Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அறிஞர் கலாநிதி MAM. ஷுக்ரி அவர்களுக்கான காத்தான்குடி நகரசபையின் அனுதாபச் செய்தி


19.05.2020 அன்று காலமான 
அறிஞர் கலாநிதி MAM. ஷுக்ரி அவர்களுக்கான காத்தான்குடி நகரசபையின் அனுதாபச் செய்தி.
 
பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி MAM. ஷுக்ரி அவர்களுடைய மரணச்செய்தி எங்களை மிகுந்த கவலையில் ஆழ்த்துகிறது. 

அவர் இலங்கை முஸ்லிம்களின் அடையாளத்தை தாங்கிநின்ற தன்னிகரில்லாத ஒரு சொத்து. ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் நிரப்ப முடியாத பேரிழப்பாக இது இருக்கப்போகிறது. 
முஸ்லீம் சமூகத்தை ஒரு அறிவுச்சமூகமாக மாற்றியமைக்கும் வரலாற்றுப்பணிக்காக அவர் தனது முழு வாழ்நாளையும் அர்ப்பணித்திருக்கிறார்.

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்திற்கூடாக தன்னுடைய மாணவர் பரம்பரையை நேரிய சிந்தனையும் அறிவாளுமை மிக்கவர்களாகவும் உருவாக்குவதில் அவருடைய பங்களிப்பு மகத்தானது. அதன் விளைவுகளை நாட்டின் சகல ஊர்களிலும் இன்று காணமுடிகிறது. தமது ஊரான காத்தான்குடியும் அவருடைய மாணவர்களால் நிறைய பிரயோசனங்களை பெற்றிருக்கிறது. 

அந்த வகையில் மிக அமைதியாக ஒரு தேசிய புரட்சியை செய்துமுடித்திருக்கிறார் Dr. MAM ஷுக்ரி அவர்கள் என்றும் கூறமுடியும். 

தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் அறியப்பட்ட ஒரு அறிவாளுமையாக அவர்கள் செயற்பட்டிருக்கிறார்கள். அவர்கள் விட்டுச்செல்லும் அறிவுப்பணியை அவர்களுடைய மாணவர்கள் மாத்திரமல்ல முழு முஸ்லிம் சமூகமும் பொறுப்போடு நிறைவேற்ற உறுதிபூணவேண்டும். 

அல்லாஹ் அவருடைய தூய எண்ணங்களை அங்கீகரித்து அவருடைய சேவைகளை பொருந்திக்கொள்வானாக! அல்லாஹ் அவருடைய பிழைகள் தவறுகளை மன்னித்து உயர்தரமான ஜன்னத்துல் பிர்தௌஸில் நுழையச்செய்வானாக! 

அவர்களுடைய குடும்பத்தவர்கள், நண்பர்கள், மாணவர்கள் எல்லோருக்கும் சிறந்த பொறுமையையும் ஆறுதலையும் வழங்குவானாக! 

SHM அஸ்பர் JP UM
நகர முதல்வர்
நகரசபை 
காத்தான்குடி.
அறிஞர் கலாநிதி MAM. ஷுக்ரி அவர்களுக்கான காத்தான்குடி நகரசபையின் அனுதாபச் செய்தி Reviewed by www.lankanvoice.lk on மே 20, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.