Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

காத்தான்குடி நகர சபையின் உள்ளூராட்சி வார நிறைவு விழா: போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசளிப்பு, ஊடகவியலாளர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு விசேட கௌரவிப்பு























 காத்தான்குடி நகர சபையின் உள்ளூராட்சி வார நிறைவு விழா: போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசளிப்பு, ஊடகவியலாளர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு விசேட கௌரவிப்பு


புத்துயிர் பெறும் புதுநகரம் என்ற அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையினால் அதன் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. இவ்வேலைத்திட்டங்களின் தொடர்ச்சியாக, அவற்றில் பங்குபற்றி வெற்றியீட்டிய சாதனையாளர்களுக்கான மாபெரும் பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிறைவு விழா நேற்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.


காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட நிகழ்வில், நகர சபையின் செயலாளர், பிரதம கணக்காளர், நகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், களப்பணியாளர்கள், பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.


உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர எல்லைக்குள் பல்துறை சார்ந்த செயல்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. பொதுமக்களின் சுகாதார நலனை மேம்படுத்தும் நோக்கில் மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம்கள் நடாத்தப்பட்டன. அத்துடன் நகரை அழகுபடுத்தும் மற்றும் தூய்மைப்படுத்தும் நோக்கில் விசேட தூய்மைப்படுத்தல் சிரமதானப் பணிகள், பசுமை நகரை உருவாக்கும் வகையிலான மரம் நடுகைத் திட்டங்கள் மற்றும் கல்விசார் ஆர்வத்தை வளர்க்கும் வாசிப்பு வார விசேட நிகழ்வுகளும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.


மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆளுமையையும் கலைத்திறன்களையும் வெளிக்கொணரும் முகமாக சித்திரப் போட்டிகள், கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள், விவாத அரங்குகள் என்பன நடாத்தப்பட்டதுடன், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வீதி நாடகங்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களுக்கான களம் என்பனவும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. அதேபோன்று, மக்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து, உடற்பயிற்சி முறைகள், சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுப் பண்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றிய தெளிவூட்டல்களும் சமூக மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன.


இவ்வாறான பல்வேறு தளங்களில் நடாத்தப்பட்ட போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மேடையில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.


அத்துடன், இந்த உள்ளூராட்சி வார நிகழ்வுகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு பல்வேறு வழிகளிலும் பூரண ஒத்துழைப்பு நல்கிய நிறுவனங்கள் மற்றும் நிதி, பொருள் உதவிகளை வழங்கி ஆதரவளித்த அனுசரணை நிறுவனங்களுக்கும் நகர சபையினால் விசேட கௌரவமும் நன்றியறிதலும் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக, காத்தான்குடி நகர சபையினால் முன்னெடுக்கப்படும் நாளாந்த அபிவிருத்திப் பணிகள், சமூக நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் சேவைகளை உண்மைத்தன்மையுடன் உடனுக்குடன் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து, நகரத்தின் வளர்ச்சிக்கு ஊடக ரீதியாக மகத்தான பங்களிப்பை நல்கிய முன்னணி பிராந்திய ஊடகவியலாளர்கள் விசேடமாகத் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கும் விசேட கௌரவமும் அங்கீகாரமும் வழங்கப்பட்டது.


மக்களின் குரலாகவும் நகரின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும் செயற்படும் ஊடகவியலாளர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பைப் பாராட்டியும், நகரின் பொதுப்பணிகளுக்கு தோளொடு தோள் நின்ற நிறுவனங்களை அங்கீகரித்தும் முன்னெடுக்கப்பட்ட இந்த உன்னத நிகழ்வு, அங்கு கூடியிருந்த அதிதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தங்களின் உழைப்பை அங்கீகரித்து கௌரவமளித்தமைக்காக நகர முதல்வர், செயலாளர் உள்ளிட்ட நகர சபையின் அனைத்து அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனப் பிரதிநிதிகள் சார்பில் இதயபூர்வமான நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.


கே ஆர் டி வி நெட்வொர்க் (KR TV Network) - உள்நாட்டுச் செய்தி / உள்ளூராட்சி மற்றும் அபிவிருத்தி விவகாரம்


කාත්තන්කුඩි නගර සභාවේ පළාත් පාලන සතියේ සමාප්ති උළෙල: ජයග්‍රාහකයින්ට ත්‍යාග, අනුග්‍රාහක ආයතන සහ මාධ්‍යවේදීන්ට විශේෂ උපහාර


නැවත පණගැන්වෙන නව නගරය රාජ්‍ය ප්‍රතිපත්තිය යටතේ දිවයින පුරා ප්‍රකාශයට පත් කරන ලද පළාත් පාලන සතියට සමගාමීව, කාත්තන්කුඩි නගර සභාව විසින් සිය පාලන බලප්‍රදේශය තුළ ක්‍රියාත්මක කරන ලද විවිධ ප්‍රජා සහ සංවර්ධන වැඩසටහන්වල ජයග්‍රාහකයින් සඳහා ත්‍යාග සහ සහතිකපත් ප්‍රදානය කිරීමේ මහා උත්සවය ඊයේ කාත්තන්කුඩි හිස්බුල්ලා සංස්කෘතික ශාලාවේදී අති උත්කර්ෂවත් අන්දමින් පැවැත්විණි.


කාත්තන්කුඩි නගරාධිපති එස්.එච්.එම්. අස්ෆර්ගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම විශේෂ උත්සවයට නගර සභා ලේකම්, ප්‍රධාන ගණකාධිකාරී, නගර සභා මන්ත්‍රීවරුන්, නිලධාරීන්, පාසල් සිසුන් සහ ප්‍රදේශවාසීන් විශාල පිරිසක් එක්ව සිටියහ.


පළාත් පාලන සතිය නිමිත්තෙන් කාත්තන්කුඩි නගර සභාව විසින් ක්ෂේත්‍ර රැසක් ආවරණය වන පරිදි පුළුල් වැඩසටහන් මාලාවක් සංවිධානය කර තිබුණි. ජනතාවගේ සෞඛ්‍ය ප්‍රවර්ධනය වෙනුවෙන් දැවැන්ත ලේ පරිත්‍යාග කඳවුරු සහ නොමිලේ පැවැත්වෙන වෛද්‍ය සායන පැවැත් වූ අතර, නගරය පිරිසිදු කිරීම සහ අලංකාර කිරීම වෙනුවෙන් විශේෂ ශ්‍රමදාන ව්‍යාපාර ද ක්‍රියාත්මක කෙරිණි. මීට අමතරව පරිසර හිතකාමී නගරයක් වෙනුවෙන් රුක් රෝපණ වැඩසටහන් සහ අධ්‍යාපනික රුචිකත්වය වර්ධනය කිරීමේ අරමුණින් කියවීමේ සතිය නිමිත්තෙන් විශේෂ ප්‍රදර්ශන හා වැඩමුළු ද පවත්වන ලදී.


පාසල් සිසුන්ගේ සහ තරුණ ප්‍රජාවගේ සහජ කුසලතා ඔප්නැංවීම වෙනුවෙන් චිත්‍ර, කවි, රචනා සහ විවාද තරග සංවිධානය කර තිබූ අතර, සමාජ ගැටලු පිළිබඳව ජනතාව දැනුවත් කිරීම සඳහා වීදි නාට්‍ය සහ කලාකරුවන්ගේ කුසලතා ඇගයීමේ විශේෂ අවස්ථා ද සැලසුම් කර තිබුණි. තවද, ශරීර සෞඛ්‍යයට අහිතකර ආහාර ද්‍රව්‍ය, සෞඛ්‍ය සම්පන්න නොවන ජීවන රටාවන් පිළිබඳව මහජනතාව දැනුවත් කිරීමේ සම්මන්ත්‍රණ රැසක් ද සාර්ථකව පවත්වා තිබුණි.


මෙම විවිධ වැඩසටහන් සහ තරගවලදී විශිෂ්ට දක්ෂතා දැක්වූ ජයග්‍රාහකයින් වෙනුවෙන් ත්‍යාග සහ සහතිකපත් පිරිනැමීමට නගරාධිපතිවරයා ඇතුළු ආරාධිත අමුත්තන් පියවර ගත්හ.


තවද, මෙම පළාත් පාලන සතියේ වැඩසටහන් මාලාව සාර්ථක කර ගැනීම සඳහා විවිධාකාරයෙන් පූර්ණ සහයෝගය ලබා දුන් ආයතන මෙන්ම අනුග්‍රාහකත්වය දැක්වූ ආයතන වෙත ද මෙහිදී විශේෂ ඇගයීම් සහ උපහාර පිරිනමන ලදී.


මීට අමතරව, කාත්තන්කුඩි නගර සභාවේ දෛනික සේවාවන් සහ නගරයේ යටිතල පහසුකම් සංවර්ධන ක්‍රියාවලිය ජනතාව අතරට කඩිනමින් රැගෙන යමින් නගරයේ උන්නතිය වෙනුවෙන් මාධ්‍ය මෙහෙවර ඉටු කළ ප්‍රාදේශීය මාධ්‍යවේදීන් විශේෂ ඇගයීමකට ලක් කරමින් ඔවුන් වෙත ද විශේෂ උපහාර පිරිනැමිණි.


මාධ්‍යවේදීන්ගේ වෘත්තීය කැපවීම සහ සහයෝගය දැක්වූ ආයතනවල දායකත්වය අගයමින් සිදු කළ මෙම උපහාරය පැමිණ සිටි සියලු දෙනාගේ දැඩි ප්‍රශංසාවට ලක් වූ අතර, සිය මෙහෙවර අගය කිරීම පිළිබඳව නගරාධිපති ඇතුළු කාර්ය මණ්ඩලයට මාධ්‍යවේදීන් සහ ආයතන නියෝජිතයින් සිය කෘතඥතාව පළ කළහ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් (KR TV Network) - දේශීය පුවත් / පළාත් පාලන සහ ප්‍රජා සංවර්ධන කටයුතු


Kattankudy Urban Council Concludes Local Government Week: Awards Presented to Winners, Supporting Organizations and Journalists Honoured


In line with the national policy framework "Revitalized New City", the Kattankudy Urban Council successfully concluded its extensive series of community, environmental, and civic welfare initiatives launched during the nationwide Local Government Week with a grand certificate and prize-giving ceremony held yesterday at the Hizbullah Cultural Hall in Kattankudy.


The ceremony was presided over by the Chairman of the Kattankudy Urban Council, S.H.M. Asfar JP. Key administrative figures including the Council Secretary, Chief Accountant, council members, municipal officers, field personnel, school students, civil society representatives, and local residents were present in large numbers.


Throughout the designated Local Government Week, the municipal council executed diverse, impactful field projects aimed at enhancing the living standards of local residents. These included major voluntary blood donation drives, complimentary health check-up clinics, urban cleanliness and sanitation campaigns, town greening through large-scale tree planting, and dedicated reading week sessions to stimulate academic enthusiasm among youth.


In addition, numerous co-curricular and cultural avenues were created to nurture local youth talent. Competitions covering creative arts, poetry, essay writing, and public debates were organized, alongside informative street dramas and artistic workshops addressing pressing civic responsibilities. Comprehensive public health campaigns were also conducted to educate the community on combating non-communicable lifestyle conditions, promoting physical fitness, and avoiding unhygienic, contaminated dietary products.


During the concluding ceremony, winners of the competitive events were officially awarded prizes and merit certificates by the dignitaries.


Furthermore, special recognition and tokens of gratitude were presented to partner institutions and sponsor organizations that extended financial, material, and operational cooperation to ensure the triumphant execution of the Local Government Week events.


Another prominent highlight was the formal recognition of regional media professionals. Journalists who consistently publicized the civic projects, municipal utilities, and public administration of the Kattankudy Urban Council were specially commended and honoured for their journalistic dedication.


Recognizing the indispensable roles played by cooperating institutions and media personnel was warmly applauded by attendees. Representatives of the organizations and the press corps conveyed their sincere appreciation to the Urban Council Chairman, Secretary, and administrative officials for the honor bestowed upon them.


KR TV Network - Local News / Local Governance and Urban Development Affairs


.

Comments