செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 4 உடலங்கள் மீட்பு
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 4 உடலங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 07 ஆம் நாள் அகழ்வுகள் நேற்று (04.05.2026) முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் இருந்து, குழந்தை ஒன்றின் எலும்புக்கூடு உட்பட நான்கு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 250 எலும்புக்கூட்டுத் தொகுதிகளில், 247 தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், அகழ்வுப் பணியின் போது சில சான்றுப் பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றைச் சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) அவை அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னரே அது குறித்த மேலதிக விபரங்களைத் தெரிவிக்க முடியும் எனவும் சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்.
கே ஆர் டிவி நெட்வொர்க்
கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
සෙම්මනි මිනිස් සමූහ මිනීවල කැණීම්: ළමා ඇටසැකිල්ලක් ඇතුළු සිරුරු 4ක් මතුකර ගනී
යාපනය සෙම්මනි ප්රදේශයේ පවතින මිනිස් සමූහ මිනීවලේ තෙවැනි අදියරේ 07 වැනි දින කැණීම් කටයුතු ඊයේ (04) සිදු කෙරිණි. එහිදී, මීට පෙර හඳුනාගෙන තිබූ ඇටසැකිලි කොටස් අතරින් ළමා ඇටසැකිල්ලක් ද ඇතුළුව මානව ඇටසැකිලි හතරක් සම්පූර්ණයෙන්ම මතුකර ගැනීමට හැකිවී තිබේ.
ඒ අනුව, සෙම්මනි මිනිස් සමූහ මිනීවලෙන් මේ දක්වා හඳුනාගෙන ඇති ඇටසැකිලි 250න්, ඇටසැකිලි 247ක් සම්පූර්ණයෙන්ම කැණීම් කර මතුකරගෙන ඇති බව සඳහන් වේ. එමෙන්ම, කැණීම් කටයුතු අතරතුර තවත් සාක්ෂි කොටස් කිහිපයක් ද හඳුනාගෙන ඇත. ඒවා පිරිසිදු කිරීමේ කටයුතු සිදුවෙමින් පවතින අතර, අද (අඟහරුවාදා) දිනයේ ඒවා මතුකර ගැනීමෙන් අනතුරුව ඒ පිළිබඳ වැඩිදුර තොරතුරු අනාවරණය කළ හැකි බව නීතිඥ ඥා. රනිතා මහත්මිය ප්රකාශ කළාය.
කේ ආර් ටීවී නෙට්වර්ක්
කේ ආර් ටීවී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Chemmani Mass Grave Excavation: Four Skeletons, Including a Child’s, Exhumed
The 7th day of the third phase of excavation at the Chemmani mass grave in Jaffna was carried out yesterday (04). During the operation, four human skeletal remains, including the skeleton of a child, were fully exhumed from previously identified locations.
With this, out of the 250 skeletal remains identified so far at the Chemmani mass grave, 247 remains have been completely exhumed. Additionally, several pieces of evidence were identified during the excavation. Lawyer G. Ranitha stated that these items are currently being cleaned, and further details will be revealed only after they are exhumed today (Tuesday).
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 05, 2026
Rating:


கருத்துகள் இல்லை: