அரச சேவையில் ஊழியர்களை நிரந்தரமாக்கும் புதிய சுற்றுநிருபம் வௌியீடு
அரச சேவையில் ஊழியர்களை நிரந்தரமாக்கும் புதிய சுற்றுநிருபம் வௌியீடு
அரச நிறுவனங்களில் தற்காலிக, நாளாந்த பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களைச் சேவையில் நிரந்தரமாக்குவது தொடர்பான 11/2026 இலக்க சுற்றுநிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுநிருபம், அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின் மூலம் சுமார் 9,800 ஊழியர்கள் நிரந்தர நியமனங்களைப் பெற வாய்ப்பு கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பயன்பெறவுள்ளதுடன், முன்னதாக நிரந்தர நியமனம் பெற்றிருந்தும் அவை முறைப்படுத்தப்படாமல் இருக்கும் ஊழியர்களுக்கான நடைமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டுச் செய்தி
கே ஆர் டி வி நெட்வொர்க் / கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
රාජ්ය සේවයේ සේවකයින් ස්ථිර කිරීමේ චක්රලේඛය නිකුත් කෙරේ
රජයේ ආයතනවල තාවකාලික, දෛනික පදනම, කොන්ත්රාත් හෝ සහන පදනම මත සේවය කරන සේවකයින් ස්ථිර කිරීම සම්බන්ධ 11/2026 දරන චක්රලේඛය නිකුත් කර තිබේ. රාජ්ය පරිපාලන, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්යාංශය මගින් නිකුත් කරන ලද මෙම චක්රලේඛය සියලුම අමාත්යාංශ ලේකම්වරුන් සහ දෙපාර්තමේන්තු ප්රධානීන් වෙත යොමු කර ඇත. මෙම තීරණය මගින් සේවකයින් 9,800කට පමණ ස්ථිර පත්වීම් ලබා ගැනීමට අවස්ථාව හිමිවන බව අමාත්ය වෛද්ය නලින්ද ජයතිස්ස මහතා ප්රකාශ කළේය.
2026 අයවැය යෝජනාවලට අනුව මෙම පියවර ගෙන ඇති අතර, දැනටමත් සහන පදනම මත සේවය කරමින් සිටින සහ පත්වීම් විධිමත් කර නොමැති සේවකයින්ගේ ගැටලුවලට ද මෙයින් විසඳුම් ලැබෙනු ඇත.
දේශීය පුවත්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
Circular issued to permanentize public service employees
The Ministry of Public Administration, Provincial Councils, and Local Government has issued Circular No. 11/2026 regarding the permanent recruitment of temporary, daily-paid, contract, or relief basis employees in government institutions. This circular has been dispatched to all Ministry Secretaries and Heads of Departments. Cabinet Spokesperson Minister Dr. Nalinda Jayatissa stated that approximately 9,800 employees are eligible to receive permanent appointments through this decision.
This initiative aligns with the 2026 budget proposals. The circular also includes procedures to formalize appointments for employees who had previously received permanent status under relief schemes but whose positions had not yet been officially regularized.
Local News
KR TV Network / KR TV Lankan Voice
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 01, 2026
Rating:



கருத்துகள் இல்லை: