இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டினில் காத்தான்குடியில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கி வைப்பு.
ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்
இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் Football Federation of SriLanka (FFSL) அனுசரணையுடன் காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கம் Kattankudy Football Leaque (KFL) இனால் Covid 19 தொற்று அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் கழக வீரர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு (19/05/2020 செவ்வாய்) காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் விளையாட்டு அதிகாரி MMM.ஜெலீல்.S0 தலைமையில் இடம் பெற்றன.
இதன்போது காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 22 கழகங்களுக்கு மேற்படி உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வில் காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர்
MMM.ஜெலீல் S0,
செயலாளர் A.இன்சாட் அஹமட்.S0 மற்றும் கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருலாளர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஏற்பாட்டினை மிகவும் சிறப்பாக மேற்கொண்ட இலங்கை கால்பந்தாட்ட சங்கம் மற்றும் காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்திற்கும் கழக வீரர்கள் தங்களது நன்றிகளையும், பாராட்டுக்களையும் இதன் போது தெரிவித்துக் தெரிவித்துக் கொண்டனர்.
காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கின் (KFL) ஸ்தாபகராகவும் அதன் ஆயுள்கால தலைவராகவும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லா இருந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டினில் காத்தான்குடியில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கி வைப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
மே 20, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மே 20, 2020
Rating:








கருத்துகள் இல்லை: