இந்தியாவில் சாதனை படைத்த சீ தமிழ் மகாநடிகை காரைதீவு நிவேதிகா இலங்கை வருகை: வவுனியாவில் மாபெரும் கௌரவிப்பு
இந்தியாவில் சாதனை படைத்த சீ தமிழ் மகாநடிகை காரைதீவு நிவேதிகா இலங்கை வருகை: வவுனியாவில் மாபெரும் கௌரவிப்பு
இந்தியாவின் பிரபல சீ தமிழ் (Zee Tamil) தொலைக்காட்சியின் மகாநடிகை பிரமாண்ட போட்டி நிகழ்வில் இலங்கையின் காரைதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி நிவேதிகா இராசையா இரண்டாம் இடத்தைப் (2nd Runner-up) பெற்று சாதனை படைத்துள்ளார்.
சுவாமி விபுலானந்த அடிகளார் அவதரித்த பெருமைமிகு காரைதீவு மண்ணைச் சேர்ந்தவரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையாவின் மகளுமான 26 வயதுடைய நிவேதிகா இராசையா, இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்ற கடுமையான சுற்றுப் போட்டிகளில் தமது அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி சர்வதேச ரீதியில் பாராட்டைப் பெற்றுள்ளார். முதற் சுற்றில் 18 பேருடன் போட்டியிட்டு, தொடர் சுற்றுகளைக் கடந்து இறுதியாக இரண்டாம் இடத்தைப் பெற்று தாயகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். இவர் ஐபிசி தமிழ் (IBC Tamil) தயாரிப்பில் விரைவில் வெளியாகவுள்ள போராட்டம் திரைப்படத்தின் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
போட்டிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து தமது குடும்பத்தினருடன் நாடு திரும்பியுள்ள நிவேதிகா இராசையாவை கௌரவிக்கும் மாபெரும் பாராட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா மாநகர சபை நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அவர் கல்வி பயின்ற வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் வவுனியா மக்கள் ஒன்றிணைந்து தமிழறிஞர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இந்த கௌரவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
செய்தியாளர்: வி.ரி. சகாதேவராஜா
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்ளூர் கலைச் செய்தி
ඉන්දියාවේ සී ටැමිල් මහානඩිගෛ තරගාවලිය ජයගත් නිවේදිකා ශ්රී ලංකාවට: වවුනියාවේදී උපහාර උළෙලක්
ඉන්දියාවේ ප්රකට සී ටැමිල් (Zee Tamil) රූපවාහිනී නාලිකාව මඟින් සංවිධානය කරන ලද මහානඩිගෛ දැවැන්ත රංගන තරගාවලියේ දෙවන අනුශූරතාව දිනාගැනීමට නැගෙනහිර කාරෙයිතිවු ප්රදේශයේ නිවේදිකා රාසයියා මෙනවිය සමත්ව තිබේ.
කාරෙයිතිවු ප්රාදේශීය සභාවේ හිටපු සභාපති චෙල්ලයියා රාසයියා මහතාගේ 26 හැවිරිදි දියණිය වන නිවේදිකා රාසයියා, පසුගිය සිව්මස මුළුල්ලේ ඉන්දියාවේ පැවති දැඩි තරග වට රැසකට මුහුණ දෙමින් සිය විශිෂ්ට රංගන කුසලතාව ජාත්යන්තර මට්ටමින් ප්රදර්ශනය කළාය. තරගකරුවන් 18 දෙනෙකු සමඟ ආරම්භ වූ තරගාවලියේ අවසන් වටය දක්වා පැමිණි ඇය දෙවන අනුශූරතාව හිමිකර ගනිමින් මව්බිමට මහත් කීර්තියක් අත්කර දුන්නාය. ඇය ඉදිරියේදී තිරගත වීමට නියමිත පෝරාට්ටම් දෙමළ චිත්රපටයේ ප්රධාන නිළිය ලෙසද රංගනයෙන් දායක වී ඇත.
ජයග්රහණයෙන් පසු සිය පවුලේ සාමාජිකයන් සමඟ මෙරටට පැමිණි ඇයව ඇගයීමේ විශේෂ උපහාර උළෙලක් ලබන සෙනසුරාදා පෙරවරු 10 ට වවුනියාව මහ නගර සභා ශාලාවේදී පැවැත්වීමට නියමිතයි. ඇය අධ්යාපනය ලැබූ වවුනියාව සෛවප්රකාශ කාන්තා විද්යාලයේ ආදි ශිෂ්යාවන් සහ වවුනියාවේ ජනතාව එක්ව දෙමළ විද්වත් ආචාර්ය තමිල්මනී අගළංගන්ගේ ප්රධානත්වයෙන් මෙම උත්සවය සංවිධානය කර ඇත.
වාර්තාකරු: වී.ටී. සහදේවරාජා
කේ ආර් ටීවී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Zee Tamil Mahanadigan Finalist Nivedhika Rasaiya Returns to Sri Lanka: Grand Felicitation in Vavuniya
Nivedhika Rasaiya from Karaitivu, Eastern Province, has secured the second runner-up position in the prestigious Mahanadigan reality talent show hosted by Indian television network Zee Tamil.
The 26-year-old artist, daughter of former Karaitivu Pradeshiya Sabha Chairman Chelliah Rasaiya, contested alongside 18 preliminary participants over four consecutive months, earning international acclaim for her acting finesse. In addition to her reality television success, Rasaiya plays the lead role in the upcoming feature film Porattam produced by IBC Tamil.
Having returned to Sri Lanka alongside her family, a civic felicitation ceremony is scheduled to take place this coming Saturday at 10:00 AM at the Vavuniya Municipal Council Hall. Organized jointly by the alumni of her alma mater, Vavuniya Saivaprakasa Ladies' College, and the residents of Vavuniya, the event will be presided over by Tamil scholar Dr. Tamilmani Agalangan.
Reporter: V.T. Sahadevaraja
KR TV Network - Local Arts & Entertainment







Comments