ஒரு தாயின் மெளன உழைப்பையும் அவளது மன உலகையும் விவரிக்கும் முழுமையான தொகுப்பு
ஒரு தாயின் மெளன உழைப்பையும் அவளது மன உலகையும் விவரிக்கும் முழுமையான தொகுப்பு
ஒரு வீட்டில் எல்லோரும் தூங்கிய பிறகும் சில நேரங்களில் ஒருவர் மாத்திரம் விழித்திருப்பாள்.
தூங்கும் குழந்தையின் அழகை ரசித்த படி போர்வையை சரி செய்வாள்.
நாளைக்கு என்ன சமைப்பது என்று யோசிப்பாள்.
கழுவ வேண்டிய துணிகள் நினைவுக்கு வரும்.
பிள்ளைகளின் பாடசாலைக்கு தேவையான பொருட்கள் நினைவுக்கு வரும்.
காலையில் எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்று கணக்கிடுவாள்.
அவள்தான் உம்மா.
அவளுடைய உடல் படுக்கையில் இருக்கும். ஆனால் அவளுடைய மனம் மட்டும் இன்னும் வேலை செய்து கொண்டே இருக்கும்.
அதனால்தான் சில காலைகளில் அவள் எனக்கு முடியவில்லை, நான் மிகவும் களைத்துப்போய்விட்டேன் என்று சொல்லலாம்.
அந்த வார்த்தையைக் கேட்டவுடன் அவளை சோம்பேறித் தாயாக நினைத்துவிடாதீர்கள்.
அவள் உங்களால் களைத்துப் போகவில்லை.
அவள் உங்கள் குழந்தையால் களைத்துப் போகவில்லை.
வீட்டில் எப்போதும் அனைவருக்கும் தேவையான ஒருவராக இருந்து கொண்டே இருப்பதால்தான் அவள் களைத்துப் போயிருக்கிறாள்.
ஒரு குழந்தை உம்மா என்று அழைக்கிறது.
இன்னொருவர் சாப்பாடு எங்கே என்று கேட்கிறார்.
தொலைபேசி ஒலிக்கிறது.
வீட்டு வேலைகள் முடிவடைவதே இல்லை.
அதில் வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால் அங்கே இன்னொரு உலகம் அவளுக்காகக் காத்திருக்கிறது.
இத்தனைக்கும் நடுவில் அவளுடைய மனம் மட்டும் மெதுவாக, எனக்கும் கொஞ்சம் நேரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கலாம்.
ஆனால் அந்தக் குரலை அவளே பல நாட்கள் கேட்பதில்லை.
ஏனென்றால் தாயான பிறகு ஒரு பெண்ணுக்கு குற்ற உணர்வு மிக எளிதாகக் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
குழந்தையை விட்டுவிட்டு வெளியே சென்றால் குற்ற உணர்வு.
கொஞ்சம் நேரம் தனியாக இருந்தால் குற்ற உணர்வு.
சோர்வாக இருந்தால் குற்ற உணர்வு.
கோபப்பட்டுவிட்டால் குற்ற உணர்வு.
தனக்காக ஏதாவது வாங்கினால்கூட சில நேரங்களில் குற்ற உணர்வு.
தாய்மை என்பது தன்னையே முழுவதுமாக அழித்துக் கொள்வதற்கான பெயர் அல்ல.
அவள் உம்மாவாக இருப்பதற்கு முன்பும் ஒரு இளம் பெண்ணாக இருந்தாள்.
அவளுக்கும் பிடித்த பாடல்கள் இருந்தன.
நண்பிகள் இருந்தார்கள்.
நீண்ட தூக்கம் இருந்தது.
சிறிய சிறிய கனவுகள் இருந்தன.
சுதந்திரமாக வெளியே சென்று வரக்கூடிய நாட்கள் இருந்தன.
குழந்தை பிறந்ததால் அந்தப் பெண் மறைந்துவிடவில்லை.
அவள் இன்னும் அவளுக்குள் உயிரோடுதான் இருக்கிறாள்.
சில நேரங்களில் மிகவும் சோர்ந்துபோய், என்னையும் யாராவது கொஞ்சம் பார்த்துக் கொள்ள மாட்டார்களா என்று அமைதியாகக் காத்திருக்கிறாள்.
அதனால்தான் ஒரு தாய் எனக்கு கொஞ்சம் ஓய்வு வேண்டும் என்று சொன்னால் அவளுக்கு அறிவுரை சொல்லாதீர்கள்.
அவளுடைய பொறுமையை சோதிக்காதீர்கள்.
முடிந்தால் குழந்தையை கொஞ்ச நேரம் நீங்கள் தூக்கிக் கொள்ளுங்கள்.
அவள் குடிப்பதற்குள் ஆறிப்போகும் பால் தேநீரை ஒருநாளாவது சூடாகக் குடிக்க விடுங்கள்.
அறைக்கதவை மூடிக்கொண்டு இரண்டு மணி நேரம் அவளை நிம்மதியாகத் தூங்க விடுங்கள்.
அவளிடம், நீ ஓய்வெடு, இங்கே இருப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லுங்கள்.
ஒருவேளை அந்த சில வார்த்தைகள்தான் அவள் நீண்ட நாட்களாகக் கேட்க விரும்பிய மிக அழகான அன்பாக இருக்கலாம்.
ஏனென்றால் எல்லோருக்கும் உம்மாவாக இருக்கும் ஒரு பெண்ணுக்கும் சில நாட்களில்,
அவளை சாப்பிட்டாயா என்று அக்கறையோடு கேட்க,
அவள் சோர்வைக் கவனிக்க,
அவள் அழும்போது அருகில் அமர்ந்து ஆறுதல் சொல்ல,
அவளுடைய சுமைகளில் சற்று பங்கெடுக்க,
ஒரு தாயைப் போன்ற பாசமும் அரவணைப்பும் அவளுக்கும் தேவைப்படுகிறது.
குழந்தையை மட்டும் கவனிக்காதீர்கள்.
அந்தக் குழந்தையை இரவும் பகலும் அயராது கவனித்துக் கொண்டிருக்கும் தாயையும் கொஞ்சம் கவனியுங்கள்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சமூகப் பார்வை
මවකගේ නිහඬ කැපවීම සහ ඇයගේ සැබෑ මානසික ලෝකය පිළිබඳ සම්පූර්ණ සටහන
නිවසක සියලු දෙනා නිදාගත් පසුවත් සමහර දිනවල එක් අයෙක් පමණක් අවදියෙන් සිටී.
නිදා සිටින දරුවාගේ සුන්දරත්වය දෙස බලමින් ඇය දරුවාගේ රෙදි පෙරවනය සකසයි.
හෙට දිනයේ කුමක් පිසීමට ඇත්දැයි ඇය කල්පනා කරයි.
සේදිය යුතු ඇඳුම් ඇයට සිහිපත් වේ.
දරුවන්ගේ පාසල් අවශ්යතා එකිනෙක මතක් වේ.
පසුදා උදෑසන කීයට අවදි විය යුතුදැයි ඇය ගණනය කරයි.
ඇය අන් කිසිවෙකු නොව, අපගේ අම්මාය.
ඇයගේ සිරුර යහන මත තිබුණද, ඇයගේ මනස තවමත් නොනවත්වා වැඩ කරයි.
එබැවින් සමහර උදෑසනක මට අමාරුයි, මට හරිම මහන්සියි යනුවෙන් ඇය පැවසුවහොත්, එම වචන ඇසූ පමණින් ඇය කම්මැලි මවකැයි නොසිතන්න.
ඇය ඔබ නිසා වෙහෙසට පත්ව නැත.
ඇය දරුවා නිසා වෙහෙසට පත්ව නැත.
නිවසේ සැමවිටම සියලු දෙනාටම අවශ්ය පුද්ගලයා බවට නොකඩවා පත්ව සිටීම නිසා ඇය මානසිකව සහ කායිකව වෙහෙසට පත්ව සිටී.
එක් දරුවෙක් අම්මා යැයි අඬගසයි.
තවත් අයෙකු කෑම සූදානම්දැයි අසයි.
දුරකථනය නාද වේ.
ගෙදර දොර වැඩ අවසන් නොවේ.
එයට අමතරව රැකියාවට යන මවක් නම්, ඇය වෙනුවෙන් තවත් වෙනම වගකීම් ලෝකයක් බලා සිටී.
මේ සියල්ල මැද ඇයගේ මනස පමණක් සෙමින්, මටත් මගේම කියා පුංචි කාලයක් අවශ්යයි කියා ඉල්ලා සිටිය හැක.
නමුත් බොහෝ දිනවල එම හඬට සවන් දීමට තරම් ඇයට ඉඩක් නැත.
මන්ද මවක් වූ පසු කාන්තාවකට වරදකාරී හැඟීමක් ඉතා පහසුවෙන් සමාජය මඟින් උගන්වනු ලබයි.
දරුවා තබා පිටතට ගියහොත් වරදකාරී හැඟීමක් ඇති වේ.
තමන් වෙනුවෙන් සුළු මොහොතක් වෙන් කරගතහොත් වරදකාරී හැඟීමකි.
වෙහෙසක් දැනුණද වරදකාරී හැඟීමකි.
කේන්ති ගියහොත් වරදකාරී හැඟීමකි.
තමන් වෙනුවෙන් යමක් මිලදී ගත්තද වරදකාරී හැඟීමක් ඇති වේ.
මාතෘත්වය යනු තමන්ගේ මුළු පැවැත්මම සම්පූර්ණයෙන්ම විනාශ කරගැනීම නොවේ.
ඇය මවක් වීමට පෙර සුන්දර යුවතියකි.
ඇයටද කැමති ගීත තිබුණි.
යෙහෙළියන් සිටියාය.
දීර්ඝ නිදහස් නින්දක් තිබුණි.
පුංචි පුංචි හීන තිබුණි.
තනිවම නිදහසේ ඇවිද ගිය දින තිබුණි.
දරුවෙකු උපන් පමණින් ඒ යුවතිය ඇය තුළින් නැතිවී ගොස් නැත.
ඇය තවමත් ඇය තුළම ජීවත් වේ.
සමහර අවස්ථාවල දැඩි ලෙස වෙහෙසට පත්ව, මාවත් කවුරුන් හෝ මදක් බලාගන්නේ නම් කෙතරම් අගනේදැයි ඇය නිහඬව බලා සිටී.
එබැවින් මවක් මට මදක් විවේක අවශ්යයි කියා පැවසුවහොත් ඇයට උපදෙස් දීමට නොයන්න.
ඇයගේ ඉවසීම පරීක්ෂා නොකරන්න.
හැකිනම් සුළු මොහොතක් දරුවා ඔබේ තුරුළට ගන්න.
ඇය පානය කිරීමට පෙර නිවී යන කිරි තේ එක හෝ එක දිනක රස්නය පිටින් බීමට ඇයට ඉඩ දෙන්න.
කාමරයේ දොර වසාගෙන පැය දෙකක්වත් ඇයට නිදහසේ නිදාගන්නට ඉඩ සලසන්න.
ඇය වෙත ගොස්, ඔයා විවේක ගන්න, මෙතන තියෙන වැඩ මම බලාගන්නම් යනුවෙන් පවසන්න.
ඇය බොහෝ කලක සිට බලාපොරොත්තු වූ ආදරණීයම සහනය ඒ වචන කිහිපය විය හැකිය.
මන්ද සියලු දෙනාටම රැකවරණය දෙන මවකටද, සමහර දිනවල ඇය කෑවාදැයි ආදරයෙන් විමසන්නට, ඇයගේ වෙහෙස තේරුම් ගන්නට, ඇය හඬන විට ළඟින් හිඳ සනසන්නට, ඇයගේ බර සැහැල්ලු කරන්නට මවකගේ වැනි රැකවරණයක් සහ ආදරයක් අවශ්ය වේ.
දරුවා පමණක් රැකබලා නොගන්න.
ඒ දරුවා දිවා රෑ නොබලා රැකබලා ගන්නා මව දෙසද ආදරයෙන් සහ කරුණාවෙන් බලන්න.
කේ ආර් ටීවී නෙට්වර්ක් - සමාජයීය විශේෂාංග
The Silent Exhaustion and Mental Load of a Mother: A Comprehensive Perspective
In every home, long after everyone has fallen asleep, there is often one person who remains awake.
She watches over her sleeping child and gently straightens the blanket.
She mentally plans what meals to prepare tomorrow.
The pile of unwashed clothes comes to mind.
The items required for the children's school day are quietly accounted for.
She calculates the exact hour she needs to wake up in the morning.
She is the mother.
Her body rests in bed, but her mind continues to work relentlessly.
That is why on certain mornings she might whisper that she cannot keep going, that she is simply too exhausted.
When those words are spoken, never mistake her for a negligent or uncaring mother.
She is not exhausted by you.
She is not exhausted by her child.
She is profoundly worn down by the continuous weight of being the indispensable person everyone relies on, every single minute of the day.
One child calls for her.
Someone asks where the food is.
The telephone rings.
The endless household duties never seem to settle.
If she is a working mother, an entirely separate world of professional demands awaits her.
Amidst all this noise, her inner self may softly whisper, "I just need a little time for myself."
Yet, on most days, she silences that inner plea.
This happens because the moment a woman becomes a mother, society easily burdens her with guilt.
Guilt if she steps outside without her child.
Guilt if she takes a few moments of solitude.
Guilt if she feels tired.
Guilt if she loses her patience.
Guilt even when she buys something purely for herself.
Motherhood is not meant to be the complete erasure of one's identity.
Before she became a mother, she was an individual with her own life.
She had songs she loved to listen to.
She had friends to share laughter with.
She had uninterrupted sleep.
She held simple, beautiful personal dreams.
She had days of careless freedom.
The birth of a child does not erase that person.
She still exists beneath the surface.
At times, feeling deeply spent, she quietly wonders if someone will step forward to care for her too.
Therefore, when a mother expresses that she needs rest, do not respond with unsolicited advice.
Do not test the boundaries of her endurance.
If you can, hold the child for a little while.
Allow her to enjoy a warm cup of tea before it grows cold, even if just for one morning.
Let her close the door and sleep uninterrupted for a couple of hours.
Walk up to her and say, "Take a rest, I will take care of things here."
Those few words might be the most meaningful form of love and reassurance she has longed to hear.
Because even the woman who mothers everyone else needs mothering on certain days.
She needs someone to ask if she has eaten, to notice her weariness, to sit beside her in quiet comfort, and to shoulder a portion of her heavy load.
Do not focus solely on the well-being of the child.
Remember to care with equal tenderness for the mother who watches over that child day and night.
KR TV Network - Social Features

Comments