உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தெளிவூட்டல்
உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தெளிவூட்டல்
இவ்வருட ஹஜ்ஜுப் பெருநாள் காலத்தில் உழ்ஹிய்யா (குர்பானி) கிரியையை நிறைவேற்றுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) முஸ்லிம் சமூகத்திற்கு விசேட தெளிவூட்டல் ஒன்றை வழங்கியுள்ளது. பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில், ஏனைய சமூகங்களுடன் இணைந்து கௌரவமாகவும் அறிவுபூர்வமாகவும் வாழும் முஸ்லிம் சமூகம், தொடர்ந்தும் அதனைப் பேணி நடந்து கொள்ள வேண்டும் என உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதில் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். ரிழா மற்றும் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:
* சட்ட ரீதியான நிலைப்பாடு:1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின்படி, மிருகங்களை அறுத்தல் மற்றும் மாமிச விற்பனை தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை வரும் பௌர்ணமி போயா தினத்திற்கு மட்டுமே பொருந்தும்.
* உழ்ஹிய்யா நிறைவேற்றல்: குறித்த போயா தினத்திற்கு முன்போ அல்லது பின்போ உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றுவதற்கு சட்ட ரீதியான தடைகள் எதுவும் இல்லை. எனினும், கலாசார ரீதியாக வெசாக் காலம் போயா நாளுடன் விரிவுபடுத்தப்படலாம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
* அதிகாரிகளுடனான கலந்துரையாடல்: ஹஜ்ஜுப் பெருநாள் சமயக் கிரியைகள் தொடர்பாக உலமா சபை கடந்த 23.04.2026 அன்று ஜனாதிபதி மற்றும் விடயப்பரப்பிற்கு பொறுப்பான அமைச்சர்களுடன் முறையாகத் தொடர்பு கொண்டுள்ளது.
* அரசின் தெளிவூட்டல்: போயா நாள் தவிர்ந்த ஏனைய நாட்களில் உழ்ஹிய்யாக் கடமையைச் செய்ய எவ்வித தடையும் இல்லை என சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கடந்த 26.04.2026 அன்று தெளிவுபடுத்தியுள்ளார்.
* சகவாழ்வு: அனைத்து சமூகங்களின் மத உரிமைகளும் மதிக்கப்படும் அதேவேளை, தேசிய ஒற்றுமை மற்றும் அமைதியான சகவாழ்வு முக்கியம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் போயா தினங்கள் வரும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து சுமுகமான ஏற்பாடுகளை உலமா சபை மேற்கொண்டு வருவதாகவும், இம்முறையும் அதற்கான முயற்சிகள் தொடர்வதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
උළ්හියියා වතාවත් ඉටු කිරීම සම්බන්ධයෙන් සමස්ත ලංකා ජම්ඉයියතුල් උලමා සභාවේ පැහැදිලි කිරීම
මෙවර හජ් උත්සව සමයේ උළ්හියියා (කුර්බානි) වතාවත් ඉටු කිරීම සම්බන්ධයෙන් සමස්ත ලංකා ජම්ඉයියතුල් උලමා සභාව (ACJU) මුස්ලිම් ප්රජාව දැනුවත් කරමින් නිවේදනයක් නිකුත් කර ඇත. බහුආගමික රටක් වන ශ්රී ලංකාවේ අනෙකුත් ප්රජාවන් සමඟ සහජීවනයෙන් සහ ගෞරවාන්විතව ජීවත් වන මුස්ලිම් ප්රජාව, එම ගෞරවය ආරක්ෂා වන පරිදි කටයුතු කළ යුතු බව උලමා සභාව අවධාරණය කරයි.
සමස්ත ලංකා ජම්ඉයියතුල් උලමා සභාවේ වැඩබලන සභාපති අෂ්ෂෙයික් ඒ.එල්.එම්. රිසා සහ මහලේකම් අෂ්ෂෙයික් එම්. අර්කම් නූරාමිත් යන මහත්වරුන්ගේ අත්සනින් යුතුව නිකුත් කළ නිවේදනයේ මෙසේ සඳහන් වේ:
* නීතිමය තත්ත්වය: 1971 අංක 29 දරන නිවාඩු පනතට අනුව සතුන් මැරීම සහ මස් අලෙවිය සම්බන්ධ සීමා කිරීම් අදාළ වන්නේ මැයි මස 30 වන සෙනසුරාදාට යෙදෙන පසළොස්වක පෝය දිනයට පමණි.
* වතාවත් ඉටු කිරීම: එම පෝය දිනට පෙර හෝ පසුව උළ්හියියා වතාවත් ඉටු කිරීමට නීතිමය බාධාවක් නොමැති වුවද, සංස්කෘතිකමය වශයෙන් වෙසක් කාලය පෝය දිනය සමඟ දීර්ඝ විය හැකි බව පෙන්වා දී ඇත.
* බලධාරීන් දැනුවත් කිරීම: හජ් වතාවත් සම්බන්ධයෙන් උලමා සභාව විසින් 2026.04.23 දින ලිඛිතව ජනාධිපතිවරයා සහ විෂය භාර අමාත්යවරුන් දැනුවත් කර ඇත.
* රජයේ පැහැදිලි කිරීම: පෝය දිනය හැර අනෙකුත් දිනවල උළ්හියියා වතාවත් ඉටු කිරීමට බාධාවක් නොමැති බව ආගමික හා සංස්කෘතික කටයුතු නියෝජ්ය අමාත්යවරයා 2026.04.26 දින තහවුරු කර ඇත.
* සහජීවනය: සෑම ආගමික අයිතිවාසිකමකටම ගරු කරන අතරම, ජාතික සමගිය සහ සාමකාමී සහජීවනය වැදගත් බව බලධාරීන් අවධාරණය කර තිබේ.
මෙම කටයුතු සුමටව පවත්වාගෙන යාම සඳහා උලමා සභාව අදාළ බලධාරීන් සමඟ නිරන්තර සම්බන්ධතාවයෙන් පසුවන බවද එම නිවේදනයේ වැඩිදුරටත් සඳහන් වේ.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
ACJU Clarifies Guidelines for Uldhiya (Qurbani) During Hajj Season
The All Ceylon Jamiyyathul Ulama (ACJU) has issued a clarification to the Muslim community regarding the performance of Uldhiya (Qurbani) during this year's Hajj season. Living in a multi-ethnic country, the ACJU urges the Muslim community to continue their tradition of peaceful co-existence and mutual respect with other communities.
The statement, jointly issued by ACJU Acting President Ash-Sheikh A.L.M. Riza and General Secretary Ash-Sheikh M. Arkam Nooramith, highlights the following points:
* Legal Framework: According to the Holidays Act No. 29 of 1971, restrictions on animal slaughter and meat sales specifically apply to the Poya Day falling on Saturday, May 30th.
* Performance of Uldhiya: There is no legal bar to performing Uldhiya before or after the said Poya Day. However, the ACJU noted that culturally, the Vesak period may extend around the Poya Day.
* Government Communication: The ACJU formally communicated with the President and relevant Ministers on 23.04.2026 regarding Hajj religious practices.
* Official Confirmation: On 26.04.2026, the Deputy Minister of Religious and Cultural Affairs clarified that there are no restrictions on performing Uldhiya on days other than the Poya Day.
* Co-existence: Authorities emphasized that while religious rights are respected, national unity and peaceful co-existence remain paramount.
The ACJU reaffirmed its commitment to working with relevant authorities to ensure the smooth conduct of religious rituals.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 05, 2026
Rating:

கருத்துகள் இல்லை: