Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அரசாங்கத்தின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக வெளிப்படும் சர்வாதிகார வெறியை மக்கள் பலத்தால் தோற்கடிப்போம் - கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முழக்கம்!


 அரசாங்கத்தின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக வெளிப்படும் சர்வாதிகார வெறியை மக்கள் பலத்தால் தோற்கடிப்போம் - கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முழக்கம்!


அரசாங்கத்தின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக வெளிப்படும் சர்வாதிகார வெறியை மக்கள் பலத்தைக்கொண்டு முழுமையாகத் தோற்கடிக்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் தெரிவித்தார்.


22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக “நீதிமன்றத்தைத் தொடாதே” என்ற தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியினால் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றுடன் வீதிக்கு இறங்கி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சர்வாதிகாரப் போக்கைத் தோற்கடிக்கவும், 22ஆவது திருத்தச் சட்டத்தை முறியடித்து நீதிமன்றத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.


முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க விவகாரம் முதல் கடந்த கால அரசுகளால் நீதிபதிகளைச் சலுகைகள் தொடர்பான குழுவிற்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பங்கள் வரை அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்கு எதிராகக் குரல்கொடுத்தது ஐக்கிய மக்கள் கட்சியே எனத் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் கடந்த கால 17, 18, 19, 20 மற்றும் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தங்களுக்குக் கையை உயர்த்திய எவரும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் இல்லை என்றும் மேலும் தெரிவித்தார்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


22 වන ව්‍යවස්ථා සංශෝධනයේ ආඥාදායක උමතුව ජනබලයෙන් පරාජය කරනවා - විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස කොළඹදී පවසයි!


ආණ්ඩුවේ 22 වන ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සංශෝධනය තුළින් පිළිබිඹු වන ආඥාදායක උමතුව මහජන බලය පාවිච්චි කර සම්පූර්ණයෙන්ම පරාජය කිරීමට කටයුතු කරන බව විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස මහතා කොළඹදී ප්‍රකාශ කළේය.


22 වන ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සංශෝධනයට එරෙහිව “අධිකරණයට අත නොතබනු” යන තේමාව යටතේ සමගි ජන බලවේගය විසින් කොටුව දුම්රියපොළ ඉදිරිපිට සංවිධානය කරන ලද දැවැන්ත විරෝධතා ව්‍යාපාරයට එක්වෙමින් ඔහු මෙම අදහස් පළ කළේය.


සමගි ජන බලවේගය සහ සමගි ජන සන්ධානය ලෙස මහපාරට බැස ජනාධිපති අනුර කුමාර දිසානායකගේ ආඥාදායක ප්‍රවේශය පරාජය කිරීමටත්, 22 වන ව්‍යවස්ථා සංශෝධනය පරාජය කරමින් ස්වාධීන අධිකරණය සුරක්ෂිත කිරීමටත් පියවර ගන්නා බව හෙතෙම අවධාරණය කළේය.


ගරු අගවිනිසුරු ශිරානි බණ්ඩාරනායක සමයේ ගැටලුවේ සිට පසුගිය රජයන් මඟින් විනිසුරුවන් වරප්‍රසාද කමිටුවට ගෙන ඒමට දැරූ උත්සාහයන් දක්වා සෑම අවස්ථාවකම ඊට එරෙහිව පෙනී සිටියේ සමගි ජන බලවේගය බව පෙන්වා දුන් විපක්ෂ නායකවරයා, මෙරට අතීතයේ ගෙන ආ 17, 18, 19, 20 සහ 21 වන ව්‍යවස්ථා සංශෝධන සඳහා අත එසවූ කිසිදු අයෙකු තම පක්ෂය තුළ නොමැති බවද වැඩිදුරටත් කියා සිටියේය.


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් | දේශීය පුවත්


Will Defeat the Dictatorial Madness Reflected in the 22nd Amendment Through People's Power: Opposition Leader Sajith Premadasa in Colombo!


Opposition Leader Sajith Premadasa stated in Colombo that steps will be taken to defeat the dictatorial mindset reflected in the government's 22nd Constitutional Amendment through public power.


Addressing the mass protest organized by the Samagi Jana Balawegaya (SJB) in front of the Colombo Fort Railway Station under the theme "Do Not Touch the Judiciary" against the 22nd Amendment, he expressed these views.


He emphasized that the SJB and the Samagi Jana Sandanaya will take to the streets to defeat President Anura Kumara Dissanayake's dictatorial approach, defeat the 22nd Constitutional Amendment, and safeguard an independent judiciary.


Pointing out that the SJB has consistently stood against executive overreach—from the tenure of former Chief Justice Shirani Bandaranayake to previous government attempts to haul judges before parliamentary privilege committees—the Opposition Leader further noted that not a single member who raised their hands in support of the past 17th, 18th, 19th, 20th, and 21st constitutional amendments is present within the SJB.


KRTV Network | Local News

Comments