Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் மற்றும் அழகுபடுத்தும் நோக்கில் விசேட சிரமதானப் பணி!








 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் மற்றும் அழகுபடுத்தும் நோக்கில் விசேட சிரமதானப் பணி!


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் மற்றும் அழகுபடுத்தும் உன்னத நோக்கோடு விசேட சிரமதானப் பணி ஒன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.


 நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்துசெல்லும் இப்பிரதான மருத்துவமனை வளாகத்தை சுகாதாரமானதாகவும், தூய்மையானதாகவும், அழகிய சூழல் கொண்டதாகவும் பேணுவதே இச்சிரமதானத்தின் பிரதான நோக்கமாகும்.


 மருத்துவமனைச் சுற்றுப்புறச் சூழலில் தேங்கிக் கிடந்த கழிவுகளை அகற்றுதல், களைகளை வெட்டுதல் மற்றும் மரக்கன்றுகளைப் பராமரித்தல் போன்ற துப்புரவுப் பணிகள் ஆர்வத்துடன் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவமனை ஊழியர்கள், நலன்விரும்பிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் ஒன்றிணைந்து உழைத்தனர்.


 கே.ஆர்.டி.வி நெட்வொர்க் 

உள்நாட்டுச் செய்தி


මඩකලපු ශික්ෂණ රෝහල් පරිශ්‍රය පවිත්‍ර කිරීමේ සහ අලංකාර කිරීමේ විශේෂ ශ්‍රමදාන මෙහෙයුමක්!


මඩකලපු ශික්ෂණ රෝහල් පරිශ්‍රය පවිත්‍ර කර අලංකාරවත් ලෙස පවත්වාගෙන යාමේ අරමුණින් විශේෂ ශ්‍රමදාන වැඩසටහනක් සාර්ථකව ක්‍රියාත්මක කර තිබේ.


දිනපතා දහස් සංඛ්‍යාත රෝගීන් සහ ජනතාව පැමිණෙන මෙම ප්‍රධාන රෝහල් පරිශ්‍රය සෞඛ්‍යාරක්ෂිත සහ ප්‍රියජනක පරිසරයක් බවට පත්කිරීම මෙහි ප්‍රධාන අරමුණයි.


 රෝහල් පරිශ්‍රයේ කසළ ඉවත් කිරීම, වල්පැලෑටි කපා ඉවත් කිරීම සහ පරිසරය පිරිසිදු කිරීමේ කටයුතුවලදී රෝහල් කාර්ය මණ්ඩලය සහ ස්වේච්ඡා සේවකයින් එක්ව දැඩි උනන්දුවකින් යුතුව කටයුතු කරන ලදී.


 කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක්

දේශීය පුවත්


 Special Voluntary Cleanup Campaign Launched to Clean and Beautify the Batticaloa Teaching Hospital Premises!


A special community cleanup campaign has been successfully organized with the primary objective of cleaning, sanitizing, and beautifying the Batticaloa Teaching Hospital premises.


 The initiative aims to maintain a hygienic, clean, and pleasant environment for the thousands of patients and visitors who frequent the premier medical institution daily.


 Hospital staff, volunteers, and well-wishers enthusiastically joined hands to clear out waste, trim overgrowth, and undertake comprehensive landscaping and sanitation tasks across the hospital grounds.


KRTV Network-Local News

Comments