சுரேஷ் ஸலே சமர்ப்பித்த ஆவணம் போலி என நீதிமன்றில் சுட்டிக்காட்டல்: சர்ச்சை ஆவணத்தின் பின்னணி அம்பலம்
சுரேஷ் ஸலே சமர்ப்பித்த ஆவணம் போலி என நீதிமன்றில் சுட்டிக்காட்டல்: சர்ச்சை ஆவணத்தின் பின்னணி அம்பலம்
முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் ஸலே தன்னை கைது செய்தமை சட்டவிரோதமானது எனவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் தெரிவித்து, தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவின் போது அவர் சமர்ப்பித்த ஆவணம் போலியானது என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தனது தரப்பு நியாயங்களை நிரூபிப்பதற்காக ஜயகி டி அல்விஸ் ஆணைக்குழுவின் அறிக்கை என்ற பெயரில் அவர் ஒரு ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். எனினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரை எந்தவொரு இடத்திலும் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், அத்தகைய பெயரில் உத்தியோகபூர்வ ஆவணம் எதுவும் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக உதய கம்மன்பிலவினால் தபாலில் கிடைக்கப்பெற்றதாகக் கூறி பகிரங்கப்படுத்தப்பட்ட ஒரு கட்டுரையையே, உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் (Authentication) ஏதுமின்றி ஆவணமாக ஸலே சமர்ப்பித்துள்ளதாக சட்டத்தரணி சுரேன் பெரேரா நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
සුරේෂ් සලේ අධිකරණයට ඉදිරිපත් කළ ලේඛනය ව්යාජ එකක් බවට අද අධිකරණයේදී කරුණු අනාවරණය වෙයි
තමන් අත්අඩංගුවට ගැනීම නීතිවිරෝධී බවත්, ද්වේෂසහගත ලෙස සිදුකළ එම අත්අඩංගුවට ගැනීමෙන් තමන් නිදහස් කරන ලෙසත් ඉල්ලා හිටපු බුද්ධි අංශ ප්රධානී සුරේෂ් සලේ විසින් ගොනු කරන ලද රිට් පෙත්සමට අදාළව ඔහු ඉදිරිපත් කළ ලේඛනයක් ව්යාජ එකක් බව අද අධිකරණය හමුවේ පෙන්වා දෙනු ලැබිණි. සිය තර්කයන් සනාථ කිරීම සඳහා ඔහු විසින් "ජයකි ද අල්විස් කොමිෂන් සභා වාර්තාව" නමින් ලේඛනයක් ඉදිරිපත් කර තිබුණි. පාස්කු ප්රහාරය සම්බන්ධයෙන් හිටපු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ විසින් පත්කරන ලද මෙම කමිටුවේ වාර්තාව කිසිදු ස්ථානයක නිල වශයෙන් භාරදී නොමැති අතර, එවැනි නිල වාර්තාවක් නොපවතින බවද මෙහිදී සඳහන් විය. මීට පෙර උදය ගම්මන්පිල විසින් තැපෑලෙන් ලැබුණු බව කියමින් ප්රසිද්ධියට පත්කළ ලිපියක්, කිසිදු නිල සහතික කිරීමකින් (Authentication) තොරව හිස් ලිපියක් ලෙස මෙලෙස ඉදිරිපත් කර ඇති බව නීතිඥ සුරේන් පෙරේරා මහතා අධිකරණය හමුවේ කරුණු දක්වමින් පෙන්වා දුන්නේය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Document Tendered by Suresh Sallay Claimed as Unauthenticated in Court During Writ Petition Hearing
During the hearing of a writ petition filed by former intelligence chief Suresh Sallay seeking his release and challenging his arrest, counsel raised serious objections regarding a document submitted as the purported "Jayaki de Alvis Committee Report". Sallay's legal team filed the material in support of their pleadings; however, it was highlighted before the court that the said committee, appointed during the tenure of former President Gotabaya Rajapaksa, never formally tendered an official final report through authorized administrative channels, rendering such an official document non-existent in state records. Attorney Suren Perera pointed out to the bench that the submitted filing was merely an unverified paper previously made public by politician Udaya Gammanpila, lacking requisite legal authentication or official certification as mandated when tendering official state inquiries before a court of law.
KR TV Network - Local News

Comments