காத்தான்குடியில் இருந்து புனித ஹஜ் யாத்திரிகர்கள் வழியனுப்பி வைப்பு
காத்தான்குடியில் இருந்து புனித ஹஜ் யாத்திரிகர்கள் வழியனுப்பி வைப்பு
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காகச் செல்லும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த யாத்திரிகர்கள், இன்று காலை 9:30 மணியளவில் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளிவாயலில் இருந்து உத்தியோகபூர்வமாகப் புறப்பட்டுச் சென்றனர். காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த வழியனுப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது, காத்தான்குடி ஜமியத்துல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி கபூர் மதனி அவர்களினால் யாத்திரிகர்களுக்கான விசேட சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டதோடு, யாத்திரை சிறக்க வேண்டி விசேட துவாப் பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த வழியனுப்பு நிகழ்வில் மூத்த உலமாக்கள், சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், யாத்திரிகர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
கே ஆர் டிவி நெட்வொர்க்
கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
කාත්තාන්කුඩි හජ් වන්දනාකරුවන් පිරිසක් අද උදෑසන පිටත්ව යයි
විශුද්ධ වූ හජ් වන්දනාව සඳහා පිටත්ව යන කාත්තාන්කුඩි ප්රදේශයේ වන්දනාකරුවන් පිරිසක් අද පෙරවරු 9:30 ට කාත්තාන්කුඩි මුහයිදීන් මෙත්තෛ මහා ජුම්මා පල්ලියේ සිට නිල වශයෙන් පිටත්ව ගියහ. කාත්තාන්කුඩි පල්ලි සහ මුස්ලිම් සංවිධාන සම්මේලනය විසින් මෙම සමුගැනීමේ උත්සවය සංවිධානය කර තිබුණි.
මෙහිදී කාත්තාන්කුඩි ජමියතුල් උලමා සභාවේ උප සභාපති කපූර් මදනී මවුලවිතුමන් විසින් විශේෂ දේශනයක් පවත්වන ලද අතර වන්දනාකරුවන් වෙනුවෙන් විශේෂ දුආ ප්රාර්ථනාවක් ද සිදු කරන ලදී.
මෙම අවස්ථාවට ජ්යෙෂ්ඨ උලමාවරුන්, සම්මේලනයේ සභාපති, ලේකම් ඇතුළු සාමාජිකයින් සහ වන්දනාකරුවන්ගේ ඥාතීන් මෙන්ම ප්රදේශවාසීන් විශාල පිරිසක් සහභාගී වූහ.
කේ ආර් ටීවී නෙට්වර්ක්
කේ ආර් ටීවී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Hajj pilgrims from Kattankudy depart for the holy pilgrimage
A group of pilgrims from Kattankudy departed today at 9:30 AM from the Meithai Grand Jummah Mosque to perform the holy Hajj pilgrimage. The farewell event was organized by the Federation of Kattankudy Mosques and Muslim Institutions.
During the event, the Vice President of the Kattankudy Jamiyyathul Ulama, Moulavi Kapur Madani, delivered a special sermon and conducted a special Dua prayer for the pilgrims.
The ceremony was attended by senior Ulama, the President, Secretary, and members of the Federation, along with a large number of relatives of the pilgrims and the general public.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 30, 2026
Rating:

கருத்துகள் இல்லை: