Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொழும்பு, காலி துறைமுகங்களை சர்வதேச கப்பற் பணிக்குழு பரிமாற்ற மையமாக மாற்ற திட்டம் ஜனாதிபதி தெரிவிப்பு


கொழும்பு, காலி துறைமுகங்களை சர்வதேச கப்பற் பணிக்குழு பரிமாற்ற மையமாக மாற்ற திட்டம்.

கொவிட் 19 நோய்த்தொற்றுடன் உலகின் முன்னணி நாடுகள் பலவற்றின் கப்பற்துறை கம்பனிகளில் ஏற்பட்டுள்ள ஊழியர் வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பக்கூடிய வாய்ப்பு குறித்து நான் கவனம் செலுத்தியுள்ளேன்.


தெற்கு கடல் மார்க்கமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் பயணம்செய்யும் உலக நாடுகளின் கப்பல்களில் சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு காலி துறைமுகத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச்செல்லவுமான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டது.
நாட்டின் முக்கிய கப்பற்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நான் இந்த விடயங்கள் குறித்து கருத்துக்களை பரிமாரிக்கொண்டேன்.


காலி துறைமுகத்திற்கு 10 கடல் மைல் தூரத்தில் உள்ள கடற்பரப்பில் 300க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் தினமும் பயணிப்பதாக கம்பனிகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அக்கப்பல்களில் சேவையில் ஈடுபட்டுள்ள ஏனைய நாடுகளின் பணிக்குழாமினருக்கும் இலங்கையிலிருந்து தமது நாடுகளுக்கு பயணம் செய்யும் வசதிகளை செய்துகொடுப்பதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியை சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஸ்ரீலங்கன் விமானச் சேவையை மேம்படுத்தவும் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என நான் தெரிவித்தேன்.

காலி துறைமுகத்தை 'சர்வதேச கப்பல் பணிக்குழாம் பரிமாற்ற மையமாக' அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. சுகாதார சட்டதிட்டங்களுக்கு அமைய இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய வாய்ப்பு குறித்து ஆராயுமாறு நான் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தேன்.


உலகின் கப்பல் துறை தொழில்களில் 16லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 16000 இலங்கையர்களும் உள்ளடங்குவர். இந்த எண்ணிக்கை ஒரு வீதமாகும். இவர்கள் வருடமொன்றுக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு ஈட்டித்தருகின்றனர். இத்தொகையை இரு மடங்காக அதிகரிப்பதன் மூலம் அந்நியச் செலாவணி வருமானத்தை இருமடங்காக அதிகரிக்க முடியும் என்றும் நான் குறிப்பிட்டேன்.

தரமான உயர் நியமங்களுடன் கூடிய சேவையை வழங்கக் கூடிய வாய்ப்பு குறித்த நம்பிக்கையை உலக கப்பல் கம்பனிகளுக்கு மத்தியில் உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கப்பல்களில் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
எனது செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக ஆகியோரும் நாட்டின் முன்னணி கப்பற்துறை நிறுவனங்களின் தலைவர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.


කොවිඩ් 19 වසංගතයත් සමග ලොව ප්‍රධාන පෙළේ රටවල් රැසක නාවික සමාගම්වල උද්ගතව ඇති ශ්‍රමික පුරප්පාඩු පිරවීම සඳහා ශ්‍රී ලාංකිකයින් යොමු කිරීමේ හැකියාව පිළිබඳව සොයා බැලීමට මාගේ අවධානය යොමුවිය.
දකුණු මුහුදු තීරය ඔස්සේ නැගෙනහිරට සහ බටහිරට යාත්‍රා කරන නැව්වල සේවයේ නියුතු ශ්‍රී ලාංකිකයන්ට ගාල්ල වරායෙන් දිවයිනට ඇතුල්වීමට සහ ඉන් පිටවීමට ඇති ඉඩ කඩ ද විමර්ශනය කෙරේ.
මෙරට ප්‍රධාන පෙළේ නාවික සමාගම් කිහිපයක නියෝජිතයන් සමග (18) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේ පැවති සාකච්ඡාවකදි මම මේ කරුණු පිළිබඳව අදහස් හුවමාරු කර ගත්තෙමි.
ගාල්ල වරායට නාවික සැතපුම් 10ක් ඈතින්  මුහුදු තීරයේ වෙළෙද නැව් 300කට අධික සංඛ්‍යාවක් දිනපතා යාත්‍රා කරන බව සමාගම් නියෝජිතයෝ පෙන්වා දුන්හ. එම නැව්වල සේවයේ නිරත  සෙසු රටවල කාර්ය මණ්ඩලවලට ද ශ්‍රී ලංකාවේ සිට සිය රටවලට ගමන් කිරීමට පහසුකම් සැලසීමෙන් විශාල විදේශ විනිමයක් උපයා ගැනීමට හැකියාව තිබේ.  ශ්‍රී ලංකන් ගුවන් සේවය ප්‍රවර්ධනයට ද මෙය ඉවහල් කරගත හැකිය.  
ගාල්ල වරාය “ගෝලීය කාර්ය මණ්ඩල හුවමාරු කේන්ද්‍රයක්” (Global crew exchange hub) ලෙස සංවර්ධනය කිරීමේ හැකියාව  ද සාකච්ඡාවට ලක් විය.  සෞඛ්‍ය නීති රීතිවලට යටත්ව වැඩසටහන ක්‍රියාවට නැංවීමේ හැකියාව ගැන සොයා බලන ලෙස මම නිලධාරීන්ට උපදෙස් දුන්නෙමි.
ලෝක නාවික ක්ෂේත්‍රයේ රැකියා නියුක්තිය ලක්ෂ 16කි.  ශ්‍රි ලාංකිකයන් 16,000ක් දෙනාද ඊට අයත් වෙති. ඔවුන්ගේ සංඛ්‍යාව මුළු පිරිසෙන් 1% කි. ඔව්හු  වසරකට ඇමරිකානු ඩොලර් මිලියන 300ක් රටට උපයා දෙති. මේ පිරිස දෙගුණයකින් වැඩි කිරීමෙන් විදේශ විනිමය ආදායම ද දෙගුණ කළ හැකිය. 
ගුණාත්මක අගයෙන් ඉහළ සේවාවක් සැපයීමේ හැකියාව පිළිබඳ විශ්වාසය ලෝක නාවික සමාගම් හමුවේ තහවුරු කිරීමෙන් ශ්‍රී ලාංකිකයනට විදේශ නෞකාවල රැකියා අවස්ථා  දිගුකාලීනව වර්ධනය කර ගැනීමේ හැකියාව  පවතී. 
ජනාධිපති ලේකම් පී.බී. ජයසුන්දර, ජනාධිපති ප්‍රධාන උපදේශක ලලිත් වීරතුංග, නාවික හමුදාපති වයිස් අද්මිරාල් පියල් ද සිල්වා, වරාය අධිකාරියේ සභාපති විශ්‍රාමික ජනරාල් දයා රත්නායක යන මහත්වරු සහ මෙරට ප්‍රධාන පෙළේ නාවික සමාගම් කිහිපයක ප්‍රධානීහූ සාකච්ඡාවට එක්ව සිටියහ.

கொழும்பு, காலி துறைமுகங்களை சர்வதேச கப்பற் பணிக்குழு பரிமாற்ற மையமாக மாற்ற திட்டம் ஜனாதிபதி தெரிவிப்பு Reviewed by www.lankanvoice.lk on மே 20, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.