Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கைச் சிறையிலுள்ள தமிழகக் கடற்றொழிலாளர்களை விடுவிக்கத் தமிழக முதலமைச்சர் விஜய் மத்திய அரசுக்கு அவசரக் கடிதம்


 இலங்கைச் சிறையிலுள்ள தமிழகக் கடற்றொழிலாளர்களை விடுவிக்கத் தமிழக முதலமைச்சர் விஜய் மத்திய அரசுக்கு அவசரக் கடிதம்


இலங்கை கடற்படையினரால் இராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 கடற்றொழிலாளர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி வெளியான சில மணிநேரங்களிலேயே, தமிழக முதலமைச்சர் விஜய் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


இக்கடிதத்தின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:


* ஏற்கனவே 54 தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் உள்ள நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 பேரையும் சேர்த்து மொத்தம் 60 பேரையும் உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

* மீனவர்களின் வாழ்வாதாரமான 264 படகுகள் இலங்கை வசம் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அவற்றை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

* சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாகக் கூறித் தொடரும் இத்தகைய அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

* முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு வெளியுறவுத்துறை சார்ந்த ஒரு விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் எடுக்கும் முதல் முக்கிய நடவடிக்கை இதுவாகும்.


KR TV Network / KR TV Lankan Voice

சர்வதேச செய்தி


ශ්‍රී ලංකා අත්අඩංගුවේ පසුවන තමිල්නාඩු ධීවරයන් නිදහස් කර ගැනීමට තමිල්නාඩු මහ ඇමති විජේගෙන් උපදෙස්


ශ්‍රී ලංකා නාවික හමුදාව විසින් අද දිනයේ රාමනාදපුරම් ප්‍රදේශයේ ධීවරයන් 6 දෙනෙකු අත්අඩංගුවට ගෙන ඇත. මෙම පුවත වාර්තා වී පැය කිහිපයක් ඇතුළත තමිල්නාඩු මහ ඇමති ජෝසප් විජේ මහතා ඉන්දීය විදේශ කටයුතු අමාත්‍ය එස්. ජයිශංකර් මහතා වෙත හදිසි ලිපියක් යොමු කර තිබේ.


එම ලිපියේ සඳහන් ප්‍රධාන කරුණු:


* දැනටමත් තමිල්නාඩු ධීවරයන් 54 දෙනෙකු ශ්‍රී ලංකා බන්ධනාගාරවල පසුවන අතර, අද අත්අඩංගුවට ගත් 6 දෙනා ද සමඟින් 60 දෙනාම නිදහස් කර ගැනීමට මධ්‍යම රජය ශ්‍රී ලංකා බලධාරීන් සමඟ සම්බන්ධ විය යුතු බව ඔහු අවධාරණය කර ඇත.

* ධීවරයන්ගේ ජීවනෝපාය වන යාත්‍රා 264ක් ශ්‍රී ලංකා භාරයේ පවතින බව පෙන්වා දී ඇති මහ ඇමතිවරයා, ඒවා නිදහස් කර ගැනීමට අවශ්‍ය පියවර ගන්නා ලෙස ඉල්ලා තිබේ.

* ජාත්‍යන්තර මුහුදු සීමාව උල්ලංඝනය කළ බව පවසමින් සිදු කරන මෙම මර්දනයන්ට තිත තැබිය යුතු බව තමිල්නාඩු රජයේ ස්ථාවරය බව ඔහු එම ලිපියේ සඳහන් කර ඇත.

* මහ ඇමති ධුරයට පත්වීමෙන් පසු විදේශ කටයුතු සම්බන්ධ විෂයකදී විජේ මහතා ගත් පළමු ප්‍රධාන පියවර මෙය වේ.


KR TV Network / KR TV Lankan Voice

ජාත්‍යන්තර පුවත්


Tamil Nadu CM Vijay Urges Indian Government to Secure Release of Fishermen in Sri Lankan Custody


Tamil Nadu Chief Minister Joseph Vijay has sent an urgent letter to Indian External Affairs Minister S. Jaishankar following the arrest of 6 fishermen from Ramanathapuram by the Sri Lankan Navy today.


Key Highlights of the Letter:


* The Chief Minister urged the central government to coordinate with Sri Lankan authorities to secure the immediate release of a total of 60 fishermen, including the 54 already in custody and the 6 arrested today.

* He highlighted that 264 boats belonging to the fishermen are currently in Sri Lankan possession and requested immediate action for their release to protect the fishermen's livelihoods.

* The letter stated that the Tamil Nadu government’s stance is to put an end to the ongoing actions taken against fishermen on the pretext of crossing the International Maritime Boundary Line.

* This marks the first significant action taken by Vijay in a matter related to foreign affairs since assuming office as Chief Minister.


KR TV Network / KR TV Lankan Voice

International News

.

இலங்கைச் சிறையிலுள்ள தமிழகக் கடற்றொழிலாளர்களை விடுவிக்கத் தமிழக முதலமைச்சர் விஜய் மத்திய அரசுக்கு அவசரக் கடிதம் Reviewed by KR TV LANKAN VOICE on மே 12, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.