சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 43.5 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 43.5 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு
வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களைச் சுயதொழில் மூலம் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் நோக்கில், சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு 43.5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் மற்றும் உதவிகள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
"எதிர்நீச்சல் போட முயற்சிக்கின்ற ஊக்கமுள்ள மக்களுக்குத் துணையாக..." எனும் கருப்பொருளில் தேசிய சமூக வலுவூட்டல் மாதம் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக, சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்நிதியுதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
நிகழ்வு மற்றும் முக்கிய விருந்தினர்கள்
சம்மாந்துறை பிரதேச செயலாளர் S. L. M. ஹனீபா அவர்களின் தலைமயில் பிரதேச செயலக மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், கரையோர பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் கலந்து சிறப்பித்து, பயனாளிகளுக்கான தொழில் உபகரணங்களை வழங்கி வைத்தார்
தேசிய மக்கள் சக்தி (NPP) அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினரும், 'க்ளீன் சிறிலங்கா' ஜனாதிபதி செயலக சம்மாந்துறை பிரதேச இணைப்பாளருமான Y. P. நபாஸ் (JP) கலந்து கொண்டார்.
கலந்து கொண்ட அதிகாரிகள்
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக கணக்காளர், பிரஜாசக்தி தவிசாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் பல குடும்பங்கள் சுயதொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் வலுப்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் : ARM. மஜீட்
KR TV Network
KR TV Lankan Voice
இலங்கைச் செய்தி
#සම්මාන්තුරේ ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේදී ලක්ෂ 43.5ක ජීවනෝපාය ආධාර පිරිනමයි
අඩු ආදායම්ලාභී පවුල් ස්වයන් රැකියා මගින් ආර්ථික වශයෙන් බලගැන්වීමේ අරමුණින්, සම්මාන්තුරේ ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ තෝරාගත් පවුල් සඳහා රුපියල් ලක්ෂ 43.5ක් වටිනා ජීවනෝපාය උපකරණ සහ ආධාර නිල වශයෙන් පිරිනමන ලදී.
ව්යාපෘතියේ පසුබිම සහ අරමුණ
"උත්සාහවන්ත ජනතාව ශක්තිමත් කිරීම වෙනුවෙන්..." යන තේමාව යටතේ ජූලි 15 සිට අගෝස්තු 15 දක්වා ක්රියාත්මක ජාතික සමාජ බලගැන්වීමේ මාසයට සමගාමීව මෙම වැඩසටහන සංවිධානය කර තිබුණි. සම්මාන්තුරේ ප්රදේශයේ ව්යවසායකයින්ගේ සහ ජීවනෝපාය මාර්ග නංවාලීම මෙහි ප්රධාන අරමුණයි.
ප්රධාන ආරාධිතයින්
සම්මාන්තුරේ ප්රාදේශීය ලේකම් S. L. M. හනීෆා මහතාගේ ප්රධානත්වයෙන් ප්රාදේශීය ලේකම් කාර්යාලීය ශාලාවේදී මෙම උත්සවය පැවැත්විණි.
පාර්ලිමේන්තු මන්ත්රී, වෙරළබඩ ප්රදේශ සංවර්ධන කමිටු සභාපති සහ දේශපාලන මණ්ඩල සභික අබූබකර් ආදම්බාවා මහතා විසින් ප්රතිලාභීන් වෙත උපකරණ බෙදාදීම සිදුකරන ලදී.
ජාතික ජන බලවේගයේ (NPP) සංවිධායක, ප්රාදේශීය සභා මන්ත්රී සහ 'ක්ලීන් ශ්රී ලංකා' ජනාධිපති ලේකම් කාර්යාල සම්මාන්තුරේ ප්රාදේශීය සම්බන්ධීකාරක Y. P. නෆාස් මහතා (JP).
හභාගී වූ නිලධාරීන්/
සහකාර ප්රාදේශීය ලේකම්, නියෝජ්ය ක්රමසම්පාදන අධ්යක්ෂ, ප්රාදේශීය ලේකම් කාර්යාල ගණකාධිකාරී, ප්රජාශක්ති සභාපතිවරුන්, සමෘද්ධි සංවර්ධන නිලධාරීන් ඇතුළු පිරිසක් මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.
වාර්තාව: ARM. මජීඩ්
KR TV Network
KR TV Lankan Voice
ශ්රී ලංකා පුවත්
#Rs. 4.35 Million Livelihood Assistance Distributed in sammanthurai
With the objective of economically empowering low-income families through self-employment, livelihood equipment and support worth Rs. 4.35 million were officially handed over to selected beneficiaries in the Sammanthurai Divisional Secretariat division.
This initiative was conducted under the National Social Empowerment Month theme, "Supporting resilient individuals striving for progress," observed from July 15 to August 15. The program aims to strengthen the livelihoods of self-employed individuals and families in Sammanthurai.
The distribution ceremony took place at the Divisional Secretariat auditorium under the chairmanship of Sammanthurai Divisional Secretary S. L. M. Haneefa.
Member of Parliament, Chairman of the Coastal Area Development Committee, and Political Council Member Abubakar Adambawa handed over the self-employment equipment to the beneficiaries.
National People's Power (NPP) Organizer, Local Authority Member, and Clean Sri Lanka Presidential Secretariat Sammanthurai Coordinator Y. P. Nafas (JP).
Participating Officials
The event was attended by the Assistant Divisional Secretary, Deputy Director of Planning, Secretariat Accountant, Prajashakthi Chairpersons, Samurdhi Development Officers, and the beneficiaries.
Reporte : ARM. Majeed
KR TV Network
KR TV Lankan Voice
Sri Lanka News





Comments