Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஓட்டமாவடியில் 40.5 மில்லியனில் வீதி, பாலம் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்


 ஓட்டமாவடியில் 40.5 மில்லியனில் வீதி, பாலம் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகரில் வீதி மற்றும் பாலம் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 20.5 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் 700 மீற்றர் நீளமான கொங்கிரீட் வீதி அமைக்கும் பணியும், 20 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகின்றன.


இந்தப் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் மஜ்மா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இலகுவாகி, மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமக்கான நிதியொதுக்கீட்டைச் செய்த அரசாங்கத்திற்கும், இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, பிரதேச செயலாளர் ஏ. தாஹிர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மஜ்மா நகர் மக்கள் தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.


கே ஆர் டிவி நெட்வொர்க்

கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


ඕටමාවඩි හි මිලියන 40.5ක වියදමින් මාර්ග සහ පාලම් සංවර්ධන කටයුතු ඇරඹේ


ජාතික ජන බලවේග රජයේ ග්‍රාමීය සංවර්ධන ව්‍යාපෘතිය යටතේ, කෝරළේපත්තු බටහිර ඕටමාවඩි ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයට අයත් මජ්මා නගර් හි මාර්ග සහ පාලම් සංවර්ධන කටයුතු ආරම්භ කර ඇත. ප්‍රදේශවාසීන්ගේ දිගුකාලීන ඉල්ලීමක් ඉටු කරමින්, රුපියල් මිලියන 20.5ක ප්‍රතිපාදන යටතේ මීටර් 700ක් දිගැති කොන්ක්‍රීට් මාර්ගයක් ඉදිකිරීම සහ රුපියල් මිලියන 20ක ප්‍රතිපාදන යටතේ නව පාලමක් ඉදිකිරීමේ කටයුතු මේ වන විට සිදුවෙමින් පවතී.


මඩකලපුව දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී සහ ප්‍රාදේශීය සම්බන්ධීකරණ කමිටු සභාපති කන්දසාමි ප්‍රභූ ඇතුළු කණ්ඩායමක් මෙම කටයුතු නිරීක්ෂණය කළහ. මෙම සංවර්ධන ව්‍යාපෘති මගින් මජ්මා නගර් සහ ඒ අවට ගම්මානවල ප්‍රවාහන පහසුකම් පහසු වී ජනතාවගේ ජීවන තත්ත්වය ඉහළ යනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.


තමන් වෙනුවෙන් ප්‍රතිපාදන වෙන්කළ රජයට සහ ඒ සඳහා අවශ්‍ය පියවර ගත් අමාත්‍ය සුනිල් හඳුන්නෙත්ති, දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී කන්දසාමි ප්‍රභූ, ප්‍රාදේශීය ලේකම් ඒ. තාහීර් සහ ජාතික ජන බලවේගයේ පළාත් පාලන නියෝජිතයින් ඇතුළු සියලු දෙනාට මජ්මා නගර් ජනතාව සිය කෘතඥතාව පළ කර ඇත.


කේ ආර් ටීවී නෙට්වර්ක්

කේ ආර් ටීවී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Road and Bridge Development Projects Worth 40.5 Million Rupees Begin in Ottamavadi


Under the Rural Development Project of the National People's Power government, road and bridge development projects have commenced in Majma Nagar, within the Koralaipattu West Ottamavadi Divisional Secretariat division. Fulfilling a long-standing request of the area residents, the construction of a 700-meter long concrete road with an allocation of 20.5 million rupees and a new bridge with an allocation of 20 million rupees are currently underway.


Batticaloa District Member of Parliament and Regional Coordination Committee Chairman Kandasamy Prabhu, along with a team, personally inspected these works. It is expected that these development projects will ease transport facilities for Majma Nagar and surrounding villages, improving the quality of life of the people.


The residents of Majma Nagar expressed their heartfelt gratitude to the government for allocating the funds and to Minister Sunil Handunnetti, District MP Kandasamy Prabhu, Divisional Secretary A. Tahir, and the local government representatives of the National People's Power for taking the necessary steps.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

ஓட்டமாவடியில் 40.5 மில்லியனில் வீதி, பாலம் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம் Reviewed by KR TV LANKAN VOICE on மே 05, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.