Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

திறைசேரி செயலாளர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் இன்று முன்னிலை

 


திறைசேரி செயலாளர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் இன்று முன்னிலை


திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றமை தொடர்பான விசாரணைகளுக்காக, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளரான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும இன்று (30) மதியம் 1.00 மணிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் (COPF) முன்னிலையாகவுள்ளார்.


திறைசேரியினால் மேற்கொள்ளப்படவிருந்த இந்த வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு, உரிய தரப்புக்குச் செல்லாமல் வேறொரு மூன்றாம் தரப்பின் கைக்குச் சென்றுள்ளமை பாரிய சைபர் தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தின் தீவிரம் காரணமாக, முன்னதாக சமூகமளிக்க முடியாது என அறிவித்திருந்த திறைசேரி செயலாளர், இன்று மதியம் குழுவின் முன் ஆஜராகவுள்ளார். நாட்டின் நிதி மேலாண்மை மற்றும் சைபர் பாதுகாப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து இன்றைய அமர்வில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


கே ஆர் டிவி நெட்வொர்க்

கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


භාණ්ඩාගාර ලේකම් අද රජයේ මුදල් පිළිබඳ කාරක සභාව හමුවට


භාණ්ඩාගාරයෙන් සිදු කිරීමට ගිය ඇමරිකානු ඩොලර් මිලියන 2.5 ක විදේශ ණය ගෙවීමක් තෙවන පාර්ශවයක අතට පත්වීම සම්බන්ධයෙන් වන විමර්ශන සඳහා භාණ්ඩාගාර සහ මුදල් අමාත්‍යාංශයේ ලේකම් ආචාර්ය හර්ෂණ සූරියපෙරුම මහතා අද (30) දහවල් 1.00 ට රජයේ මුදල් පිළිබඳ කාරක සභාව (COPF) හමුවේ පෙනී සිටීමට නියමිතය.


භාණ්ඩාගාරය මගින් සිදු කිරීමට නියමිතව තිබූ මෙම ගෙවීම අදාළ පාර්ශවයට නොගොස් වෙනත් පාර්ශවයකට ලැබීම බරපතල සයිබර් ප්‍රහාරයක් විය හැකි බවට සැක කෙරේ. මෙම සිද්ධියේ පවතින බරපතලකම හේතුවෙන්, මීට පෙර සහභාගී විය නොහැකි බව දන්වා තිබූ භාණ්ඩාගාර ලේකම්වරයා අද දහවල් කාරක සභාව හමුවට පැමිණෙනු ඇත. රටේ මූල්‍ය කළමනාකරණය සහ සයිබර් ආරක්ෂාව සම්බන්ධයෙන් දැඩි අවධානයක් යොමුව ඇති මෙම සිද්ධිය පිළිබඳව අද දින පුළුල් විමර්ශනයක් සිදු කිරීමට නියමිතය.


කේ ආර් ටීවී නෙට්වර්ක්

කේ ආර් ටීවී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Treasury Secretary to appear before COPF today over diverted $2.5 million payment


Dr. Harshana Suriyaperuma, Secretary to the Treasury and Ministry of Finance, is scheduled to appear before the Committee on Public Finance (COPF) today (30) at 1:00 PM. The appearance is regarding an investigation into a $2.5 million foreign debt payment that was diverted from the Treasury to a third party.


There are strong suspicions that this incident, where the payment failed to reach the intended recipient, may be the result of a major cyberattack. Despite an earlier formal notification stating he could not attend, the Treasury Secretary will be present today due to the severity of the matter. The session is expected to conduct extensive inquiries into how the funds were diverted and where security failures occurred, an issue that has raised significant concerns over national financial management and cybersecurity.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

திறைசேரி செயலாளர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் இன்று முன்னிலை Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 30, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.