கொழும்பில் 14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!
கொழும்பில் 14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!
கொழும்பு 09, தெமட்டகொடை பகுதியில் அமைந்துள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பொன்றிலிருந்து தவறி விழுந்து 12 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சோகச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுவன் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்துக்கு அருகில் மேலும் சில சிறுவர்களுடன் நின்று சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. இதன்போது, அந்த மாடியில் திறந்த நிலையில் காணப்பட்ட பாதுகாப்பற்ற ஒரு பகுதியினூடாக அச்சிறுவன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் கொழும்பு 09 பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
உள்நாட்டுச் செய்தி
KR TV Network - KR TV Lankan Voice
#කොළඹ මහල් 14ක ගොඩනැගිල්ලකින් පහළට ඇදවැටී 12 හැවිරිදි ළමයෙකුට අවාසනාවන්ත මරණයක්!
කොළඹ 09, දෙමටගොඩ ප්රදේශයේ පිහිටි මහල් 14කින් යුත් නිවාස සංකීර්ණයකින් ඇදවැටීමෙන් 12 හැවිරිදි පිරිමි ළමයෙකු ජීවිතක්ෂයට පත්ව තිබේ. මෙම ඛේදවාචකය ඊයේ (ඉරිදා) සවස සිදුවී ඇත.
මූලික පරීක්ෂණවලට අනුව, අදාළ ළමයා එම නිවාස සංකීර්ණයේ ඉහළම මහලේ පිහිටි පිහිනුම් තටාකය අසල තවත් ළමයින් කිහිපදෙනෙකු සමඟ සිටියදී, එහි අනාරක්ෂිත ලෙස විවෘතව තිබූ ස්ථානයකින් නොසිතූ ලෙස පහළට ඇදවැටී ඇත.
මියගිය ළමයා කොළඹ 09 ප්රදේශයේම පදිංචිකරුවෙකි. සිද්ධිය සම්බන්ධයෙන් මරුදාන පොලිසිය වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි.
දේශීය පුවත්
KR TV Network - KR TV Lankan Voice
#Tragedy in Colombo: 12-Year-Old Boy Falls to Death from 14-Story Apartment!
A 12-year-old boy has tragically lost his life after falling from a 14-story apartment complex located in Dematagoda, Colombo 09. The unfortunate incident occurred yesterday (Sunday) evening.
According to initial reports, the boy was standing near the rooftop swimming pool with a few other children when he accidentally fell through an unprotected open space on that floor.
The deceased has been identified as a resident of Colombo 09. The Maradana Police have launched a comprehensive investigation into the incident.
Local News
KR TV Network - KR TV Lankan Voice

Comments