Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி. சாதனை மாணவர்களை அல் ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் கெளரவிப்பு.

அண்மையில் வெளியான க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எமது காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 04 மாணவர்கள் தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்று எமது ஊருக்கும் சமூகத்துக்கும் கெளரவத்தை பெற்றுத்தந்தனர்.


குறித்த மாணவர்களை அவர்களின் இல்லங்களுக்குச் சென்று வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வுகள் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் 06.04.2026 ம் திகதி இடம் பெற்றன.

இதன்போது க.பொ.த (உ/த) பரீட்சை 2025 ல் வரலாற்றுச் சாதனை படைத்த
1. செல்வன் MSM. பர்தான்
தேசிய ரீதியில் முதலிடம் - வர்த்தக பிரிவு
2. செல்வன் MJA அத்ஹம்
மாவட்ட ரீதியில் முதலிடம் - பொறியியல் தொழிநுட்ப பிரிவு
3. செல்வன் ML முகம்மது ஆதில்
மாவட்ட ரீதியில் முதலிடம் - கலைத்துறை
ஆகிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வு மெளலவி ஏ.ஜே.அப்துர் ரவூப் மிஸ்பாஹீ அவர்களின் வேண்டுகோளின் பேரில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் முகாமைச்சபைபிரதிநிதிகளான காத்தான்குடி பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP, மெளலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ (BBA), மெளலவீ MJM. ஜஹானி றப்பானீ, காத்தான்குடி நூராணியா வித்தியாலய அதிபர் MACM. நியாஸ், ஜனாப்.MSM. சிமாக் சினனலெப்பை, ஆகியோர் கலந்துகொண்டனர்.

படமும் தகவலும் ஸம்ஸ் மீடியா
காத்தான்குடி. சாதனை மாணவர்களை அல் ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் கெளரவிப்பு. Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 07, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.