Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மஹபொல பழைய மாணவர் இணையத்தளத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்


 மஹபொல பழைய மாணவர் இணையத்தளத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்


மஹபொல புலமைப்பரிசில் மூலம் பயன்பெற்ற பழைய மாணவர்களையும், தற்போது பயின்று வரும் மாணவர்களையும் ஒரே வலையமைப்பிற்குள் கொண்டுவரும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'என்னிடமிருந்து மஹபொலவிற்கு, மஹபொலவிலிருந்து பிள்ளைகளுக்கு' (Your contribution to Mahapola, will shape their future) எனும் புதிய இணையத்தள நுழைவாயில் இன்று (மே 12) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டு இதனைத் திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய விபரங்கள் வருமாறு:


* மஹபொல பழைய மாணவர் வலையமைப்பின் ஊடாக, இந்த நிதியமானது வெறும் நிதி உதவியுடன் மாத்திரம் நின்றுவிடாது, மாணவர்களின் ஏனைய தேவைகளுக்கும் பக்கபலமாக அமையும் வகையில் விரிவுபடுத்தப்படும்.

* மாணவர்கள் தமக்குக் கிடைத்த இந்த புலமைப்பரிசிலை தமக்கு மாத்திரம் கிடைத்த ஒன்றாகக் கருதாமல், அதன் மூலம் உயர்கல்வியைப் பெற்று நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும்.

* உயர்கல்விக்கான பிரவேசத்தை உறுதிப்படுத்துவதன் ஊடாக, மாணவர்கள் எதிர்காலத்தில் நாட்டிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதையே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.


KR TV Network / KR TV Lankan Voice

தேசிய செய்தி



මහපොළ ශිෂ්‍යත්වලාභීන්ගේ ආදි ශිෂ්‍ය වෙබ් ද්වාරය අග්‍රාමාත්‍ය හරිනි අමරසූරිය මහත්මියගේ ප්‍රධානත්වයෙන් විවෘත කෙරේ


මහපොළ ශිෂ්‍යත්ව ප්‍රතිලාභ ලැබූ ආදි විද්‍යාර්ථයින් සහ දැනට ප්‍රතිලාභ ලබන සිසුන් එක් ජාලයකට ගොනු කිරීමේ අරමුණින් නිර්මාණය කරන ලද 'මගෙන් මහපොළට, මහපොළෙන් දරුවන්ට' (Your contribution to Mahapola, will shape their future) නිල වෙබ් ද්වාරය අද (මැයි 12) විවෘත කරන ලදී. ශ්‍රී ලංකා පදනම් ආයතනයේ පැවැති මෙම උත්සවයට අග්‍රාමාත්‍ය හරිනි අමරසූරිය මහත්මිය ප්‍රධාන අමුත්තා ලෙස සහභාගී වූවාය.


එහිදී අග්‍රාමාත්‍යවරිය දැක්වූ අදහස් කිහිපයක් පහත දැක්වේ:


* මහපොළ ආදි ශිෂ්‍ය ජාලය හරහා මහපොළ අරමුදල මූල්‍යමය ප්‍රදානයකට එහා ගිය, සිසුන්ගේ අනෙකුත් අවශ්‍යතාවන් සඳහා ද ශක්තියක් වන ආකාරයට ගොඩනැගීම රජයේ අරමුණයි.

* සිසුන්ට ලැබෙන මෙම ශිෂ්‍යත්වය තමන්ට පමණක් ලැබුණු එකක් ලෙස සලකන්නේ නැතිව, රටට සේවයක් කිරීම සඳහා එය භාවිතා කළ යුතුය.

* උසස් අධ්‍යාපනයට ඇති ප්‍රවේශය තහවුරු කිරීම හරහා උගතුන්ගෙන් මෙරටට උපරිම සේවයක් ලැබෙනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.


KR TV Network / KR TV Lankan Voice

ජාතික පුවත්


Prime Minister Harini Amarasuriya Inaugurates Mahapola Scholarship Alumni Website


The official Mahapola Scholarship Alumni Website, titled "Your contribution to Mahapola, will shape their future," was launched today, May 12, at the Sri Lanka Foundation Institute. Prime Minister Harini Amarasuriya presided over the ceremony, which aimed to unite past and present Mahapola recipients under a single network.


Key points from the Prime Minister's address:


* The government aims to strengthen the Mahapola Fund beyond financial aid, utilizing the alumni network to support the broader needs of students.

* Students were urged not to view their scholarships as individual benefits but as a gateway to serving the nation through higher education.

* The ultimate goal is to ensure that the access provided to higher education translates into a meaningful contribution to the country's development.


KR TV Network / KR TV Lankan Voice

National News

மஹபொல பழைய மாணவர் இணையத்தளத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய அங்குரார்ப்பணம் செய்து வைத்தார் Reviewed by KR TV LANKAN VOICE on மே 12, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.