Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மாளிகாவத்தை சம்பவம் - கைது செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு

மாளிகாவத்தை பிரதேசத்தில் 03 பெண்கள் உயிரிழந்த சம்பவம்  தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 நபர்களையும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் மவத்தையில் ஒரு கட்டிடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிதி நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக பெண்கள் மூவர் உயிரிழந்ததுடன் சிலர் காயமடைந்தனர்.

பொலிஸ்  அல்லது அரசாங்கத்தின் எவ்வித அனுமதியுமின்றி தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி இதனை ஒழுங்குபடுத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. 

இதற்கமைய  இதனை  ஒழுங்குபடுத்திய 07 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த 07 பேரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 04ம் திகதி வரையில் விளக்கமறியளில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் (22) உத்தரவு பிறப்பித்தது.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, ரிமாண்ட் செய்யப்படும் சந்தேக நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். 

இதற்கமைய குறித்த 07 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்படவுள்ளனர்.lnw

மாளிகாவத்தை சம்பவம் - கைது செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு Reviewed by www.lankanvoice.lk on மே 23, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.