பாலமுனையின் பெருமைமிகு சாதனை: 3ஆவது சட்டத்தரணியாகவும் 2ஆவது பெண் சட்டத்தரணியாகவும் ரிஸா கபீர் தடம் பதிப்பு
பாலமுனையின் பெருமைமிகு சாதனை: 3ஆவது சட்டத்தரணியாகவும் 2ஆவது பெண் சட்டத்தரணியாகவும் ரிஸா கபீர் தடம் பதிப்பு
காத்தான்குடி பாலமுனையின் 3ஆவது சட்டத்தரணியாகவும், 2ஆவது பெண் சட்டத்தரணியாகவும் பேராதனைப் பல்கலைக்கழக சட்டப் பட்டதாரி (LLB) ரிஸா கபீர் தகுதி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 2026 ஏப்ரல் மாதம் இலங்கை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற சட்டத்தரணிகள் இறுதிப் பரீட்சையில் இவர் வெற்றிகரமாகச் சித்தியடைந்துள்ளார். மர்ஹூம் கபீர் மற்றும் றிஹானா தம்பதிகளின் மகளான இவர், தந்தையை இழந்த நிலையிலும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் கல்விப் பயணத்தைத் தொடர்ந்து சட்டத்தரணியாக உயர்ந்துள்ளார். பாலமுனை மண்ணிலிருந்து உருவான இந்த சாதனை அப்பிரதேசத்தின் இளம் தலைமுறையினருக்கும் குறிப்பாகப் பெண் பிள்ளைகளுக்கும் சிறந்த வழிகாட்டலாக அமைந்துள்ளதுடன், அவரது கல்விச் சாதனையை முன்னிட்டுப் பிரதேச மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
පාලමුනේ ගම්මානයට ඉමහත් අභිමානයක්: 3 වන නීතිඥවරිය සහ 2 වන කාන්තා නීතිඥවරිය ලෙස රිසා කබීර් සුදුසුකම් ලබයි
කාත්තන්කුඩි පාලමුනේ ප්රදේශයේ 3 වන නීතිඥවරිය මෙන්ම 2 වන කාන්තා නීතිඥවරිය ලෙස පේරාදෙණිය විශ්වවිද්යාලයේ නීතිවේදී (LLB) උපාධිධාරිනී රිසා කබීර් මෙනෙවිය සමත්වීම එම ප්රදේශයට මහත් අභිමානයක් ගෙන දී තිබේ. 2026 අප්රේල් මස ශ්රී ලංකා නීති විද්යාලයේ පැවති නීතිඥ අවසන් විභාගය ඇය විශිෂ්ට ලෙස සමත්ව ඇත. මියගිය කබීර් සහ රිහානා යුවළගේ දියණිය වන ඇය, පියා අහිමි වීමේ දුෂ්කරතා මධ්යයේ වුවද දැඩි කැපවීමෙන් හා උත්සාහයෙන් අධ්යාපනය හදාරා නීති ක්ෂේත්රයේ මෙම සුවිශේෂී ජයග්රහණය අත්කරගෙන තිබේ. පාලමුනේ ප්රදේශයෙන් තවත් කාන්තා නීතිඥවරියක් බිහිවීම කලාපයේ තරුණ පරපුරට විශේෂයෙන්ම දැරියන්ට විශාල ආදර්ශයක් වන අතර, ප්රදේශවාසීන් සහ විද්වතුන් රැසක් ඇය වෙත සිය උණුසුම් සුබපැතුම් එක්කරමින් සිටිති.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
A Milestone for Palamunai: Riza Kabeer Qualifies as Area's 3rd Attorney-at-Law and 2nd Female Legal Professional
Riza Kabeer, an LLB graduate from the University of Peradeniya, has brought honor to her community by qualifying as the 3rd Attorney-at-Law and the 2nd female legal practitioner originating from the Palamunai village in Kattankudy. She successfully completed the Sri Lanka Law College final attorney examination held in April 2026. The daughter of the late Kabeer and Rihana, she persevered through personal adversities and the loss of her father to excel academically and enter the professional legal fraternity. Her accomplishment stands as an inspiring benchmark for youth, especially female students across the region, drawing wide appreciation and warm congratulations from community members and academic leaders.
KR TV Network - Local News

Comments