Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

உள்ளூராட்சி வாரத்தில் காத்தான்குடி நகர சபையின் பணிகளை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர்களுக்கு விசேட கௌரவிப்பு: நகர முதல்வருக்கு ஊடகவியலாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி














உள்ளூராட்சி வாரத்தில் காத்தான்குடி நகர சபையின் பணிகளை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர்களுக்கு விசேட கௌரவிப்பு: நகர முதல்வருக்கு ஊடகவியலாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி வார நிகழ்வுகளின் போது காத்தான்குடி நகர சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று, நகர சபையின் செயற்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் பங்களிப்பு வழங்கிய சிறந்த ஊடகவியலாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு விசேட கௌரவம் வழங்கப்பட்டது. காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் உள்ளூராட்சி வார நிறைவு விழாவை முன்னிட்டு நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்விலேயே இந்த கௌரவிப்பு முன்னெடுக்கப்பட்டது. உள்ளூராட்சி வாரத்தில் ஊடகவியலாளர்களின் தன்னலமற்ற மக்கள் சேவையையும் அர்ப்பணிப்பையும் உரிய முறையில் அங்கீகரித்து கௌரவித்தமைக்காக, காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர், நகர சபை செயலாளர், கணக்காளர் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் ஊடகவியலாளர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

கே ஆர் டி வி நெட்வொர்க் (KR TV Network) - உள்நாட்டுச் செய்தி / ஊடகம் மற்றும் உள்ளூராட்சி விவகாரம்

පළාත් පාලන සතියේදී කාත්තන්කුඩි නගර සභාවේ මෙහෙවර ජනතාව අතරට ගෙන ගිය මාධ්‍යවේදීන්ට විශේෂ උපහාර: නගරාධිපතිවරයාට මාධ්‍යවේදීන්ගෙන් හෘදයාංගම ස්තූතිය

දිවයින පුරා ක්‍රියාත්මක කෙරුණු පළාත් පාලන සතිය තුළ කාත්තන්කුඩි නගර සභාව මඟින් සංවිධානය කරන ලද විවිධ ජනතා සුභසාධන සහ සංවර්ධන වැඩසටහන් ජනමාධ්‍ය ඔස්සේ මහජනතාව අතරට රැගෙන යමින් නගර සභාවේ මෙහෙවරට සුවිශේෂී දායකත්වයක් ලබා දුන් ප්‍රාදේශීය මාධ්‍යවේදීන් තෝරාගෙන ඔවුන් වෙත විශේෂ ඇගයීම් සහ උපහාර පිරිනැමීම සිදු කෙරිණි. කාත්තන්කුඩි හිස්බුල්ලා සංස්කෘතික ශාලාවේදී පළාත් පාලන සතියේ සමාප්ති උළෙල නිමිත්තෙන් නගරාධිපති එස්.එච්.එම්. අස්ෆර්ගේ ප්‍රධානත්වයෙන් පැවති උත්සවයකදී මෙම උපහාරය පිරිනමන ලදී. පළාත් පාලන සතිය තුළ මාධ්‍යවේදීන්ගේ වෘත්තීය කැපවීම සහ මහජන මෙහෙවර නිසි ලෙස අගය කරමින් මෙලෙස ගෞරව දැක්වීම පිළිබඳව, කාත්තන්කුඩි නගරාධිපති එස්.එච්.එම්. අස්ෆර්, නගර සභා ලේකම්, ප්‍රධාන ගණකාධිකාරී ඇතුළු සියලුම නිලධාරීන් වෙත මාධ්‍යවේදීන් සිය හෘදයාංගම කෘතඥතාව පළ කළහ.

කේ ආර් ටී වී නෙට්වර්ක් (KR TV Network) - දේශීය පුවත් / මාධ්‍ය සහ ප්‍රජා සබඳතා

Journalists Highlighting Kattankudy Urban Council's Initiatives During Local Government Week Honoured: Media Fraternity Extends Sincere Gratitude to Chairman

Prominent regional journalists who actively covered and publicized the civic welfare initiatives, urban development projects, and public services carried out by the Kattankudy Urban Council during the nationwide Local Government Week were formally recognized and bestowed with special honours. The felicitation took place at the Local Government Week concluding ceremony held at the Hizbullah Cultural Hall in Kattankudy, presided over by Urban Council Chairman S.H.M. Asfar JP. In recognition of this thoughtful gesture valuing their independent service and civic contributions throughout Local Government Week, representatives of the media fraternity extended their profound gratitude to Kattankudy Urban Council Chairman S.H.M. Asfar, the Council Secretary, the Chief Accountant, and all administrative officials.

KR TV Network - Local News / Media and Local Governance Affairs

Comments