கொழும்பு துறைமுக நகர் சீன நாட்டவர் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்களுக்கு 24 மணி நேரத் தடுப்புக்காவல் உத்தரவு!
கொழும்பு துறைமுக நகர் சீன நாட்டவர் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்களுக்கு 24 மணி நேரத் தடுப்புக்காவல் உத்தரவு!
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சீகிரியப் பகுதியில் வைத்துப் புதன்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு சீன நாட்டவர்களையும் 24 மணி நேரத் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஜூலை 23ஆம் திகதி துறைமுக நகரில் சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு, பின்னர் அவரது சடலம் எஹெலியகொடை காட்டுப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாகியிருந்து சீகிரியப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்வதற்காக 24 மணி நேரத் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய மூன்றாவது சந்தேகநபரைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கே ஆர் டிவி நெட்வொர்க்
உள்நாட்டுச் செய்தி
කොළඹ වරාය නගරයේ චීන ජාතිකයා ඝාතන සිද්ධිය: අත්අඩංගුවට ගත් සැකකරුවන් දෙදෙනාට පැය 24ක රැඳවුම් නියෝගයක්!
කොළඹ වරාය නගර පරිශ්රයේදී චීන ජාතිකයෙකු පැහැරගෙන ගොස් ඝාතනය කිරීමේ සිද්ධියට අදාළව සීගිරිය ප්රදේශයේදී අත්අඩංගුවට ගන්නා ලද චීන ජාතිකයින් දෙදෙනා පැය 24ක රැඳවුම් නියෝග මත රඳවා ප්රශ්න කිරීමට අධිකරණය අවසර ලබා දී තිබේ.
ඉකුත් ජූලි 23 වැනි දින වරාය නගරයේ ඇති වූ ගැටුමකින් පසු පුද්ගලයෙකු පැහැරගෙන ගොස් ඝාතනය කර තිබූ අතර, ඔහුගේ මළ සිරුර ඇහැළියගොඩ කැලෑ ප්රදේශයකින් සොයා ගන්නා ලදී. මෙම අපරාධයට සම්බන්ධ තවත් සැකකරුවන් කිහිප දෙනෙක් මේ වන විටත් රක්ෂිත බන්ධනාගාරගත කර ඇත.
සීගිරිය ප්රදේශයේ ආපන ශාලාවක සැඟව සිටියදී කොළඹ අපරාධ කොට්ඨාසය මඟින් අත්අඩංගුවට ගත් මෙම සැකකරුවන් දෙදෙනා අධිකරණයට ඉදිරිපත් කිරීමෙන් අනතුරුව, වැඩිදුර විමර්ශන සඳහා පැය 24ක රැඳවුම් නියෝග ලබාගෙන ඇත. පලා ගොස් ඇති තෙවැනි සැකකරු අත්අඩංගුවට ගැනීම සඳහාද පොලිස් මෙහෙයුම් ක්රියාත්මකය.
කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක්
දේශීය පුවත්
Colombo Port City Murder Case: Two Arrested Chinese Nationals Detained Under 24-Hour Detention Order!
The two Chinese nationals who were arrested in Sigiriya in connection with the abduction and murder of a fellow Chinese citizen at the Colombo Port City premises have been placed under a 24-hour detention order for further questioning.
Following a clash between Chinese nationals at the Port City on July 23, a man was abducted and later found murdered, with his body recovered from a forested area in Eheliyagoda. Several suspects linked to the homicide have already been remanded pending investigations.
Following their arrest by the Colombo Crime Division while hiding at a restaurant in Sigiriya, the two suspects were produced before court, which granted a 24-hour detention order to facilitate comprehensive interrogations. Meanwhile, operations are actively underway to track down the third absconding suspect.
KRTV Network-Local News

Comments