நாட்டில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
நாட்டில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (04.05.2026) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கே ஆர் டிவி நெட்வொர்க்
கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
දිවයිනේ ප්රදේශ කිහිපයකට සවස් කාලයේදී ගිගුරුම් සහිත වැසි
බස්නාහිර, සබරගමුව, මධ්යම, වයඹ සහ නැගෙනහිර පළාත්වලත් පොළොන්නරුව, ගාල්ල සහ මාතර දිස්ත්රික්කවලත් අද (2026.05.04) පස්වරු 2.00 න් පමණ පසුව වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැකි බව කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව පවසයි. බස්නාහිර සහ සබරගමුව පළාත්වලත් ගාල්ල සහ මාතර දිස්ත්රික්කවලත් ඇතැම් ස්ථානවලට මි.මී. 50 ට වැඩි තරමක තද වැසි ඇති විය හැක.
බස්නාහිර පළාතේත් ගාල්ල සහ මාතර දිස්ත්රික්කවලත් වෙරළබඩ ප්රදේශවල උදෑසන කාලයේදී ද වැසි ඇති විය හැකියි. උතුරු සහ උතුරු-මැද පළාත්වලත් හම්බන්තොට දිස්ත්රික්කයේත් විටින් විට පැයට කිලෝමීටර් 30-40 ක පමණ වේගයකින් තරමක තද සුළං ඇති විය හැකි බව වාර්තා වේ. ගිගුරුම් සහිත වැසි ඇති වන විට තාවකාලික තද සුළං සහ අකුණු මඟින් සිදුවන අනතුරු අවම කර ගැනීමට අවශ්ය පියවර ගන්නා ලෙස මහජනතාවගෙන් කාරුණිකව ඉල්ලා සිටිනු ලැබේ.
කේ ආර් ටීවී නෙට්වර්ක්
කේ ආර් ටීවී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Thundershowers Expected in Several Parts of the Country During the Afternoon
The Department of Meteorology has predicted that rain or thundershowers may occur in the Western, Sabaragamuwa, Central, North-Western, and Eastern provinces, as well as in the Polonnaruwa, Galle, and Matara districts today (May 4, 2026) after 2:00 pm. Fairly heavy rainfall above 50 mm is expected in some places within the Western and Sabaragamuwa provinces and the Galle and Matara districts.
Additionally, coastal areas of the Western province, Galle, and Matara districts may experience morning showers. Fairly strong winds of 30-40 kmph are expected at times in the Northern, North-Central provinces, and the Hambantota district. The public is advised to take necessary precautions to minimize damages caused by temporary strong winds and lightning during thundershowers.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 04, 2026
Rating:

கருத்துகள் இல்லை: