வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சின்னப் பாலமுனைப் பகுதி மக்களின் நீண்ட காலக் கனவை நனவாக்கும் வகையில் 13 வீடுகளைக் கொண்ட புதிய வீடமைப்புத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சின்னப் பாலமுனைப் பகுதி மக்களின் நீண்ட காலக் கனவை நனவாக்கும் வகையில் 13 வீடுகளைக் கொண்ட புதிய வீடமைப்புத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய வீடமைப்புத் திட்டமானது "தஸ்மீனா கிராமம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தஸ்மினா நிறுவனத்தின் நிதி அனுசரணையோடும், ஐகோன் அமைப்பின் மேலதிக ஆதரவோடும் இக்கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இத்திட்டப் பணிகளை பெட்டர் ஹேன்ட்ஸ் ஒப் ஹஹோப் – பாலமுனை அமைப்பு மிகவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இக்கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் ஒரு வீட்டினைக் கட்டி முடிப்பதற்கு சுமார் 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி செலவழிக்கப்பட்டுள்ளது.
சொந்தமாக ஒரு முகவரியும் பாதுகாப்பான இருப்பிடமும் இன்றிச் சிரமப்பட்ட மக்களுக்கு இந்தத் திட்டம் மாபெரும் நிம்மதியையும் பாதுகாப்பையும் வழங்கியுள்ளதுடன், பிரதேச மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேசிய செய்தி
KR TV Network - KR TV Lankan Voice
#A new housing project consisting of 13 houses has been built for families affected by floods in the Small Palamunai area.
This housing scheme has been officially declared open for public use under the name "Tasmina Village".
The project was carried out with financial sponsorship from the TASMINA Foundation, USA, and additional support from the ICON organization.
The construction works were successfully implemented by the Better Hands of Hope organization based in Palamunai.
Construction activities commenced on February 4, 2026, and the houses were officially opened on August 16, 2026.
Approximately 1.28 million rupees was spent to complete the construction of a single house.
This project has successfully fulfilled the long-term dreams of ordinary people who struggled without a permanent address or safe shelter, bringing immense relief and happiness to the local community.
National News
KR TV Network - KR TV Lankan Voice
#කුඩා බාලමුණේ ප්රදේශයේ ගංවතුරින් විපතට පත් පවුල් වෙනුවෙන් නිවාස 13කින් යුත් නව නිවාස ව්යාපෘතියක් ඉදිකර ඇත.
මෙම නව නිවාස ව්යාපෘතිය "තස්මීනා ගම්මානය" යන නමින් ජනතා අයිතියට නිල වශයෙන් පත් කර ඇත.
ඇමරිකාවේ තස්මීනා පදනමේ මූල්ය අනුග්රහයෙන් සහ ICON සංවිධානයේ අතිරේක දායකත්වයෙන් මෙම ඉදිකිරීම් කටයුතු සිදු කර ඇත.
මෙම ව්යාපෘතිය 'Better Hands of Hope' බාලමුණේ සංවිධානය විසින් ඉතා සාර්ථකව ක්රියාත්මක කරනු ලැබ ඇත.
2026 පෙබරවාරි 04 වැනි දින ආරම්භ කරන ලද මෙම ඉදිකිරීම් කටයුතු අවසන් වී, 2026 අගෝස්තු 16 වැනි දින ජනතා අයිතියට විවෘත කරන ලදී.
එක් නිවසක් ඉදිකිරීම සඳහා ආසන්න වශයෙන් රුපියල් ලක්ෂ 12යි දහස් 80ක මුදලක් වැය කර ඇත.
නිසි ලිපිනයක් හෝ ආරක්ෂිත වාසස්ථානයක් නොමැතිව දුක් විඳිමින් සිටි සාමාන්ය ජනතාවගේ දිගුකාලීන සිහිනය මෙමඟින් සැබෑ වී ඇති අතර, ප්රදේශවාසීන් අතර විශාල සතුටට හා සහනයට එය හේතු වී තිබේ.
ජාතික පුවත්
KR TV Network - KR TV Lankan Voice











Comments