Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம்: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மற்றும் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு 28 வரை ஒத்திவைப்பு මුස්ලිම් කාන්තා ඇඳුම් පැළඳුම් ගැටලුව: හිටපු මන්ත්‍රී හරීස් සහ අර්චුනාට එරෙහි නඩුව 28 දක්වා කල් තැබේ Muslim Women's Attire Issue: Case Against Former MP Harees and MP Archchuna Adjourned to 28th


 முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம்: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மற்றும் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு 28 வரை ஒத்திவைப்பு

මුස්ලිම් කාන්තා ඇඳුම් පැළඳුම් ගැටලුව: හිටපු මන්ත්‍රී හරීස් සහ අර්චුනාට එරෙහි නඩුව 28 දක්වා කල් තැබේ

Muslim Women's Attire Issue: Case Against Former MP Harees and MP Archchuna Adjourned to 28th


முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் தொடர்பில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணனுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act) கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு, இன்று (22) நீதவான் அண்ணாதுரை தர்ஷினி முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரரான வைத்தியர் கு. சுகுணன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்ஷான் டயஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் முன்னிலையாகி விரிவான சமர்ப்பணங்களை முன்வைத்தனர். வழக்கில் பிரதிவாதிகளுக்கு எதிராக நிபந்தனையுடனான கட்டளை ஒன்றை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் 28 ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்துள்ளார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / நீதித்துறை மற்றும் சமூகம்


මුස්ලිම් කාන්තාවන්ගේ ඇඳුම් පැළඳුම් සම්බන්ධයෙන් කල්මුණේ මූලික රෝහලේ අධ්‍යක්ෂ වෛද්‍ය කේ. සුගුණන් මහතාට එරෙහිව සමාජ මාධ්‍ය ඔස්සේ අදහස් පළකළ බව පවසමින් හිටපු රාජ්‍ය අමාත්‍ය එච්.එම්.එම්. හරීස් සහ පාර්ලිමේන්තු මන්ත්‍රී වෛද්‍ය රාමනාදන් අර්චුනා ඇතුළු පිරිසකට එරෙහිව ගොනුකර ඇති නඩුව ලබන 28 වනදා තෙක් කල් තබා තිබේ.


මාර්ගගත ක්‍රමවල සුරක්ෂිතභාවය පිළිබඳ පනත (Online Safety Act) යටතේ මඩකලපුව මහේස්ත්‍රාත් අධිකරණය හමුවේ ගොනුකර තිබූ මෙම නඩුව අද (22) මහේස්ත්‍රාත් අන්නතුරෙයි දර්ශිනී මහත්මිය ඉදිරියේ විභාගයට ගන්නා ලදී. එහිදී පැමිණිලිකාර වෛද්‍ය කේ. සුගුණන් මහතා වෙනුවෙන් ජ්‍යෙෂ්ඨ නීතිඥ ලක්ෂාන් ඩයස් මහතා ඇතුළු නීතිඥ මණ්ඩලයක් පෙනී සිටිමින් කරුණු ඉදිරිපත් කළහ. මෙම නඩුවට අදාළව කොන්දේසි සහිත ආඥාවක් නිකුත් කරන්නේ ද නැද්ද යන්න පිළිබඳව තීන්දුවක් ගැනීම සඳහා නඩුව ලබන 28 වැනිදා දක්වා කල් තැබීමට මහේස්ත්‍රාත්වරිය නියෝග කළාය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අධිකරණ සහ සමාජ පුවත්


A legal petition filed against former State Minister H.M.M. Harees, Member of Parliament Dr. Ramanathan Archchuna, and others for allegedly publishing disparaging social media statements against Kalmunai Base Hospital Director Dr. K. Sugunan concerning Muslim women's attire has been adjourned until September 28.


Instituted under the provisions of the Online Safety Act, the plaint was taken up for consideration today (22) before Batticaloa Magistrate Annathurai Tharshini. Senior Counsel Lakshan Dias, representing the petitioner Dr. Sugunan, made detailed legal submissions before the bench. Following the initial arguments, the magistrate stood the proceedings over until September 28 to determine whether a conditional restraining order should be issued against the respondents.


KR TV Network - Local News / Judicial Affairs and Civil Society

Comments