Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தேர்தல் ஆணைக்குழு பொறுப்புடன் செயற்பட வேண்டும் – மஹிந்த அணி


"நாட்டுக்கு எதிரான சக்திகளின் தேவையை நிறைவேற்றும் வகையில் தனது அதிகாரத்தை தேர்தல் ஆணைக்குழு பயன்படுத்தக்கூடாது. என்றாவது ஒருநாள் பொறுப்புகூறவேண்டிய நிலைஏற்படும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க கூறியவை வருமாறு,

"கடந்த 22 நாட்களில் சமூகத்தில் இருந்து ‘கொவிட் -19’ வைரஸ் பரவிய ஒரு நபரேனும் அடையாளம் காணப்படவில்லை. நிலைமை இப்படி இருக்கையில் தேர்தலை மேலும் 3 மாதங்கள்வரை ஒத்திவைப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தால் அது எதிரணிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதாகவே அமையும்.
தேர்தலை நடத்த வேண்டாம் என ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கருத்துகளை வெளியிட்டுவருகின்றன. இதற்காக நீதிமன்றத்தையும் அக்கட்சி உறுப்பினர்கள் நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பொறுப்பை உரிய வகையில் நிறைவேற்றியுள்ளார். அதுபோல நாட்டுக்காக தனது கடமையை தேர்தல் ஆணைக்குழு நிறைவேற்ற வேண்டிய காலகட்டம் தற்போது வந்துவிட்டது.
எனவே, வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நாட்டுக்கு எதிரான சக்திகளின் தேவையின் பிரகாரம் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டாம் எனவும் அத்தகைய சக்திகளுக்கு அடிபணியக்கூடாது எனவும் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கின்றோம். 

ஏனெனில் நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு என்றாவது ஒரு நாள் தேர்தல் ஆணைக்குழு பொறுப்புகூற வேண்டிவரும்.
தேர்தல் ஆணைக்குழு தன்னிச்சையாக செயற்படக்கூடாது. நாட்டுக்காக தனது கடமையை அவ்வாணைக்குழு நிறைவேற்றவில்லை என்பதே பொதுவான கருத்தாகும்.

அதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுலை அரசசார்பற்ற அமைப்புகளே வழிநடத்துகின்றன. அவர் நாட்டுக்கு தீங்கு விளைக்கின்றார். எனவே, பேராசிரியர் ஹுலை முன்னிலைப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்காது என நம்புகின்றோம்.” – என்றார்.sor.mk

தேர்தல் ஆணைக்குழு பொறுப்புடன் செயற்பட வேண்டும் – மஹிந்த அணி Reviewed by www.lankanvoice.lk on மே 23, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.