Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கந்தளாய் - வானல பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் படுகாயம்!


 கந்தளாய் - வானல பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் படுகாயம்!

கந்தளாய் – வானல பகுதியில் இன்று இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


படுகாயமடைந்த இருவரும் சேருநுவர பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ள நிலையில், அவர்கள் அவசர சிகிச்சைக்காகத் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


தீ வைக்கப்பட்ட வயல் பகுதியிலிருந்து வெளியேறிய கடும் புகை காரணமாக வீதி தெளிவாகத் தெரியாத சூழ்நிலையே இந்த விபத்து இடம்பெறக் காரணமாக இருந்திருக்கலாம் என ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எனவே, வாகன சாரதிகள் புகைமூட்டம் மற்றும் குறைந்த பார்வைத்திறன் காணப்படும் பகுதிகளில் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


සිරස්තලය: කන්තලේ - වනාල ප්‍රදේශයේදී යතුරුපැදි දෙකක් මුහුණට මුහුණ ගැටී අනතුරක් - දෙදෙනෙක් බරපතල තුවාල ලබයි!

කන්තලේ – වනාල ප්‍රදේශයේදී අද දින යතුරුපැදි දෙකක් මුහුණට මුහුණ ගැටීමෙන් සිදු වූ අනතුරකින් පුද්ගලයින් දෙදෙනෙක් බරපතල තුවාල ලබා තිබේ.


බරපතල තුවාල ලැබූ දෙදෙනා සේරුවාවිල ප්‍රදේශයේ පදිංචිකරුවන් වන අතර, අනතුරින් තුවාල ලැබූවන් හදිසි ප්‍රතිකාර සඳහා ත්‍රිකුණාමලය සහ අනුරාධපුර රෝහල් වෙත ඇතුළත් කර ඇති බව වාර්තා වේ.


ගිනි තබන ලද වෙල් යායකින් පිට වූ අධික දුමාරය හේතුවෙන් මාර්ගය පැහැදිලිව නොපෙනී යාම මෙම අනතුරට හේතු වන්නට ඇතැයි මූලික තොරතුරු මඟින් අනාවරණය වී ඇත.


මේ හේතුවෙන්, රියැදුරන් දුමාරය සහ අවම දෘශ්‍යතාවක් පවතින ප්‍රදේශවල ඉතා කල්පනාකාරීව ගමන් කරන ලෙස ඉල්ලා සිටී.


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් | දේශීය පුවත්


Head-On Collision Between Motorcycles in Kantale Vanala Leaves Two Seriously Injured!

Two people sustained serious injuries when two motorcycles collided head-on in the Vanala area of Kantale today.


The injured individuals are reported to be residents of Seruwawila and have been rushed to the Trincomalee and Anuradhapura hospitals for emergency medical treatment.


Initial reports suggest that the accident may have occurred due to poor visibility on the road caused by thick smoke billowing from a nearby cleared and burnt paddy field.


Consequently, drivers are strongly advised to exercise extreme caution when traveling through areas affected by smoke and low visibility.


KRTV Network | Local News

Comments