Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கையின் பல பகுதிகளில் இன்று பிற்பகலுக்குப் பின்னர் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு.


 இலங்கையின் பல பகுதிகளில் இன்று பிற்பகலுக்குப் பின்னர் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு.


கொழும்பு, காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு 50 மி.மீ வரை மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


தெற்கு மாகாணத்திலும் களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். மேலும், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் மற்றும் தற்காலிகப் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


கே ஆர் டிவி நெட்வொர்க்

கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்

வானிலைச் செய்தி


ශ්‍රී ලංකාවේ ප්‍රදේශ කිහිපයකට අද පස්වරුවේ තද වැසි සහ ගිගුරුම් සහිත වැසි

බස්නාහිර, සබරගමුව, මධ්‍යම, වයඹ, උතුරු මැද සහ නැගෙනහිර පළාත්වලත් බදුල්ල, ගාල්ල සහ මාතර දිස්ත්‍රික්කවලත් අද පස්වරු 2.00න් පසු තැනින් තැන වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැකි බව කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව පවසයි. සබරගමුව පළාතෙත් කොළඹ, කළුතර, ගාල්ල සහ මාතර දිස්ත්‍රික්කවලත් ඇතැම් ස්ථානවලට මිලිමීටර් 50කට වැඩි තද වැසි ඇති විය හැක.


දකුණු පළාතේත් කළුතර සහ කොළඹ දිස්ත්‍රික්කවල වෙරළබඩ ප්‍රදේශවලත් උදෑසන කාලයේදී වැසි ඇති විය හැක. මධ්‍යම, සබරගමුව, ඌව සහ අම්පාර දිස්ත්‍රික්කවල ඇතැම් ස්ථානවල උදෑසන කාලයේදී මිදුම් සහිත තත්ත්වයක් පවතී. ගිගුරුම් සහිත වැසි සමඟ ඇති විය හැකි අකුණු සහ තාවකාලික තද සුළං මගින් සිදුවන අනතුරු අවම කර ගැනීමට පියවර ගන්නා ලෙස ජනතාවගෙන් ඉල්ලා සිටී.


කේ ආර් ටීවී නෙට්වර්ක්

කේ ආර් ටීවී ලංකන් වොයිස්

කාලගුණ පුවත්


Heavy Rain and Thunder Expected in Parts of Sri Lanka Today


Rain or thundershowers are expected in Western, Sabaragamuwa, Central, North-Western, North-Central, and Eastern provinces, as well as Badulla, Galle, and Matara districts, after 2:00 PM today, according to the Department of Meteorology. Heavy rainfall exceeding 50mm is possible in some areas of the Sabaragamuwa province and the Colombo, Kalutara, Galle, and Matara districts.


Morning rains may occur along the coastal belts of Kalutara and Colombo districts, and the Southern Province. Misty conditions are expected in certain areas of the Central, Sabaragamuwa, Uva, and Ampara districts during the early morning. The public is advised to take precautions against lightning and strong winds associated with thundershowers.


KR TV Network

KR TV Lankan Voice

Weather Report

இலங்கையின் பல பகுதிகளில் இன்று பிற்பகலுக்குப் பின்னர் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு. Reviewed by KR TV LANKAN VOICE on மே 03, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.