Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பனைமரத்தில் மோதி விபத்து: 22 வயது இளைஞன் பரிதாப பலி


 கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பனைமரத்தில் மோதி விபத்து: 22 வயது இளைஞன் பரிதாப பலி


கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உருத்திரபுரம் இந்துக் கல்லூரிக்கு அண்மித்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமிருந்த பனை மரத்துடன் பலமாக மோதியுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உடனடியாக மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய புஷ்பராசா சமர்நிலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விபத்து தொடர்பாகக் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


කිලිනොච්චියේදී වේගය පාලනය කරගත නොහැකි වූ යතුරුපැදියක් තල් ගසක ගැටී 22 හැවිරිදි තරුණයෙකු මරුට


කිලිනොච්චිය පොලිස් වසමට අයත් උරුත්තිරපුරම් D7 ප්‍රදේශයේදී අද දහවල් සිදුවූ රිය අනතුරකින් තරුණයෙකු ජීවිතක්ෂයට පත්ව තිබේ. උරුත්තිරපුරම් හින්දු විද්‍යාලය ආසන්න මාර්ගයේ ගමන් කරමින් තිබූ යතුරුපැදියක් රියදුරුට වේගය පාලනය කරගත නොහැකිව මාර්ගය අයිනේ තිබූ තල් ගසක මුහුණට මුහුණ ගැටීමෙන් මෙම අනතුර සිදුව ඇත. අනතුරින් බරපතළ තුවාල ලැබූ තරුණයා වහාම කිලිනොච්චිය මූලික රෝහලට ඇතුළත් කළද, දැඩි සත්කාර ඒකකයේ ප්‍රතිකාර ලබමින් සිටියදී ඔහු මියගොස් ඇත. මෙලෙස මියගොස් ඇත්තේ කිලිනොච්චිය උදයනගර් ප්‍රදේශයේ පදිංචිව සිටි පුෂ්පරාසා සමර්නිලවන් නමැති 22 හැවිරිදි තරුණයෙකි. පශ්චාත් මරණ පරීක්ෂණයෙන් පසු දේහය ඥාතීන් වෙත භාරදීමට නියමිත අතර සිද්ධිය සම්බන්ධයෙන් කිලිනොච්චිය පොලිසිය වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Motorcycle Crashes into Palmyra Tree in Kilinochchi Claiming Life of 22-Year-Old Youth


A 22-year-old youth tragically lost his life following a severe road accident in the Uruthirapuram D7 area within the Kilinochchi police jurisdiction this afternoon. The incident occurred near Uruthirapuram Hindu College when the motorcycle he was riding veered out of control due to excessive speed and violently collided with a palmyra tree on the roadside. Despite being rushed to the Kilinochchi District General Hospital with severe traumatic injuries, the victim succumbed while receiving emergency medical care. The deceased has been identified as Pushparasa Samarnilavan, a resident of Uthayanagar, Kilinochchi. The remains are scheduled to be handed over to family members following the post-mortem examination, while Kilinochchi Police are conducting further investigations.


KR TV Network - Local News

Comments