இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
புதிய காத்தான்குடி டெலிகொம் வீதியைச் சேர்ந்த தங்கம்மா என அழைக்கப்படும் நூறு முஹம்மது ஹவ்வா உம்மா அவர்கள் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வபாத்தானார்கள்.
அன்னார் மர்ஹூம் நூறு முஹம்மது மற்றும் மர்ஹூமா பாத்திமா ஆகியோரின் அன்பு மகளும், அல்ஹாஜ் மர்ஹூம் முஹம்மது முஸ்தபா (கோப்புரேஷன் றைஸ் மில்) அவர்களின் அன்பு மனைவியும், பரீதா உம்மா மற்றும் பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
மேலும், அல்ஹாஜ் முஹம்மது முஸ்தபா மற்றும் ஹாஜியாணி அன்ஸா அப்துர் ரஹ்மான் ஆகியோரின் மாமியும், ஜனாபா மசாமினா ஆசிரியர், மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் மஸாஹிமா, சட்டத்தரணி மஸாமிஹா மற்றும் பொறியியலாளர் முப்தி ஆகியோரின் மூத்தம்மாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று இரவு 10.30 மணிக்கு புதிய காத்தான்குடி பத்ரியா ஜும்மா பள்ளிவாயலில் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, அன்னாரின் ஜனாஸா அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் துஆச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்:
குடும்பத்தினர்

Comments