ருஹுணு குமாரி புகையிரதத்தில் மாற்றுத்திறனாளி பிள்ளையுடன் தவித்த தாய்க்கு உதவிய மனிதநேயப் பயணி
ருஹுணு குமாரி புகையிரதத்தில் மாற்றுத்திறனாளி பிள்ளையுடன் தவித்த தாய்க்கு உதவிய மனிதநேயப் பயணி
மருதானையிலிருந்து பயணித்த ருஹுணு குமாரி புகையிரதத்தில் மாற்றுத்திறனாளிப் பிள்ளையுடன் பயணித்த தாயொருவருக்கு சக ஆண் பயணி ஒருவர் தனது ஆசனத்தை விட்டுக் கொடுத்து உதவிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தனது மாற்றுத்திறனாளிப் பிள்ளையுடன் மூன்றாம் வகுப்புக்கான பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்ட குறித்த தாய், வகுப்புகள் பற்றிய போதிய தெளிவின்மை காரணமாகத் தவறுதலாக இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஏறியுள்ளார். பயணத்தின் போது பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் அதனைச் சோதனையிட்ட வேளையில், அவர் மூன்றாம் வகுப்புப் பயணச்சீட்டு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதன்போது பிள்ளையை அங்கு விட்டுவிட்டு தாயை மாத்திரம் மூன்றாம் வகுப்புப் பெட்டிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தன் பிள்ளையைத் தனியாக விட்டுச்செல்ல மனமில்லாமல் அந்தத் தாய் செய்வதறியாது நின்றுகொண்டே பயணத்தைத் தொடர்ந்த வேளையில், அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் நிலைமையை உணர்ந்து உடனடியாக முன்வந்துள்ளார். அவர் அந்தத் தாயிடம் இருந்த மூன்றாம் வகுப்புப் பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு, தமக்கான இரண்டாம் வகுப்புப் பயணச்சீட்டையும் இருக்கையையும் அத்தாயிடம் வழங்கிவிட்டு, தாம் மூன்றாம் வகுப்புப் பெட்டிக்குச் சென்று பயணத்தை மேற்கொண்டு மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - மனிதநேயப் பகிர்வு
රුහුණු කුමාරි දුම්රියේදී ආබාධිත දරුවා සමඟ අසරණ වූ මවකට පිහිට වූ මනුස්සකම
මරදාන සිට ධාවනය වූ රුහුණු කුමාරි දුම්රියේදී විශේෂ අවශ්යතා සහිත සිය දරුවා සමඟ ගමන් ගත් මවකට අසුනක් පරිත්යාග කරමින් සහය වූ මගියෙකුගේ උදාර ක්රියාවක් පිළිබඳ සංවේදී පුවතක් වාර්තා වේ.
තුන්වන පන්තියේ ප්රවේශපත්රයක් ලබාගෙන සිටි මෙම මව, දුම්රියේ පන්ති පිළිබඳ නිසි දැනුවත්භාවයක් නොමැතිකම හේතුවෙන් අත්වැරදීමකින් දෙවන පන්තියේ මැදිරියකට ගොඩවී තිබේ. ප්රවේශපත්ර පරීක්ෂකවරුන් පැමිණ පරීක්ෂා කිරීමේදී ඇය සතුව ඇත්තේ තුන්වන පන්තියේ ප්රවේශපත්රයක් බව අනාවරණය වී ඇති අතර, එහිදී දරුවා තබා මවට පමණක් තුන්වන පන්තියට යන ලෙස දැනුම් දී ඇති බව පැවසේ.
තම දරුවා තනිකර දමා යාමට නොහැකිව එම මව අසරණව සිටගෙන ගමන් කරමින් සිටියදී, අසල අසුනක සිටි මගියෙකු මේ බව දැක වහාම ඉදිරිපත්ව ඇත. ඔහු එම මව සතුව තිබූ තුන්වන පන්තියේ ප්රවේශපත්රය තමන් වෙත ලබාගෙන, තමාගේ දෙවන පන්තියේ ප්රවේශපත්රය සහ අසුන එම මවට ලබාදී, තමන් තුන්වන පන්තියේ මැදිරිය වෙත ගොස් ගමන් කරමින් විශිෂ්ට මානුෂීය ගුණාංගයක් ප්රදර්ශනය කර තිබේ.
කේ ආර් ටීවී නෙට්වර්ක් - මානුෂීය පුවත්
Heartwarming Act of Humanity on Ruhunu Kumari Train Assists Mother and Differently-Abled Child
A passenger on board the Ruhunu Kumari train travelling from Maradana has won wide praise for swapping his travel class to assist a mother travelling with her differently-abled child.
The mother, who held a third-class ticket, had mistakenly boarded a second-class carriage without understanding the segregation of travel classes. When ticket examiners conducted their routine inspection and identified the disparity, the mother was reportedly asked to leave the child in the compartment and move to the third-class compartment.
Unable to leave her vulnerable child alone, the distraught mother began making the journey standing beside the seat. Observing her distress, a fellow commuter seated nearby stepped forward and exchanged his second-class ticket and seat with the mother, choosing instead to travel in the third-class carriage for the remainder of the journey.
KR TV Network - Human Interest Story

Comments