மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் காத்தான்குடி நகர சபைக்கு விசேட விஜயம்: தவிசாளர் எம்.எச்.எம். அஸ்பாரின் தலைமையில் களப்பயணம் மற்றும் விசேட சந்திப்பு
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் காத்தான்குடி நகர சபைக்கு விசேட விஜயம்: தவிசாளர் எம்.எச்.எம். அஸ்பாரின் தலைமையில் களப்பயணம் மற்றும் விசேட சந்திப்பு
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எம்.எச்.எம். அஸ்பார் அவர்களின் விசேட அழைப்பின் பேரில் காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலச் சேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான காணொளித் தொகுப்பு காண்பிக்கப்பட்டு தவிசாளரினால் விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவீனமயப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பொது நூலகப் பகுதிக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அதன் வசதிகள் காண்பிக்கப்பட்டன. மேலும், கடற்கரைப் பகுதியைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள், திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டம், கழிவுகளைத் தரம் பிரித்தல், மறுசுழற்சி மூலம் இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் கழிவகற்றல் பொறிமுறைகள் குறித்து நேரடியாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அல்-அக்ஸா பள்ளிவாயலுக்கும் கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகர சபையினால் நிர்வகிக்கப்படும் படகுச் சவாரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. பின்னர் காத்தான்குடி மரபுரிமை நூதனசாலைக்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அங்குள்ள வரலாற்றுச் சின்னங்கள், சேகரிக்கப்பட்ட பழம்பொருட்கள் குறித்து தவிசாளர் தெளிவுபடுத்தினார். இந்நிகழ்வின் நிறைவில் ஊடகவியலாளர்கள் தவிசாளரினால் கௌரவிக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர்கள் சார்பிலும் தவிசாளருக்குக் கௌரவம் அளிக்கப்பட்டது. சிலோன் மீடியா போரத்தின் தலைவர், பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் காத்தான்குடி ஊடகவியலாளர்களின் நன்றியுரையுடன் இந்த சினேகபூர்வ விஜயம் இனிதே நிறைவடைந்தது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
මඩකලපුව සහ අම්පාර දිස්ත්රික් මුස්ලිම් මාධ්යවේදීන් කාත්තන්කුඩි නගර සභාවේ විශේෂ නිරීක්ෂණ චාරිකාවක: සභාපති එම්.එච්.එම්. අස්ෆාර්ගේ ප්රධානත්වයෙන් සුහද හමුවක්
මඩකලපුව සහ අම්පාර දිස්ත්රික්ක නියෝජනය කරන මුස්ලිම් මාධ්යවේදීන් පිරිසක් කාත්තන්කුඩි නගර සභාවේ සභාපති එම්.එච්.එම්. අස්ෆාර් මහතාගේ විශේෂ ආරාධනයකට අනුව කාත්තන්කුඩි නගර සභා පරිශ්රය වෙත නිල සංචාරයක නිරත වූහ. එහිදී නගර සභාව මඟින් ක්රියාත්මක කරනු ලබන මහජන සේවා සහ සංවර්ධන ව්යාපෘති පිළිබඳ වීඩියෝ දර්ශන මඟින් සභාපතිවරයා විසින් මාධ්යවේදීන් දැනුවත් කරන ලදී. අනතුරුව නවීකරණය කරන ලද කාත්තන්කුඩි මහජන පුස්තකාල පරිශ්රය නිරීක්ෂණය කිරීමට අවස්ථාව සලසා දුන් අතර, වෙරළ තීරය පිරිසිදු කිරීමේ ක්රියාමාර්ග, ඝන අපද්රව්ය කළමනාකරණය, කසළ ප්රතිචක්රීකරණය මඟින් කාබනික පොහොර නිෂ්පාදනය කිරීම සහ කසළ බැහැර කිරීමේ ක්රමවේදයන් පිළිබඳවද සවිස්තරාත්මක පැහැදිලි කිරීමක් සිදු කෙරිණි. මීට අමතරව අල්-අක්සා පල්ලිය වෙතද ක්ෂේත්ර චාරිකාවක් සිදු කෙරිණි. ඉන්පසු නගර සභාව මඟින් පාලනය වන බෝට්ටු සවාරි අත්දැකීම ලබා දෙමින් මාධ්යවේදීන්ට දිවා ආහාරය පිරිනමන ලද අතර, කාත්තන්කුඩි උරුම කෞතුකාගාරය වෙත ගොස් එහි ඇති ඓතිහාසික වස්තූන් පිළිබඳවද තොරතුරු හුවමාරු කර ගැනිණි. මෙම වැඩසටහන අවසානයේ සභාපතිවරයා විසින් මාධ්යවේදීන් ඇගයීමට ලක් කළ අතර, මාධ්යවේදීන් විසින්ද සභාපතිවරයා වෙත සිය ගෞරවය පුද කළහ. සිලෝන් මීඩියා ෆෝරම් හි සභාපතිවරයා ඇතුළු මාධ්යවේදීන්ගේ ස්තූති කතාවලින් අනතුරුව මෙම සුහද සංචාරය සාර්ථකව නිමාවට පත් විය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Batticaloa and Ampara Muslim Journalists Complete Comprehensive Study Tour at Kattankudy Urban Council on Chairman M.H.M. Asfar's Invitation
A delegation of Muslim journalists from the Batticaloa and Ampara Districts conducted an extensive official tour of the Kattankudy Urban Council following an invitation extended by Urban Council Chairman M.H.M. Asfar. The engagement commenced with a comprehensive multimedia presentation illustrating municipal public services, infrastructure initiatives, and urban development projects. The journalists were guided through the modernized Kattankudy Public Library and inspected the coastal beach cleanup operations alongside the municipal solid waste management facility, observing waste segregation systems, garbage clearance protocols, and the mechanical conversion of waste into organic fertilizer. The delegation also conducted a field visit to the Al-Aqsa Mosque. Following a municipal lagoon boat excursion and luncheon, the media delegation visited the Kattankudy Cultural Museum, where Chairman Asfar detailed the historical curation and preservation of community antiquities. The session concluded with mutual felicitations between the Urban Council Chairman and the journalists, alongside formal votes of thanks presented by the President of the Ceylon Media Forum and regional media representatives.
KR TV Network - Local News













Comments