நாளை சூரிய கிரகணம் நிகழவுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு: இலங்கைக்குத் தென்படாது
நாளை சூரிய கிரகணம் நிகழவுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு: இலங்கைக்குத் தென்படாது
நாளை ஆகஸ்ட் பன்னிரண்டாம் திகதி இரவு சூரிய கிரகணம் ஒன்று நிகழவுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இந்த சூரிய கிரகணமானது இலங்கை வாழ் மக்களுக்குத் தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி பகுதி நேர சூரிய கிரகணம் நாளை பன்னிரண்டாம் திகதி இரவு ஒன்பது மணி நான்கு நிமிடத்திற்கு ஆரம்பமாகி, முழு சூரிய கிரகணம் இரவு பத்து மணி இருபத்தெட்டு நிமிடத்திற்கு தோற்றம்பெறும். அதி உச்சி சூரிய கிரகணம் இரவு பதினொன்று மணி பதினாறு நிமிடத்திற்கு நிகழவுள்ளதுடன், முழு சூரிய கிரகணம் நள்ளிரவு பன்னிரண்டு மணி நான்கு நிமிடத்திற்கும், பகுதி சூரிய கிரகணம் அதிகாலை ஒரு மணி இருபத்தேழு நிமிடத்திற்கும் முடிவடையும். இந்த சூரிய கிரகணமானது ஐரோப்பிய கண்டத்தின் பெரும்பாலான நாடுகள், ஆசிய பிராந்தியத்தின் வட பகுதி, மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவின் வடக்கு பிரதேசம், வட பசிபிக், வட அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகா போன்ற பிரதேசங்களில் வாழும் மக்களுக்குத் தெளிவாகத் தென்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KR TV Network / KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்திகள்
හෙට සූර්යග්රහණයක් සිදුවන බව කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව නිවේදනය කරයි: ශ්රී ලංකාවට දර්ශනය නොවේ
හෙට එනම් අගෝස්තු දොළොස්වන දින රාත්රියේ සූර්යග්රහණයක් සිදුවන බව කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව විශේෂ නිවේදනයක් නිකුත් කරමින් සඳහන් කරයි.
මෙම සූර්යග්රහණය ශ්රී ලාංකිකයින්ට දර්ශනය නොවන බව ප්රකාශ කර ඇත. ශ්රී ලංකා වේලාවෙන් අර්ධ සූර්යග්රහණය හෙට දොළොස්වන දින රාත්රී නවයයි හතරට ආරම්භ වන අතර, පූර්ණ සූර්යග්රහණය රාත්රී දහයයි විසිඅටට ආරම්භ වේ. උපරිම සූර්යග්රහණය රාත්රී එකොළහයි දහසයට සිදුවන අතර පූර්ණ සූර්යග්රහණය මධ්යම රාත්රී දොළහයි හතරට සහ අර්ධ සූර්යග්රහණය අලුයම එකයි විසිහතට අවසන් වීමට නියමිතය. මෙම සූර්යග්රහණය යුරෝපයේ බොහොමයක් රටවල්, ආසියානු කලාපයේ උතුරු ප්රදේශය, බටහිර අප්රිකාව, උතුරු ඇමෙරිකාවේ උතුරු ප්රදේශය, උතුරු පැසිෆික්, උතුරු අත්ලාන්තික් සහ ඇන්ටාක්ටිකාව යන ප්රදේශවල වෙසෙන ජනතාවට පැහැදිලිව දර්ශනය වන බව කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව වැඩිදුරටත් සඳහන් කරයි.
KR TV Network / KR TV Lankan Voice
දේශීය පුවත්
Solar Eclipse Tomorrow Night Will Not Be Visible to Sri Lanka: Meteorology Department
A solar eclipse is set to occur tomorrow night, August 12, according to a special announcement issued by the Department of Meteorology, Sri Lanka.
The department clarified that this astronomical event will not be visible to the people of Sri Lanka. As per Sri Lankan Standard Time, the partial solar eclipse will begin tomorrow night at 21:04:15, with the total solar eclipse commencing at 22:28:09. The maximum phase of the eclipse will occur at 23:16:06, while the total phase will end at 00:04:07 on August 13, followed by the conclusion of the partial phase at 01:27:57. The eclipse will be visible across most countries in Europe, Northern Asia, West Africa, northern parts of North America, North Pacific, North Atlantic, and Antarctica regions.
KR TV Network / KR TV Lankan Voice
Local News


Comments