அல் - மன்ஹஜூஸ் ஸஹீஹூக்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவசர அறிவிப்பு அல் - மன்ஹஜூஸ் ஸஹீஹ் எனும் பெயரில் ஒரு
அல் - மன்ஹஜூஸ் ஸஹீஹூக்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவசர அறிவிப்பு
அல் - மன்ஹஜூஸ் ஸஹீஹ் எனும் பெயரில் ஒரு குழுவினரால் வெளியிடப்படவுள்ள புதிய வெளியீட்டுக்கும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அந்த சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட மன்ஹஜின் அடிப்படையில் சகல முஸ்லிம்களும் ஒற்றுமையைப் பேணி நடக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையையும் சகவாழ்வையும் கட்டியெழுப்ப ஜம்இய்யா முன்னெடுத்து வரும் முயற்சிகளின் ஒரு அங்கமாக, 2022.01.30 அன்று அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்திற்கு உட்பட்ட பல்வேறு சிந்தனை முகாம்களைச் சேர்ந்த ஆலிம்களின் ஒப்புதலுடன் மன்ஹஜ் (மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான வழிகாட்டல்) நூல் வெளியிடப்பட்டது. இதன் மூலமே முஸ்லிம் சமூகம் பல நலவுகளை அடைந்து வருவதாக ஜம்இய்யா சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது புதிய பெயரில் வெளியாகி வரும் நூல்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடும் என்பதால், முஸ்லிம் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் ஆகியோர் சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என முஸ்லிம்களை வினயமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கே ஆர் டிவி நெட்வொர்க்
கே ஆர் டிவி லங்கன் வොய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
අල් - මන්හජුස් සහීහ් සහ අප අතර කිසිදු සම්බන්ධයක් නැත: සමස්ත ලංකා ජම්ඉයියතුල් උලමා සභාවෙන් හදිසි නිවේදනයක්
අල් - මන්හජුස් සහීහ් යන නමින් කණ්ඩායමක් විසින් නිකුත් කිරීමට නියමිත නව ප්රකාශනය සහ සමස්ත ලංකා ජම්ඉයියතුල් උලමා සභාව අතර කිසිදු සම්බන්ධයක් නොමැති බව එම සභාව නිල වශයෙන් නිවේදනය කර ඇත. 2022 වසරේදී ජම්ඉයියතුල් උලමා සභාව විසින් නිකුත් කරන ලද මන්හජ් මාර්ගෝපදේශ මත පදනම්ව සියලුම මුස්ලිම්වරුන් සමගියෙන් කටයුතු කරන ලෙස ඉල්ලා තිබේ.
ශ්රී ලාංකික මුස්ලිම් සමාජය තුළ සමගිය සහ සහජීවනය ගොඩනැගීම සඳහා උලමා සභාව ගෙන යන උත්සාහයේ කොටසක් ලෙස, 2022.01.30 දින අහ්ලුස් සුන්නා වල් ජමාඅත් සංකල්පයට අයත් විවිධ මතධාරී විද්වතුන්ගේ එකඟතාවය ඇතිව මන්හජ් (ආගමික කරුණු සම්බන්ධයෙන් ශ්රී ලාංකික මුස්ලිම්වරුන් සඳහා වූ මගපෙන්වීම්) කෘතිය නිකුත් කරන ලදී. මුස්ලිම් සමාජය එමගින් බොහෝ ප්රතිලාභ අත්කර ගනිමින් සිටින බව සභාව පෙන්වා දෙයි.
දැනට අලුත් නම්වලින් නිකුත් වන ප්රකාශන සමාජ සමගියට බාධාවක් විය හැකි බැවින්, මුස්ලිම් සමාජය ඒ පිළිබඳව අවධානයෙන් සිටිය යුතු බව අවධාරණය කර ඇත. උලමා සභාවේ සභාපති මුෆ්ති එම්.අයි.එම්. රිස්වි සහ මහා ලේකම් අෂ්-ෂෙයික් අර්කම් නූරාමිත් යන මහත්වරුන් සමාජ සමගියට හානි වන කිසිදු ක්රියාවක නිරත නොවන ලෙස මුස්ලිම් ජනතාවගෙන් කාරුණිකව ඉල්ලා සිටිති.
කේ ආර් ටීවී නෙට්වර්ක්
කේ ආර් ටීවී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
ACJU disassociates itself from Al-Manhajus Saheeh; urges Muslims to follow 2022 Manhaj
The All Ceylon Jamiyyathul Ulama (ACJU) has officially announced that it has no connection with a new publication titled Al-Manhajus Saheeh, which is being introduced by a certain group. The ACJU urged all Muslims to continue maintaining unity based on the Manhaj (guidelines for Sri Lankan Muslims on religious matters) released by the organization in 2022.
As part of its long-standing efforts to foster unity and coexistence, the ACJU released the original Manhaj document on January 30, 2022, after extensive collaboration with scholars from various schools of thought within Ahlus Sunnah Wal Jammath. The ACJU emphasized that the Muslim community has achieved significant benefits by following these established guidelines.
Warning against activities that could disrupt social harmony, the ACJU requested the Sri Lankan Muslim community to refrain from supporting any unauthorized publications that may cause division. ACJU President Mufti M.I.M. Rizwe and General Secretary Ash-Sheikh Arkam Nooramith collectively appealed to the community to act with wisdom and uphold unity during this time.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 30, 2026
Rating:

கருத்துகள் இல்லை: