වසරේ ද හජ් උත්සවය පොසොන් සතියට සමගාමීව පැමිණි විට වත්මන් රජය එය සාර්ථකව කළමනාකරණය කළ බවත් ඔහු පෙන්වා දුන්නේය. උල්හියියා යනු මුස්ලිම් ප්රජාවගේ ආගමික වතාවතක් බැවින් රජය ඊට කිසිදු බාධාවක් සිදු නොකරන බවත්, අනෙකුත් ප්රජාවන්ගේ හැඟීම්වලට ගරු කරමින් මෙවරත් එම කටයුතු ප්රවේශමෙන් සිදු කරන බවත් ඔහු සහතික විය.
මත්පැන් අලෙවිසැල් සහ මස් කඩ පෝය දිනවල පමණක් වසා තැබීම සිරිතක් බවත්, මේ සම්බන්ධ නිල චක්රලේඛය ලබන සතියේ නිකුත් කිරීමට නියමිත බවත් ඔහු ප්රකාශ කළේය. ජාතිවාදය ඇවිස්සීමේ අරමුණින් කටකතා පතුරුවන පිරිස් පිළිබඳව ජනතාව විමසිලිමත් විය යුතු බවත්, රජය අවශ්ය වැඩපිළිවෙළ ක්රියාත්මක කරනු ඇති බවත් නියෝජ්ය අමාත්යවරයා වැඩිදුරටත් පැවසීය.
කේ ආර් ටීවී නෙට්වර්ක්
කේ ආර් ටීවී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Uldhiyya Duties Will Proceed Without Hindrance - Deputy Minister Muneer Mulaffar
Deputy Minister Muneer Mulaffar has clarified whether any issues would arise regarding Uldhiyya (Qurbani) during the Hajj season, given the declaration of Vesak Week. He noted that following the request of leading Buddhist monks, the Vesak Poya day has been postponed to May 30th, and the Ministry of Public Administration has declared the period from May 27th to June 2nd as Vesak Week.
He pointed out that some individuals are attempting to politicize this issue by spreading rumors, despite the current government successfully managing the Hajj season last year when it coincided with Poson Week. As Uldhiyya is a religious obligation (Ibadah) of the Muslim community, the Deputy Minister assured that the government has no intention of creating issues and will ensure the duties are carried out carefully, respecting the sentiments of other communities.
He further clarified that it is customary for liquor shops and meat stalls to be closed only on Poya days, and an official circular regarding this will be issued next week. Deputy Minister Muneer Mulaffar urged the public to be cautious of those spreading rumors to incite racism and expressed confidence that the government will implement all necessary plans to maintain harmony.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 04, 2026
Rating:

கருத்துகள் இல்லை: