தேசிய ரீதியில் சாதித்த ஓட்டமாவடி எஸ்.டபிள்யூ.எஸ். சஸ்னா – KR TV NETWORK சார்பில் வாழ்த்துக்கள்!
தேசிய ரீதியில் சாதித்த ஓட்டமாவடி எஸ்.டபிள்யூ.எஸ். சஸ்னா – KR TV NETWORK சார்பில் வாழ்த்துக்கள்!
இலங்கை திட்டமிடல் சேவைக்கான (Sri Lanka Planning Service) நியமனங்களுக்கான பொதுப் போட்டிப் பரீட்சையின் இரண்டாம் கட்டமான Common Competitive Examination – Stage II இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நியமனப் பட்டியல் இன்று (17) வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தமிழ்மொழி மூலம் தேசிய ரீதியில் தேர்ச்சி பெற்ற இருவரில் ஒருவராகவும், முஸ்லிம் சமூகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரேயொருவராகவும் ஓட்டமாவடியைச் சேர்ந்த எஸ்.டபிள்யூ.எஸ். சஸ்னா தெரிவாகியுள்ளார்.
தேசிய மட்டத்தில் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ள எஸ்.டபிள்யூ.எஸ். சஸ்னா, ஓட்டமாவடி பிரதேசத்திற்கும் தனது பெற்றோருக்கும் மட்டுமன்றி முழு முஸ்லிம் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் சல்மான் வஹாப் ஆசிரியரின் புதல்வியும், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எல். இஸ்மா லெப்பை ஹாஜியாரின் பேத்தியுமாவார்.
இலங்கை திட்டமிடல் சேவைக்கு தெரிவாகியுள்ள எஸ்.டபிள்யூ.எஸ். சஸ்னா அவர்களுக்கு KR TV NETWORK | KR TV LANKAN VOICE ஊடகக் குழுமத்தின் சார்பில் எமது இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது கல்வி மற்றும் தொழில்சார் பயணத்தில் மேலும் பல உயரங்களை அடைந்து, நாட்டுக்கும் சமூகத்திற்கும் சிறந்த சேவையை வழங்கக்கூடிய அதிகாரியாக சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.
அவருக்கான நியமனம் எதிர்வரும் 01.09.2026 அன்று வழங்கப்படவுள்ளது.
KR TV NETWORK | KR TV LANKAN VOICE
ජාතික මට්ටමින් ජයග්රහණයක් ලැබූ ඔට්ටමාවඩි එස්.ඩබ්ලිව්.එස්. සස්නාට KR TV NETWORK වෙතින් උණුසුම් සුබ පැතුම්!
ශ්රී ලංකා සැලසුම් සේවයට (Sri Lanka Planning Service) බඳවා ගැනීම සඳහා පැවති පොදු තරග විභාගයේ දෙවන අදියර වන Common Competitive Examination – Stage II සමත් වූ අපේක්ෂකයන් සඳහා වන පත්වීම් ලැයිස්තුව අද (17) නිකුත් කර තිබේ.
එහිදී දෙමළ මාධ්යයෙන් ජාතික මට්ටමින් තේරී පත් වූ දෙදෙනාගෙන් එක් අයෙකු ලෙසත්, මුස්ලිම් ප්රජාව නියෝජනය කරමින් තේරී පත් වූ එකම අයෙකු ලෙසත් ඔට්ටමාවඩි ප්රදේශයේ එස්.ඩබ්ලිව්.එස්. සස්නා මහත්මිය තේරී පත්වී ඇත.
ජාතික මට්ටමින් ලැබූ මෙම විශිෂ්ට ජයග්රහණය තුළින් ඇය ඔට්ටමාවඩි ප්රදේශයටත්, සිය දෙමාපියන්ටත් මෙන්ම සමස්ත මුස්ලිම් ප්රජාවටත් මහත් අභිමානයක් ගෙන දී තිබේ.
ඇය විශ්රාමික ගුරු උපදේශක සල්මාන් වහාබ් මහතාගේ දියණිය වන අතර, ඔට්ටමාවඩි ප්රාදේශීය සභාවේ හිටපු සභාපති ඒ.එල්. ඉස්මා ලෙබ්බේ හජ්ජියාර් මහතාගේ මිනිබිරියද වේ.
ශ්රී ලංකා සැලසුම් සේවයට තේරී පත්වූ එස්.ඩබ්ලිව්.එස්. සස්නා මහත්මියට KR TV NETWORK | KR TV LANKAN VOICE මාධ්ය සමූහය වෙනුවෙන් අපගේ හෘදයාංගම සුබ පැතුම් සහ උණුසුම් සුබාශිංසන පිරිනමමු.
ඇයගේ ඉදිරි වෘත්තීය ගමන තව තවත් සාර්ථක වී, රටටත් සමාජයටත් වටිනා සේවයක් ඉටු කරන දක්ෂ නිලධාරිනියක ලෙස ඉහළටම ගමන් කිරීමට හැකි වේවායි අපි ප්රාර්ථනා කරමු.
ඇයගේ පත්වීම 2026.09.01 දින ලබාදීමට නියමිතය.
KR TV NETWORK | KR TV LANKAN VOICE
National Achievement by Ottamavadi’s S.W.S. Sasna – Warm Congratulations from KR TV NETWORK!
The appointment list for candidates who successfully passed Stage II of the Common Competitive Examination conducted for recruitment to the Sri Lanka Planning Service has been released today (17).
S.W.S. Sasna of Ottamavadi has achieved a remarkable national-level distinction by being one of only two candidates selected through the Tamil Medium and the only candidate selected from the Muslim community.
Her outstanding achievement at the national level has brought immense pride not only to Ottamavadi and her parents but also to the wider Muslim community.
She is the daughter of retired Teacher Advisor Salman Wahab and the granddaughter of former Chairman of the Ottamavadi Pradeshiya Sabha, A.L. Isma Lebbe Hajiyar.
KR TV NETWORK | KR TV LANKAN VOICE extends its heartfelt congratulations and best wishes to S.W.S. Sasna on her selection to the Sri Lanka Planning Service.
We wish her continued success in her professional journey and hope that she will reach even greater heights while making a valuable contribution to the country and society through her service.
Her appointment is scheduled to be granted on 1 September 2026.
KR TV NETWORK | KR TV LANKAN VOICE

Comments