Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்தில் இறுதியாக சிகிச்சை பெற்று வந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக. கொழும்பு IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்

காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பைச் சேர்ந்த பெண் (வயது 62) Covid 19 positive  Patient என்பதனால் அவர் இன்று மாலை (19.05.2020 செவ்வாய்) மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு IDH வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்தில் (வைத்தியசாலையில்) இது காலவரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த 62 பேரில் 61 பேர்
(ஆண்,பெண்,சிறுவர்கள் உப்பட) அனைவரும் தங்கள் வீடுகளுக்கு  ஏற்கனவே அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர்.

மேலும் இறுதியாக சிகிச்சை பெற்று வந்த கொழும்பைச் சேர்ந்த இப்பெண் மேலதிக சிகிச்சைக்காக கொமும்பிற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி சிகிச்சை நிலையத்தின் பாதுகாப்பு கடமைக்காக அமர்த்தப்பட்டிருந்த ஒரு சில படையினர், பொலிசார் குறைக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை நிலையத்திற்கு அருகிலுள்ள இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்தில் இறுதியாக சிகிச்சை பெற்று வந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக. கொழும்பு IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். Reviewed by www.lankanvoice.lk on மே 19, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.