Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு வெளியானது: நௌபர் மௌலவி உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை පාස්කු නඩු තීන්දුව ප්‍රකාශයට පත් කෙරෙයි: නවුෆර් මවුලවි ඇතුළු 15ක් වරදකරුවන්; 9ක් නිදොස් කොට නිදහස් Easter Sunday Attacks Trial Verdict Delivered: 15 Convicted Including Naufer Moulavi; 9 Acquitted and Released


 உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு வெளியானது: நௌபர் மௌலவி உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை

පාස්කු නඩු තීන්දුව ප්‍රකාශයට පත් කෙරෙයි: නවුෆර් මවුලවි ඇතුළු 15ක් වරදකරුවන්; 9ක් නිදොස් කොට නිදහස්

Easter Sunday Attacks Trial Verdict Delivered: 15 Convicted Including Naufer Moulavi; 9 Acquitted and Released


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இன்று (22) பிற்பகல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வழக்கில் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த நௌபர் மௌலவி உள்ளிட்ட 15 பிரதிவாதிகளை குற்றவாளிகளாகக் கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயம் தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, குறித்த குற்றச்சாட்டுகளின் கீழ் பெயரிடப்பட்டிருந்த ஏனைய ஒன்பது பிரதிவாதிகளையும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து, முழுமையாக விடுதலை செய்வதாகவும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது. குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட பிரதிவாதிகளுக்கான தண்டனை விபரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / நீதித்துறை மற்றும் முக்கிய தீர்ப்பு விவகாரம்


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


2019 වසරේ සිදු වූ පාස්කු ඉරිදා මරාගෙන මැරෙන ත්‍රස්ත ප්‍රහාර මාලාවට අදාළ ප්‍රධාන නඩුවේ ඓතිහාසික තීන්දුව කොළඹ ත්‍රිපුද්ගල විශේෂ මහාධිකරණ විනිසුරු මඩුල්ල විසින් අද (22) පස්වරුවේ නිල වශයෙන් ප්‍රකාශයට පත් කරන ලදී.


ප්‍රහාරයට කුමන්ත්‍රණය කිරීම සහ ආධාර අනුබල දීම ඇතුළු චෝදනාවන්ට වරදකරුවන් කරමින් නවුෆර් මවුලවි ඇතුළු විත්තිකරුවන් 15 දෙනෙකු වරදකරුවන් බවට කොළඹ විශේෂ මහාධිකරණ විනිසුරු මඩුල්ල තීන්දු කළේය. එමෙන්ම අදාළ චෝදනා එල්ල වී සිටි සෙසු විත්තිකරුවන් නව දෙනෙකු සියලු චෝදනාවලින් නිදොස් කොට සම්පූර්ණයෙන්ම නිදහස් කිරීමට ද විනිසුරු මඩුල්ල නියෝග කර සිටියේය. මෙලෙස වරදකරුවන් වූ විත්තිකරුවන්ට දඬුවම් නියම කිරීම සඳහා නඩුවේ ඉදිරි කටයුතු කල් තබා ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අධිකරණ සහ විශේෂ නඩු තීන්දු පුවත්


Reporter: Farhana Badurdeen


The Colombo Special High Court Trial-at-Bar bench delivered its landmark verdict today (22) in the overarching trial concerning the 2019 Easter Sunday coordinated suicide bombings.


The three-judge High Court bench convicted 15 defendants, including Naufer Moulavi, having found them guilty of charges encompassing criminal conspiracy and aiding and abetting the terror attacks. Simultaneously, the bench acquitted and ordered the outright release of nine other defendants who were tried under the same indictments. Sentencing proceedings for the 15 convicted defendants have been temporarily stood down for determination.


KR TV Network - Local News / Judicial Affairs and Landmark Rulings

Comments