பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டம் தீவிரம் என்ற நிலைக்கு உயர்வு
பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டம் தீவிரம் என்ற நிலைக்கு உயர்வு
பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டமானது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக எச்சரிக்கை நிலையில் இருந்து தீவிரம் என்ற நிலைக்கு நேற்று (30) உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரண்டு யூத இனத்தவர்கள் குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் தீவிர வலதுசாரி அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் எனப் பாதுகாப்பு அமைச்சர் டேன் ஜார்விஸ் தெரிவித்துள்ளார். தீவிரம் என்ற அச்சுறுத்தல் மட்டமானது, அடுத்த ஆறு மாதங்களுக்குள் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதை உணர்த்துகின்றது. தற்போது வழிபாட்டு இடங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச செய்தி
கே ஆர் டி வி நெட்வொர்க் / கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
බ්රිතාන්යයේ ත්රස්තවාදී තර්ජන මට්ටම දැඩි මට්ටම දක්වා ඉහළ දමයි
වසර හතරකට පසු ප්රථම වතාවට බ්රිතාන්යයේ ත්රස්තවාදී තර්ජන මට්ටම දැඩි මට්ටම දක්වා ඊයේ (30) ඉහළ දමා තිබේ. පසුගිය බදාදා උතුරු ලන්ඩනයේ ගෝල්ඩර්ස් ග්රීන් ප්රදේශයේදී යුදෙව් ජාතිකයන් දෙදෙනෙකු පිහියෙන් ඇන ඝාතනය කිරීමත් සමඟ මෙම පියවර ගෙන ඇත. ඉස්ලාමීය අන්තවාදය සහ අන්ත දක්ෂිණාංශික තර්ජන ඉහළ යාම මෙයට හේතුව බව ආරක්ෂක අමාත්ය ඩෑන් ජාවිස් පවසයි. දැඩි තර්ජන මට්ටම යනු ඉදිරි මාස හය ඇතුළත ත්රස්තවාදී ප්රහාරයක් එල්ල වීමේ ඉහළ සම්භාවිතාවක් පවතින බවයි. ඒ අනුව පූජනීය ස්ථාන ඇතුළු වැදගත් ස්ථානවල ආරක්ෂාව තර කර ඇත.
ජාත්යන්තර පුවත්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
UK raises terror threat level to Severe
The UK's terror threat level has been raised from Substantial to Severe as of yesterday (30), for the first time in four years. This decision follows the fatal stabbing of two Jewish individuals in North London's Golders Green last Wednesday. Security Minister Dan Jarvis stated that the increase reflects a rise in threats from Islamist extremism and the extreme right-wing. A 'Severe' threat level indicates that a terrorist attack is highly likely within the next six months. Consequently, security has been bolstered at key locations, including places of worship.
International News
KR TV Network / KR TV Lankan Voice
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 01, 2026
Rating:

கருத்துகள் இல்லை: