Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கி பிரயோகம்


 மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபருமான 'பெக்கோ சமன்' (Backhoe Saman) என்பவரின் தாய் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது பூஸ்ஸ அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 'பெக்கோ சமன்' என்பவரின் தாயாரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான பழிவாங்கல் மோதலின் காரணமாகவே இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், கொலையாளிகளைக் கைது செய்வதற்காக மித்தெனிய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

செய்தியாளர்:பர்ஹானா பதுறுதீன்

KR TV Network

KR TV Lankan Voice

உள்நாட்டுச் செய்தி


#මිත්තෙනිය, උල්හිටියාව ප්‍රදේශයේදී යතුරුපැදියකින් පැමිණි නාඳුනන තුවක්කුකරුවන් දෙදෙනෙකු කළ වෙඩි තැබීමකින්, සංවිධානාත්මක පාතාල කල්ලි නායකයෙකු වන 'බැක්හෝ සමන්' නැමැත්තාගේ මව ජීවිතක්ෂයට පත්ව තිබේ.


අද පස්වරු 6.00ට පමණ මෙම වෙඩි තැබීම සිදුව ඇති අතර, වෙඩි වැදීමෙන් බරපතල තුවාල ලැබූ කාන්තාව රෝහල් ගත කිරීමෙන් අනතුරුව මියගොස් ඇති බව පොලිසිය පවසයි. දැනට බූස්ස අධිආරක්ෂිත බන්ධනාගාරයේ රඳවා සිටින 'බැක්හෝ සමන්'ගේ මව මෙසේ ඝාතනය වී ඇත. පාතාල කල්ලි අතර පවතින වෛරයේ ප්‍රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුවන්නට ඇති බවට සැක කෙරෙන අතර, පලාගිය සැකකරුවන් අත්අඩංගුවට ගැනීම සඳහා මිත්තෙනිය පොලිසිය මගින් පුළුල් විමර්ශන ආරම්භ කර ඇත.


වාර්තාකරු:පර්හානා පතුරුදීන්


KR TV Network

KR TV Lankan Voice

දේශීය පුවත්


#The mother of notorious underworld figure and organized crime suspect "Backhoe Saman" (also known as Bako Saman) has been shot dead in the Ulhitiyawa area of Middeniya.


The incident occurred at around 6:00 PM today when two unidentified gunmen arriving on a motorcycle opened fire before fleeing the scene. Although the victim was rushed to the hospital with severe gunshot injuries, she succumbed to her wounds shortly after, police confirmed. The deceased is the mother of Backhoe Saman, who is currently being held at the Boossa High Security Prison. Police suspect the attack may be linked to an ongoing feud between rival underworld groups. Middeniya Police have launched an intensive investigation to track down and arrest the perpetrators.


Reporter_Farhana Pathurdeen


KR TV Network

KR TV Lankan Voice

Local News

Comments