மட்டக்களப்பு இருதயபுரத்தில் ஆட்டை வேனில் கடத்திய காத்தான்குடி நபர் வாகனத்துடன் கைது
மட்டக்களப்பு இருதயபுரத்தில் ஆட்டை வேனில் கடத்திய காத்தான்குடி நபர் வாகனத்துடன் கைது
மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஆடு ஒன்றைப் பிடித்து வேனில் கடத்திச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேனுடன் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரின் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கண்காணிப்பு கமரா பதிவுகள் மற்றும் இரகசியத் தகவல்களின் உதவியுடன் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
මඩකලපුව ඉරුදයපුරම් ප්රදේශයේදී එළදෙනුන් හෝ එළුවන් වෑන් රථයකින් පැහැරගත් කාත්තන්කුඩි පුද්ගලයෙකු වෑන් රථය සමඟ අත්අඩංගුවට
මඩකලපුව ඉරුදයපුරම් ප්රදේශයේ මාර්ගය අයිනේ තණකොළ බුදිමින් සිටි එළුවෙකු අල්ලා වෑන් රථයකින් පැහැරගෙන ගිය කාත්තන්කුඩි ප්රදේශයේ පදිංචිකරුවෙකු අදාළ වෑන් රථය සමඟ මඩකලපුව මූලස්ථාන පොලිසියේ මහා පරිමාණ අපරාධ විමර්ශන අංශය මඟින් අත්අඩංගුවට ගෙන තිබේ. පසුගිය අගෝස්තු 18 වන දින සිදුවූ මෙම සිද්ධිය සම්බන්ධයෙන් අයිතිකරු විසින් කරන ලද පැමිණිල්ලකට අනුව සීසීටීවී (CCTV) දර්ශන සහ රහසිගත බුද්ධි තොරතුරු ඔස්සේ විමර්ශන සිදුකළ පොලිස් නිලධාරීන් සැකකරු අත්අඩංගුවට ගෙන ඇත. අත්අඩංගුවට ගත් සැකකරු සහ අපරාධයට යොදාගත් වෑන් රථය මඩකලපුව මහේස්ත්රාත් අධිකරණයට ඉදිරිපත් කිරීමට නියමිතය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Kattankudy Resident Arrested with Van Over Livestock Theft in Iruthayapuram, Batticaloa
A resident of Kattankudy was apprehended along with a van by the Major Crimes Investigation Unit of the Batticaloa Headquarters Police in connection with the theft and abduction of a grazing goat from the roadside in Iruthayapuram, Batticaloa. Following a formal complaint lodged by the livestock owner regarding the incident that occurred on 18 August, police initiated investigations leveraging CCTV surveillance footage and local intelligence to track down the suspect. The suspect and the seized vehicle used in the offence are being processed to be produced before the Batticaloa Magistrate's Court.
KR TV Network - Local News



Comments