கொழும்பு மட்டக்குளியில் சொகுசு கார் மோதி கோர விபத்து: பாடசாலை மாணவிகளின் தந்தை உட்பட மூவர் உயிரிழப்பு, 13 பேர் காயம் - சாரதி எதிர்வரும் 30 வரை விளக்கமறியல்
கொழும்பு மட்டக்குளியில் சொகுசு கார் மோதி கோர விபத்து: பாடசாலை மாணவிகளின் தந்தை உட்பட மூவர் உயிரிழப்பு, 13 பேர் காயம் - சாரதி எதிர்வரும் 30 வரை விளக்கமறியல்
கொழும்பு மட்டக்குளி பகுதியில் நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில் அதிவேகமாகப் பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதி ஏற்படுத்திய கோர விபத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்தில், தனது மகளை மேலதிக வகுப்பிலிருந்து (Tuition class) மோட்டார் சைக்கிளில் அழைத்து வருவதற்காகச் சென்றிருந்த கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளான யுவஸ்ரீ (தரம் 6C), அக்சயா (தரம் 11C) ஆகியோரின் தந்தையான திரு. சந்திரசேகர் (வயது 44) என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய BYD ரக மின்சார காரை செலுத்திய 52 வயதுடைய நபர், கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு முச்சக்கர வண்டியை மோதி, பின்னர் சந்திரசேகரின் மோட்டார் சைக்கிளையும், அதனைத் தொடர்ந்து மற்றுமொரு முச்சக்கர வண்டியையும் பலமாக மோதியுள்ளார். இதில் நான்கு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட மட்டக்குளியைச் சேர்ந்த 52 வயதுடைய குறித்த காரின் சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / விபத்து மற்றும் பொலிஸ் புலனாய்வுச் செய்தி
කොළඹ මට්ටක්කුලියේදී සුඛෝපභෝගී මෝටර් රථයක් ගැටී සිදුවූ බිහිසුණු අනතුරකින් තිදෙනෙකු මරුට, 13කට තුවාල: සැකකාර රියදුරු 30 දක්වා රක්ෂිත බන්ධනාගාරයට
කොළඹ මට්ටක්කුලිය ප්රදේශයේදී ඊයේ රාත්රී 8:30ට පමණ අධික වේගයෙන් පැමිණි මෝටර් රථයක් වේගය පාලනය කරගත නොහැකිව යතුරුපැදියක සහ ත්රිරෝද රථ දෙකක ගැටීමෙන් සිදුවූ බිහිසුණු රිය අනතුරකින් පුද්ගලයින් තිදෙනෙකු ජීවිතක්ෂයට පත්ව තවත් 13 දෙනෙකු බරපතළ තුවාල ලබා තිබේ.
මෙම අනතුරින් මියගිය අය අතර, සිය දියණිය උපකාරක පන්තියක සිට නිවස බලා රැගෙන ඒම සඳහා යතුරුපැදියෙන් ගොස් සිටි කොළඹ රාමනාදන් හින්දු කාන්තා විද්යාලයේ ඉගෙනුම ලබන ශිෂ්යාවන් දෙදෙනෙකුගේ පියෙකු වන 44 හැවිරිදි චන්ද්රසේකර් මහතාද වන බව හඳුනාගෙන ඇත.
අනතුර සිදුකළ BYD වර්ගයේ විදුලි මෝටර් රථයේ 52 හැවිරිදි රියදුරුට වේගය පාලනය කරගත නොහැකිව මාර්ගයේ ගමන් ගත් ත්රිරෝද රථයක ගැටී, අනතුරුව යතුරුපැදියේ සහ තවත් ත්රිරෝද රථයක ගැටීමෙන් වාහන හතරටම දැඩි හානි සිදුව ඇත. අනතුර සම්බන්ධයෙන් අත්අඩංගුවට ගත් මට්ටක්කුලිය ප්රදේශයේ පදිංචි 52 හැවිරිදි සැකකාර මෝටර් රථ රියදුරු එළඹෙන සැප්තැම්බර් 30 වන දින දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කිරීමට අලුත්කඩේ මහේස්ත්රාත් අධිකරණය අද (17) නියෝග කළේය. සිද්ධිය සම්බන්ධයෙන් මට්ටක්කුලිය පොලිසිය වැඩිදුර විමර්ශන පවත්වයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / රිය අනතුරු සහ අධිකරණ පුවත්
Tragic Multi-Vehicle Collision in Mattakkuliya Claims Three Lives, Injures 13; Driver Remanded Till September 30
A horrific road accident occurred in Mattakkuliya, Colombo, at approximately 8:30 PM yesterday when a speeding car lost control and slammed into a motorcycle and two three-wheelers, resulting in the deaths of three individuals and injuries to thirteen others.
Among the deceased was 44-year-old Chandrasekar, a father of two schoolgirls studying at Ramanathan Hindu Ladies College, who had traveled on his motorcycle to pick up his daughter from an evening tuition class.
According to police findings, the 52-year-old driver of a BYD car lost vehicular control, rear-ending a moving three-wheeler before crashing into the motorcycle and another three-wheeler, causing severe wreckage across all four vehicles. The driver, a 52-year-old resident of Mattakkuliya, was arrested and produced before the Hulftsdorp Magistrate’s Court today (17), where he was ordered remanded in judicial custody until September 30. Mattakkuliya Police are conducting comprehensive investigations into the incident.
KR TV Network - Local News / Accidents and Law Enforcement

Comments