பிலியந்தலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் போதைப்பொருளுடன் சிக்கிய 7 சாரதிகள் - 252 பேர் பரிசோதனை!
பிலியந்தலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் போதைப்பொருளுடன் சிக்கிய 7 சாரதிகள் - 252 பேர் பரிசோதனை!
போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் திடீர் பரிசோதனை நடவடிக்கை நேற்று (01) பிலியந்தல பிரதான பேருந்து நிலையத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இச்சோதனையில், பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் உள்ளிட்ட 252 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் நடமாடும் பரிசோதனை ஆய்வகப் பேருந்தில் வைத்திய அதிகாரி கே.கே. ஜோசப் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட இச்சோதனையில் 7 பேர் ஆபத்தான போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த கால விபத்துகள் மற்றும் வீதி ஒழுக்கப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, போதைப்பொருள் பாவனையற்ற ஒழுக்கமான சாரதிகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
போக்குவரத்து அமைச்சு, இலங்கை காவல்துறை மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இப்போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
போதைப்பொருள் பாவிப்பது உறுதிப்படுத்தப்படும் சாரதிகளுக்கு நிறுவன விதிமுறைகள் மற்றும் நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதோடு, விபத்துகளைக் குறைத்து பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை உறுதிப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர் :பர்ஹானா பதுர்தீன்
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி
පිළියන්දල සිදුකළ හදිසි පරීක්ෂාවකදී මත්ද්රව්ය භාවිත කර රිය පැදවූ රියැදුරන් 7 දෙනෙක් අත්අඩංගුවට - 252 දෙනෙක් පරීක්ෂාවට!
මත්ද්රව්ය භාවිත කර රිය පදවන රියැදුරන් හඳුනා ගැනීමේ හදිසි පරීක්ෂණ මෙහෙයුමක් ඊයේ (01) දින පිළියන්දල ප්රධාන බස් නැවතුම්පොළ මධ්යස්ථානය කරගනිමින් ක්රියාත්මක කරන ලදී.
ප්රවාහන, මහාමාර්ග හා නගර සංවර්ධන අමාත්යාංශයේ මාර්ග ආරක්ෂණ වැඩපිළිවෙළ යටතේ ක්රියාත්මක වූ මෙම මෙහෙයුමේදී බස් රියැදුරන්, කොන්දොස්තරවරුන්
සහ ත්රිරෝද රථ රියැදුරන් ඇතුළු 252 දෙනෙකු පරීක්ෂාවට ලක් කර තිබේ.
ජාතික ගමනාගමන වෛද්ය ආයතනයේ වෛද්ය නිලධාරී වෛද්ය කේ.කේ. ජෝසප් මහතාගේ ප්රධානත්වයෙන් යුත් කණ්ඩායමක් විසින් ජංගම පරීක්ෂණ රථය තුළ සිදු කරන ලද මෙම පරීක්ෂාවන්ගෙන් පුද්ගලයින් 7 දෙනෙකු මත්ද්රව්ය භාවිත කර ඇති බව අනාවරණය වී ඇත.
පසුගිය කාලය තුළ සිදුවූ මාරක අනතුරු සහ මාර්ග විනය පිරිහීමට හේතු සලකා බනිමින්, මත්ද්රව්යවලින් තොර විනයගරුක රියැදුරන් පිරිසක් බිහි කිරීම මෙම ව්යාපෘතියේ ප්රධාන අරමුණ වේ.
ප්රවාහන අමාත්යාංශය, ශ්රී ලංකා පොලිසිය සහ ජාතික ගමනාගමන වෛද්ය ආයතනයේ පූර්ණ අනුග්රහය ඇතිව මෙම පරීක්ෂණ මෙහෙයුම දිවයින පුරා අඛණ්ඩව ක්රියාත්මක කිරීමට නියමිතය.
මත්ද්රව්ය භාවිත කරන බවට තහවුරු වන රියැදුරන් සඳහා ආයතනික නීතිරීතිවලට අමතරව රටේ සාමාන්ය නීතිය යටතේද දැඩි දඬුවම් ලබා දීමටත්, මගී ප්රවාහන සේවාව සුරක්ෂිත කිරීමටත් අපේක්ෂා කෙරේ.
මාධ්යවේදී: ෆර්හානා බත්රුදීන්
කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් | දේශීය පුවත්
7 Drivers Identified for Using Drugs During Sudden Inspection of 252 Drivers and Conductors in Piliyandala!
A sudden inspection operation to identify drivers operating vehicles under the influence of drugs was conducted yesterday (1), centered around the Piliyandala main bus station.
This operation was carried out under the road safety program of the Ministry of Transport, Highways, and Urban Development.
During the operation, 252 individuals, including bus drivers, conductors, and three-wheeler drivers, were subjected to medical screenings.
Out of those tested, 7 individuals were identified as having used dangerous drugs, following tests conducted inside the mobile laboratory bus of the National Transport Medical Institute led by medical officer Dr. K.K. Joseph.
The main objective of this initiative is to create disciplined drivers free from drug use by taking into account past road accidents and the deterioration of road discipline.
Carried out with the full cooperation of the Ministry of Transport, Sri Lanka Police, and the National Transport Medical Institute, these inspection operations will be continued nationwide.
It has been reported that strict punishments under institutional regulations as well as the country's general law will be imposed on drivers found using dangerous drugs, with the ultimate goal of reducing road accidents and ensuring a safe and quality public transport service for the public.
Reporter:Farhana
bathurdeen
KRTV Network | Local News








Comments